For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்? #J4F

By John
|

அலகாபாத் பெயரை ப்ர்யாக்ராஜ் என்றும், ஃபைசாபாத் பெயரை அயோத்யா என்றும் மாற்றி இருக்கிறார் உத்திரப்பிரதேச மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத். இப்போது சுல்தான்பூர் எனும் பகுதியின் பெயரை குஷ்பூர் என்று மாற்றவும் பரிந்துரைகள் நடந்துக் கொண்டிருப்பதாக தகவல் வந்தவண்ணம் உள்ளன.

What If Yogi Adityanath Start Changing Indian Celebrities Names?

யோகியின் இந்த பெயர் மாற்றும் படலத்திற்கு வலுத்த எதிர்ப்புகளும், சில பகுதிகளில் ஆதரவும் என கலவையான பார்வை மக்களிடத்தில் தென்படுவதை காண இயல்கிறது. சில கட்சிகள் யோகியின் இந்த பெயர் மாற்றும் செயலை கடுமையாக கண்டித்து மேடைகளில் பேசி வருகிறார்கள்.

இதில், அரசல்புரலசாக 2023ம் ஆண்டு பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தான் என்ற தகவல்களும் வந்த வண்ணம் உள்ளன. ஒருவேளை யோகி ஆதித்யநாத் பிரதமராகி, இந்தியாவில் இருக்கும் அனைத்து மாவட்டங்கள், கிராமங்கள் பெயர் என்று மட்டுமின்றி, சில பிரபலங்களின் பெயரையும் மாற்றினால்... முன்னணி பிரபலங்கள் யார், யாரெல்லாம் அதில் சிக்கலாம். எப்படியான பெயர் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற ஒரு சின்ன கற்பனை. ஜஸ்ட் 4 ஃபன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

அமீர்கான் - அமர்நாத், அமிஷ், அமித்ஷா, மூன்றாவது பெயரை வைத்துக் கொண்டால், அவருக்கு வாழ்நாளில் பிரச்சனை வர வாய்ப்பில்லை. காங்கரஸ் ஆட்சிக்கு வரும் வரையிலும்.

#2

#2

சல்மான் கான் - சலாக் கணேஷன்! சலாக் என்றால் நட்பு என்று பொருள் இந்தியில்.

#3

#3

ஷாருக்கான் - ஷாரவ் கணேசன்! ஷாரவ் என்றால் தூய்மை அப்பாவி என்று பொருள்.

#4

#4

சயப் அலி கான் - சைவி அழகேசன்! சைவி என்றால் நன்மை, செல்வம், சுபீட்சம் என்று பொருள்.

#5

#5

மன்சூர் அலி கான் - மன்னர் அழகேசன்! இவருக்கு மட்டும் தான்யா பேரு மாத்துனாலும் கெத்தா இருக்கு.

#6

#6

கமல் ஹாசன் - கமல் நேசன்! ஹாசன் என்பது இஸ்லாமிய பெயராகும். பெயரில் பகுதியை கூட யோகி விட்டு வைக்கமாட்டார் என்பதால், ஹாசனை நேசனாக மாற்றலாம்.

#7

#7

ஏ.ஆர். ரஹ்மான் - ஏ.ஆர். ரகுபதி, ரகுவரன், ராகவன், ராகவேந்திரா, ராகவ், ராகுல்.

#8

#8

ஜாகீர்கான் - ஜெகன், ஜெயமோகன், ஜெயம் ரவி என எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். கான் என்று வரும் இடத்தில் எல்லாம் கணேஷன் என்பதை பொதுச் சொல்லாக சேர்த்துக் கொள்வோமாக.

#9

#9

மும்தாஜ் - முத்தம்மா, முத்தரசி, முத்து செல்வினு முத்துவில் துவங்கும் எந்த பெயரும் இவருக்கு சூட் ஆகும்.

#10

#10

முகமது அசாருதீன் - முத்தரசன், முத்து, முத்து செல்வன், முத்துவேல், முகுந்தன், முகுல், முரளி, முருகேசன், முருகன்னு என்ன வேணாலும் சூஸ் பண்ணலாம் யோகி.

#11

#11

இர்பான் பதான் - இஷாந்த், இந்திரா, இந்திரன், ஈஸ்வர், இதயன், இனியவன், இளவரசு, இன்பநாதன்,

#12

#12

சானியா மிர்சா - சான்வி மிருதுளா, சைனா, சய்னா, ஷன்வீ, ஷைலி, சஞ்சிதா, சன்விகான்னு சானியா மிர்சாவுக்கும் வைக்க நிறையா பேரு இருக்கு.

குறிப்பு: இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் உடையதல்ல. ஜஸ்ட் சின்ன கற்பனையே!

டக்குன்னு தோணுனதுனால இவங்க பெயர எல்லாம் நாங்க எடுத்துக்கிட்டோம். வேற சில பிரபலங்கள் மற்றும் அவங்களுக்கு என்னென்ன பெயர் மாற்றம் நிகழலாம்னு நீங்க நினைக்கிறத கமெண்ட்ல பதிவு பண்ணுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What If Yogi Adityanath Start Changing Indian Celebrities Names?

From Last Couple of months CM Yogi Adityanath Changing Names of places which has Islamic Names. And Just Imagine, What if he Start Changing Indian Celebrities Names? and who are all will affect with what kind of name. It is Just for FUN. Take a look.
Story first published: Thursday, November 15, 2018, 12:10 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more