Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
இன்று சிவப்பு நிற ஆடையை அணிய வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார்?
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
வீட்டில் உள்ள பிள்ளைகளின் செயல்பாடுகளால் லாபம் அடைவீர்கள். உங்களுடைய பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்பபு உண்டாகும். அதனால் மனம் மகிழ்வீர்கள். தொழிலில் புதிய யுக்திகளைப் பரிசோதித்துப் பார்ப்பீர்கள். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களின் ஆற்றல் அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தரப்போவது மேற்கு திசையும் 9 ஆம் எண்ணும் சிவப்பு நிறமும் ஆகும்.

ரிஷபம்
வீடு, ரியல் எஸ்டேட் தொடர்பான தொழிலில் நல்ல பலன்களை தரும். வாகனப் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.மனதில் உண்டாகும். பலவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். வழக்குகள் மற்றும் தீர்ப்புகளில் சரியான தீர்ப்புக்கு கொஞ்சம் கால தாமதம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரப்போகும் திசை வடக்கு. அதிர்ஷ்ட எண்ணாக 4 ம் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்
மாணவர்கள் வழிகளில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும். புதிய பல முயற்சிகளை மேற்கொள்ள நினைப்பீர்கள். அதில் சிறிது கால தாமதமாகும். மனதில் இதுவரை நினைத்திருந்த செயல்திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். புதுமையான பல யுக்திகளை முயற்சி செய்வீர்கள். உங்களுடைய திறமையான பேச்சுக்களின் மூலம் புகழ் பெறுவீர்கள். உங்களுடைய இன்றைய அதிர்ஷ்ட எண் 8, அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட நிறம் நீலநிறம்.

கடகம்
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அனுசரித்து செல்ல வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பேசும்போது கவனமாக இருங்கள். உங்களுடைய நட்பு வட்டாரத்தில் புதிய நபர்கள் சேருவார்கள். மாணவர்களுடைய கல்வியில் சாதகமான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். இன்றைய அதிர்ஷ்ட எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்
புதிய எண்ணங்களின் வாயிலாகவும், உங்களுடைய முயற்சியாலும் பொருள் சேர்க்கை உண்டாகும். பொது இடங்களில் உங்களுக்கு ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். பணியில் எடுத்த காரியத்தை சரியான நேரத்தில் சரியாக செய்து முடிப்பீர்கள். அதனால் உங்களுடைய செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்ட திசையாக மேற்கும் அதிர்ஷ்ட எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட எண்ணாக வெள்ளை நிறமும் இருக்கிறது.

கன்னி
சுற்றுலா செல்வதற்காக செயல் திட்டமிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். எந்த செயல்பாடுகளை மேற்கொண்டாலும் கவனமாக இருங்கள். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். உங்களுடைய பேச்சுத் திறமையால் லாபம் உண்டாகும். புதிய நபர்கள் மூலம் தனலாபம் அடைவீர்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமாகவும் இருக்கும்.

துலாம்
பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்த தேவையற்ற குழப்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். சமூக சேவையில், ஈடுபடுவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகளில் எண்ணயி பலன் கிடைக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பும் இருக்கும்.

விருச்சிகம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் சுபச் செய்திகள் உண்டாகும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் லாபம் அதிகரிக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு ஏற்பட்ட பணச்சிக்கல்கள் நீங்கும். தலைமைப் பதவியில், உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
இறைப் பணிகளால் கீர்த்தி உண்டாகும். நிர்வாகத்தில் மாற்றம் உண்டாகும். தலைமைப் பதவிக்கான வாய்ப்புகள் அமையும். இசைக் கலைஞர்களுக்கு சாதகமான நிலை அமையும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். சக பணியாளர்களால் தொழிலில் சாதகமான சூழல் ஏற்படும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக இருக்கக்கூடிய எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் அமையும்.

மகரம்
அலைச்சல்களால் வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். பொருள்களைக் கையாளும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழிலில் பொருள் தேக்கநிலை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கப் போகிறது.

கும்பம்
வேதம் சம்பந்தப்பட்ட கற்றலில் ஈடுபட்டு, ஞானத்தேடலில் ஈடுபடுவீர்கள். தர்ம ஸ்தாபனங்களின் உதவிகளால் நிர்வாகிகளுக்கு பெருமை கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கி, அமைதி உண்டாகும். எதிர்பாராத சுபச் செய்திகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கூட்டாளிகளுடன் இணைந்து செய்யும் புதிய செயலால், தனலாபம் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கிறது.

மீனம்
வியாபாரிகளிடம் பேசுகின்றபோது, கவனமாகப் பேச வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டாவதற்கான சூழல் உண்டாகும். பெரியோர்களின் உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி, தெளிவு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளால் லாபம் உண்டாகும். மனைகளில் வீடு கட்டும் பணிகளைத் தொடங்குவீர்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
