For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று சாய்பாபாவின் அருளைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?

இன்று 12 ராசிகளில் யாருக்கு என்னென்ன விஷயங்கள் நடக்கப் போகின்றன என்று இங்கே பார்ப்போம்.

|

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.

12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். 12 ராசிக்காரர்களுக்கும் கிரகங்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் அது இருக்கும் இடத்தின் தாக்கத்தைப் பொறுத்தும் பலன்களைத் தரும். அந்த வகையில் இன்று வியாழக்கிழமை. யாருக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்

உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த சின்ன சின்ன மனக்கசப்புகள் நீங்கி, நெருக்கமும் ஒற்றுமையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு உங்களுடைய உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய வேண்டிய சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கப் போகிறது.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20

தேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தைத் தவிர்த்து கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். சக ஊழியர்களை கொஞசம் அனுசரித்துச் செல்லுங்கள். அடுத்தவருடைய குறைகளைச் சுட்டிக் காட்டுடுவதை முதலில் நிறுத்துங்கள். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்

மிதுனம்: 22 மே – 21 ஜூன்

நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிக தன வரவு ஏற்படும். நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். உங்களுடைய ஆடம்பரச் செலவுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அவர்களுடைய மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். நெருகு்கமான நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசும் வாய்ப்புகள் உண்டாகும். மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை

உடன் பிறந்த சகோதரருடைய வகைகளில் உங்களுக்கு ஆதரவுகள் பெருகும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். அதிகாரப் பொறுப்புகளில் இருக்கின்றவர்கள் சக ஊழியர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குங்கள். கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்

வியாபாரத்தின் மூலம் சில யுக்திகளைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள" உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களுடைய ஆதரவைப் பெறுவார்கள். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் உங்களுக்கு இருந்து வந்த சின்ன சின்ன மனக்கசப்புகள் தீரும். உங்களுக்கு தொழிலிலும் வாழ்ககையிலும் இருந்து வந்த தடைகளை எதிர்த்துப் போராடுவீர்கள். பயணங்களின் மூலம் மனம் திருப்தி அடைவீர்கள். பழைய கடன்களை திருப்பி செலுத்துவது குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்

பெற்றோர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் உங்களிடம் பணிபுரியும் வேலையாட்களால் உண்டான சின்ன சின்ன பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அவப்பெயர்கள் கூட வரலாம். கொஞ்சம் கவனமாக இருங்கள். மனதுக்குள் தோன்றும் புதிய எண்ணங்களை நடைமுறைப்படுத்துவதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாகத் துறையில் இருப்பவர்களுடைய முழு திறமையும் வெளிப்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆகாய நீலநிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்

புதிய நபர்களுடைய அறிமுகங்க்ள உங்களுக்கு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடைய எண்ணங்களை அறிந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் தன வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பாராட்டுக்கள் வந்து குவியும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்

இதுவரையிலும் தடைபட்டுக் கொண்டே இருந்த வேலைகளை மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, ஒரு தெளிவு பிறக்கும். அலுவலகத்தில் பிறருடைய வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. வெளியில் எடுத்துச் செல்லும் பொருள்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளமஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்

தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். உங்களுடைய திறமைக்கு ஏற்ப பாராட்டுக்களும் வந்து குவியும். வியாபாரத்தில் சில தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வாணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபமும் வாடிக்கையாளர் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி

உறவினர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாகனங்களில் பயணம் செய்கின்ற போது நிதானம் தேவை. வேலை செய்கின்ற இடத்தில் பிறருடைய அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். வியாபாரங்கள் சம்பந்தப்பட்ட கொடுக்கல் மற்றும் வாங்கலில் கொஞ்சம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி

நீங்கள் இதற்கு முன்னதாக திட்டமிட்ட பணிகளை விடாப்பிடியாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பீர்கள். எதிர்பாலம் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பரம்பரை சொத்துக்களினால் ஏற்பட்ட துன்பங்கள் குறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்

உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் நினைத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொது இடங்களில் உங்களுடைய பேச்சுக்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் அதிகமான ஆதரவு பெருகும். அடுத்தவர்கள் உங்களிடம் கேட்ட உதவிகளை செய்து கொடுப்பீர்கள். வீடு மற்றும் மனைகள் வாயிலாக எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Horoscope For Thursday 06 September 2018

Astro is playing an important role in Hinduism. People believe the actions of 12 planet, check out your daily horoscope for 6th September 2018.
Story first published: Wednesday, September 5, 2018, 19:08 [IST]
Desktop Bottom Promotion