For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ஆயுள் ரேகை இதுல எந்த ரகம்? அது உங்கள பத்தி என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சுக்கனுமா?

உங்க ஆயுள் ரேகை எப்படி இருக்கு? எதிர்காலம் பத்தி அது என்ன சொல்லுது? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

By Staff
|

பொதுவாக ஆயுள் ரேகை என்பது ஒரு நபரின் வாழ்நாள், ஆரோக்கியம், உடல் அமைப்பு, அவர் வலிமையானவரா? வலிமை இல்லாதவரா? அவரது வாழ்வில் ஏற்றத்தாழ்வு எப்படியானதாக இருக்கும், பேரழிவுகள், இடமாற்றம், காயங்கள், விபத்து, முக்கியமான வாழ்க்கை மாற்றங்கள் போன்றவற்றி குறித்து அறிந்துக் கொள்ள உதவுகிறது என்று நம்பப்படுகிறது.

ஆயுள் ரேகையாந்து கட்டை விரலின் விழும்பில் துவங்கி, மணிக்கட்டை நோக்கி பாயும் ரேகையாகும். இது சிலருக்கு மணிக்கட்டு வரை இருக்கும், சிலருக்கு பாதியிலேயே முடிவடைந்துவிடும். இது கைரேகைகளில் முக்கியமான ரேகையாக காணப்படுகிறது என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள்...

What Your Life Line Says About Your Future?

Image Source: yourchineseastrology

எல்லாருக்குமே ரேகை ஒரே மாதிரியானது இல்லை. இது அச்சில் மட்டுமல்ல, வடிவத்திலும், செல்லும் பாதையிலும் கூட அனைவர்க்கும் ஒரே மாதிரி இருக்காது. ஒருவருக்கு ரேகை நீளமாக இருக்கும், ஒருவருக்கு குறுகலாக இருக்கும். ஒருவருக்கு கல்லில் செதுக்கியது போல கரடுமுரடாக இருக்கும், ஒருவருக்கு இலைகளின் ரேகை போல இருக்கும்.

இப்படி ஆயுள் ரேகையில் காணப்படும் பல்வேறு விதமான வடிவ அமைப்பு ஒருவரது ஆரோக்கியம், ஆயுள் மற்றும் எதிர்காலம் குறித்து என்ன கூறுகிறது என்பது குறித்து தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடைப்படாமல் / பிரியாமல்

உடைப்படாமல் / பிரியாமல்

ஆயுள் ரேகையானது பிரிந்து காணப்படாமல் அல்லது உடையாமல் இருக்கிறது எனில், அது உங்கள் நீண்ட ஆயுளை குறிக்கிறது. கட்டை விரல் பகுதியில் துவங்கும் ஆயுள் ரேகையானது உங்கள் மணிக்கட்டு வரை நீளாமல் பாதியிலேயே முடிவடைந்துவிட்டால் அது மத்திம ஆயுள் என்று குறிக்கிறது. ஒருவேளை..., ஆயுள் ரேகையில் இருந்து கிளை ரேகைகள் மேலே செல்வது போன்ற அது அவருக்கு வாழ்வில் நல்லவை நடக்கும் என்பதை குறிக்கிறது. அதுவே, கிளை ரேகைகள் கீழே போல இருந்து சுமாரான அளவில் நல்லது நடக்க வாய்ப்பிருப்பதை இது குறிக்கிறது.

கிளை / குறுக்கு ரேகைகள்

கிளை / குறுக்கு ரேகைகள்

ஆயில் ரேகையில் இருந்து இடையே அல்லது குறுக்கே ஏதேனும் ரேகைகள் ஊடுருவி செல்வது போல இருந்தா, அது உடல்நல குறைபாடு ஏற்படுவதை குறிக்கிறது. அல்லது ஒரு ரேகையாக இன்றி ஆயுள் ரேகை இரண்டு ரேகைகளாக அதாவது இணைக் கோடுகளாக இருந்தால்... அவர்கள் லக் அதிகம், அதிர்ஷ்டம் கொட்டும் என்பதை இது குறிக்கிறது.

விரிந்த ரேகை!

விரிந்த ரேகை!

சிலருக்கு அவர்களது ஆயுள் ரேகையானது விரிந்த நிலையில் காணப்படும். அவர்களிடம் இயற்கையாகவே முரட்டுத்தனமான அல்லது மொரட்டுத்தனமான குணாதியங்கள் தென்படும். மேலும், இவர்கள் இயல்பாகவே உடல் வலிமை அதிகமாக காணப்படுவார்கள். முன்கோபம் கூட வரலாம்.

சங்கலி ரேகை!

சங்கலி ரேகை!

ஒருவேளை ஆயுள் ரேகையானது சங்கிலி கோர்வை போல துவங்கி... பிறகு முடியும் தருவாயில் சீரான ஒரே ரேகையாக முடிவதாக காணப்பட்டால்... அவர்கள் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியில் உடல்நல கோளாறுகள், குடும்ப / உறவு சண்டை அல்லது சோகமான சூழல்களை கடந்து வரலாம் என்பதை இது குறிக்கிறது. ஆனால், அதை எல்லாம் அவர்கள் கடந்து நல்லபடியாக வந்துவிடுவார்கள்.

மென்மையான!

மென்மையான!

சங்கலி கோர்வை போலவே இருப்பினும், ஆயுள் ரேகை கரடுமுரடாக இன்றி மென்மையான தன்மை கொண்டிருந்தால், இவர்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். மேலும், இவர்கள் வலிமையின்றி காணப்படுவார்கள்.

இவர்களுக்கு தங்களை சுற்றி இருப்பவர்கள் மீது பெரிதாக நம்பிக்கை இருக்காது. எதற்கெடுத்தாலும் நொந்து கொள்வார்கள், சோர்வாகவே காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் குறைவாகவே இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Your Life Line Says About Your Future?

What Your Life Line Says About Your Future?
Desktop Bottom Promotion