இரண்டு குழந்தைகளின் தாய் உடற்கட்டு போட்டியின் சாம்பியன்! Wonder Women #14

Subscribe to Boldsky

இரண்டு குழந்தைகளின் தாயான திங்பைஜாம் சரிதா தேவி தன்னுடைய 30வது வயதில் நாட்டிலேயே முதன் முறையாக பெண்கள் உடற்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற சாதனையாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். அதோடு இவர் தொடர்ந்து மூன்றாண்டுகளாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

அதோடு பல்வேறு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று சாதனை படைத்திருக்கிறார். பெண் என்றால் நளினமாக அழகாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி பெண்மைக்கான அடையாளங்களாக இந்த சமூகம் கட்டமைத்து வைத்திருப்பவற்றை எல்லாம் உடைத்து பெண்ணால் இதையும் செய்திட முடியும் என்று சொல்லி நிரூபித்து காட்டியிருக்கிறார் சரிதா தேவி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வரவேற்பு :

வரவேற்பு :

மணிப்பூர் மாநிலத்தில் 1986 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி பிறந்திருக்கிறார் சரிதா தேவி, இங்கே விளையாட்டுப் போட்டிகளில் ஆண் பெண் என இருபாலரும் ஆர்வத்துடன் இருப்பார்கள். ஹோலிப் பண்டிகைக்கு முன்னால் விளையாட்டுப் போட்டி நடைபெறுவதில் பங்கேற்க பெரும் கூட்டமே காத்திருக்கும்.

சரிதாவிற்கு இயல்பிலேயே விளையாட்டுப் போட்டிகளின் மீது அதீத ஆர்வம் இருந்திருக்கிறது.

Image Courtesy

உடற்கட்டு :

உடற்கட்டு :

யாருக்கும் இல்லாத வகையில் ஆண்களைப் போல உடற்கட்டு போட்டியில் பெண்கள் பங்கேறக முடியுமா? நான் அதில் கலந்து கொள்ளலாமா என்று கேட்க ஆரம்பித்தார். தொடர்ந்து விடாப்பிடியாக உடற்பயிற்சியை செய்ய ஆரம்பித்தார்.

Image Courtesy

திருமணம் :

திருமணம் :

சரிதாவிற்கு போகிரோட் திங்பைஜாம் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு பிறகு தான் பெண்களும் இதனை செய்யலாம், அவர்களுக்கான போட்டி நடக்கிறது என்ற விவரம் தெரியவருகிறது. கணவர் தற்காப்பு பயிற்சியாளார், தற்காப்பு கலையில் தேசிய அளவில் பல்வேறு கோப்பைகளை கைப்பற்றியிருக்கிறார்.

Image Courtesy

குழந்தைகள் :

குழந்தைகள் :

கனவு ஒரு பக்கம் இருந்தாலும் திருமண வாழ்க்கையில் அவையெல்லாம் நினைத்துப் பார்க்க நேரமில்லை. சரிதாவிற்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. அதோடு உடல்நிலையிலும் சற்று முடக்கம் உண்டானது. உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார்.

Image Courtesy

 கணவர் வழிகாட்டுதல் :

கணவர் வழிகாட்டுதல் :

கணவரின் வழிகாட்டுதலின் பேரில் உடற்கட்டு மேம்படுத்த பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். இவரது ஆர்வத்தைக் கண்டு பிற பயிற்சியாளர்களும் பயிற்சியளிக்க முன் வந்தனர். கணவர் வீட்டினரும் பச்சைக் கொடு காட்ட பயிற்சியை தீவிரமாக்கினார் சரிதா.

Image Courtesy

வெற்றி மேல் வெற்றி :

வெற்றி மேல் வெற்றி :

ஊரில் நடைப்பெற்ற போட்டிகள், பின் மாவட்ட அளவில் என படிப்படியாக முன்னேறினார் தொடர்ந்து வெற்றி கிடைத்தது. இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டினார். சீனாவின் மாகாவுவில் நடைப்பெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். அதில் ஐந்தாவது இடம் கிடைத்தது.

