Latest Updates
-
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...!
இந்த மூனு ராசிக்காரங்களும் சண்டே தானேன்னு வீட்டைவிட்டு வெளில போய்டாதீங்க...
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
பிள்ளைகளால் சுப விரயம் உண்டாகும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களால் லாபம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல்திட்டம் தீட்டுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமான சுப விரயங்கள் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்.

ரிஷபம்
மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலைப்பளு அதிகமாகும். எதிர்பார்த்த வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு

மிதுனம்
கூட்டுத் தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செய்திகள் வந்தடையும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். என்னதான் நல்ல நாளாக இருந்தாலும் பர்ஸ் கரைந்தால் பரவாயில்லையா?... அதனால்இன்று வெளியில் செல்வதை தவிர்த்தால் பர்ஸை பாதுகாக்கலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு,அதிர்ஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்.

கடகம்
சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் நிதானத்துடன் செயல்படவும். பயணங்களை மேற்கொள்வீர்கள். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. இன்று பயணங்களைத் தவிர்த்தால் விரயச் செலவிலிருந்து தப்பிக்கலாம். நஷ்டம் ஏற்படாமல்இருக்க முடிந்தவரை பயணத்தை தவிர்ப்பது நல்லது. உங்களுடைய அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்.

சிம்மம்
எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு லாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 4
அதிர்ஷ்ட நிறம் - ஊதா நிறம்

கன்னி
சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். புாட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கால்நடைகளால் லாபம் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபட முயற்சிகள் மேற்கொள்வீர்கள். தாயின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 8
அதிர்ஷ்ட நிறம் - கருப்பு நிறம்

துலாம்
வாகனப் பயணங்களால் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் வரும். பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான நாள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 7, அதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்

விருச்சிகம்
பூர்வீக சொத்துக்களால் சுப விரயம் உண்டாகும். நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். புத்திரர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். விவாதங்களைத் தவிர்க்கவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 3
அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை

தனுசு
உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். வியாபாரம் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும். முடிந்தவரை வீட்டை விட்டு வெளியில் போகாமல் இருந்தால் தேவையில்லாத செலவுகளை தவிர்க்க முடியும். பெரும் கடனிலிருந்து தப்பிக்க முடியும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 2, அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை.

மகரம்
புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆகாய மார்க்க பயணங்களால் தொழில் முறையில் உள்ளவர்குள் புகழப்படுவார்கள். சுயதொழில் புரிபவர்கள் புதிய யுக்திகளை கையாண்டு லாபம் அடைவார்கள். இளைய சகோதரர்களால் சுப விரயம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 1, அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்

கும்பம்
பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். அறச்செயல்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் வரும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 2, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

மீனம்
உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். வெளிநாட்டுப் பயணங்களால் தனலாபம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருள்களை மீட்க முயற்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்கவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். இன்று உங்களுடைய
அதிர்ஷ்ட திசை - தென்மேற்கு, அதிர்ஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை



Click it and Unblock the Notifications