தொடர்ந்து 2015ல் பெங்களூரில் நடைப்பெற்ற போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார், அதற்கடுத்து உஸ்பெஸ்கித்தானில் நடைப்பெற்ற ஆசிய உடற்கட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 2016 ஆம் ஆண்டு பேங்காக்கில் நடைப்பெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

Image Courtesy

கணவரின் வார்த்தைகள் :

கணவரின் வார்த்தைகள் :

சரிதாவிற்கு அவரது கணவர் மட்டுமல்ல, கணவர் வீட்டினர் எல்லாருமே உறுதுணையாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சரிதாவின் உந்து சக்தியாக இருக்கிறார்கள். மனைவியின் சாதனைகள் குறித்து போகிரோட் கூறுகையில், ஒரு பெண் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்கிறாள் ஆணை விட முன்னேறிக் கொண்டு செல்கிறாள் என்பதற்காக நாம் பயப்பட வேண்டும் என்ற அவசியமில்லை.

Image Courtesy

இது தவறு :

இது தவறு :

ஒரு பெண்ணை முடக்கி, அவளது திறமைகளை, ஆசைகளை எல்லாம் சிதைத்து வீட்டிற்குள்ளேயே பூட்டி வைப்பது என்பது சரியான செயல் அல்ல. நான் சரிதாவிற்கு இதைத் தான் சொல்வேன்.... வெளியே போ உன்னைப் போல திறமைகள் இருக்கிற பெண்கள் வீட்டில் முடங்கியிருக்கக்கூடாது. நீ பிறருக்கு வழிகாட்டியாக,இன்ஸ்பிரேஷனாக இருக்க வேண்டும்.

இப்போது சரிதாவைப் பார்த்து அவளது சாதனைகளைப் பார்த்து பெண்களும் தங்களது கனவுகளுக்கும் லட்சியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

Image Courtesy

பயிற்சியாளர் :

பயிற்சியாளர் :

இப்போது ஆண்கள் பெண்கள் என பலரும் சரிதாவின் மேற்பார்வையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். உடற்கட்டு

குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. வெளியுலகத்திற்கு வந்து சாதனைப் படைப்பதால், பிறருக்கு எடுத்துக்காட்டாய் இருப்பதால் குடும்பத்தை கவனிக்கவில்லை என்று அர்த்தமன்று. ஏனென்றால் பெரும்பாலான இடங்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு பின்னால் சொல்லப்படும் காரணங்களில் முக்கியமானது இதுவாகத்தான் இருக்கும்.

Image Courtesy

குடும்பம் :

குடும்பம் :

இவர்களுக்கு டமோ மற்றும் நானோ என இருமகன்கள் இருக்கிறார்கள். தனது லட்சியப் பாதைக்கு கொடுத்த அதே முக்கியத்துவத்தை குடும்பத்திற்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சரிதா தேவி. இப்படி தன் லட்சியத்தை நோக்கி பயணிப்பதால் பாரம்பரியம் குலைந்து விடும் என்பதெல்லாம் முட்டாள்தனமானது.

Image Courtesy

 விழிப்புணர்வு :

விழிப்புணர்வு :

ஒவ்வொரு பெண்ணாலும் சிறந்த தாயாகவும் குழந்தைகளுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாகவும் இருக்க முடியும், அதே நேரத்தில் பெண்கள் தங்களை முடக்கிக் கொண்டு தான் அவர்களை வளர்க்க வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. பெண்கள் குழந்தைகளிடத்தில் விளையாட்டு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

விளையாட்டு என்பது வெறும் உடல் ஆரோக்கியத்திற்கு, பிட்னஸுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு விளையாட்டும் ஓர் ஒழுக்கத்தினை கற்றுக் கொடுக்கும், வெற்றி தோல்வியை எடுத்துக் கொள்கிற மனப்பக்குவத்தை கொடுக்கும், தொடர்ந்து போராட வேண்டும் என்கிற விடாமுயற்சியை கற்றுக் கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    Read more about: insync pulse wonder women
    English summary

    Women Body Builder Saritha Devi

    Women Body Builder Saritha Devi
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more