Latest Updates
-
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம்
வீட்டிலேயே சிவலிங்கம் வைத்து வழிபட வேண்டுமென்றால் செய்ய வேண்டிய விதிமுறைகள் என்ன?
சிவலிங்கத்தை வீட்டிலேயே பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்றால் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது.
நமது இந்து மத சடங்குப்படி சிவலிங்கத்திற்கு பாலும் நீரும் கொண்டு அபிஷேகம் செய்வது நல்ல பலனை தரும் என்கின்றனர். அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் வரும் சிவராத்திரி அன்று நிறைய பக்தர்கள் கோயிலுக்கு சென்று நீரால் சிவனை அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

இந்த மாதிரி சிவனை வழிபட சில விதிமுறைகள் இருக்கின்றன. நீங்கள் வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபட நினைத்தால் இந்த விதிமுறைகளை கடைபிடித்து அவரை வழிபடுவது நல்லது. இது உங்களுக்கு அவரின் அருள் சீக்கிரம் கிடைக்க உதவும்.

சிவ வழிபாடு
சில பேர் வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபட கூடாது என்கின்றனர். சில பேர்கள் இதை கடைபிடிக்கின்றனர், சில பேர்கள் இதை நிராகரிக்கின்றனர். இருப்பினும் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபட கீழ்க்கண்ட வழிமுறைகளை நாம் பின்பற்றினால் அவரின் அருளை எளிதாக பெறலாம் என்கிறது இந்து மதம்.

சிவலிங்கத்தின் எண்ணிக்கை
சிவலிங்கம் என்பது கடவுள் சிவபெருமானின் திருவுருமாகும். அவரின் அடையாளமாக சிவலிங்கத்தை வழிபடும் போது நமக்கு ஆற்றலும் சக்தியும் கிடைக்கிறது. எனவே இந்த ஆற்றலை பெற ஒரு சிவலிங்கம் போதுமானது. எனவே உங்கள் வீட்டில் ஒரு சிவலிங்கத்திற்கு மேல் வைத்து வழிபட வேண்டாம்.இது கடவுள் ஒருவரே என்பதை காட்டுகிறது.

சிவலிங்கத்தின் வடிவம்
நிறைய மக்கள் நினைக்கின்றனர் பெரிய சிவலிங்கம் பார்ப்பதற்கு அழகாவும் மற்றவர்களின் கண்ணை பறிக்கும் விதத்திலும் இருக்கும் என்கின்றனர். ஆனால் இது சரியானது கிடையாது. வீட்டில் சிவலிங்கம் சிறிய வடிவில் இருந்தால் தான் நல்லது. நமது பெருவிரலை விட அதிகமாக இல்லாமல் இருப்பது நல்லது. பெரிய சிவலிங்கம் கோயிலில் இருப்பதே சிறந்தது.

சிவலிங்க பூஜை
சிவலிங்க பூஜையை உங்கள் வீட்டிலேயே தினமும் இருவேளைகளில் நீங்கள் செய்து வரலாம். உங்களுக்கு காலை, மாலை என்ற இருவேளைகளில் செய்ய முடியவில்லை என்றால் காலையில் மட்டும்மாவது செய்து வாருங்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் சிவலிங்கத்திற்கு நீர் அபிஷேகம் செய்து பிறகு சந்தனத்தால் அலங்கரிக்கவும். குங்குமம், மஞ்சள் இவற்றை சிவலிங்கத்திற்கு பயன்படுத்தாதீர்கள்.

தேங்காய் நீர் வேண்டாம்
சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய பால், நீர் மற்றும் கனகாஜல் தண்ணீர் சேர்த்து அபிஷேகம் செய்ய வேண்டும். தேங்காய் நீரால் எக்காரணத்தை கொண்டும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யக் கூடாது. ஆனால் தேங்காயை படைக்கலாம். அதே மாதிரி சிவலிங்கத்தை மூடிய அறையில் வைக்க கூடாது. திறந்த வெளி வழிபாடே சிவலிங்கத்திற்கு உகந்தது.

ஜலதாரா முக்கிய வழிபாடு
நீங்கள் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றிய பிறகு சிவலிங்கத்திற்கு ஜலதாரா வழிபாட்டை செய்ய வேண்டும். அதாவது ஜலதாரா என்பது சிவலிங்கத்திற்கு மேல் சொட்டு நீராக விழும் படி ஒரு பானையை நூலில் கட்டி தொங்க விட்டு அமைக்க வேண்டும். இந்த நீரை நீங்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை என மாற்றி கொள்ளலாம். தொடர்ச்சியாக நீர் சொட்டு சிவலிங்கத்தின் மீது விழும் போது சிவனின் உள்ளம் குளிர்ந்து அவனது அருளும் ஆற்றலும் நமக்கு கிடைக்கும்.

துளிசியால் அர்ச்சிக்க வேண்டாம்
சில மலர்கள் சிவனால் சபிக்கப்பட்ட மலர்களாகும். எனவே அந்த மாதிரியான மலர்களைக் கொண்டு சிவனை அர்ச்சிக்க வேண்டாம். ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் சிவலிங்கத்தை வெள்ளை பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். துளிசி இலையை கொண்டு சிவலிங்கத்தை அர்ச்சிக்க கூடாது.

சிவலிங்கத்தின் உலோகம்
நர்மதா ஆற்றங்கரையில் இருக்கும் கற்களால் செய்யப்பட்ட சிவலிங்கம் மிகவும் விஷேசமானது. நீங்கள் உலோகத்தால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை வழிபட நினைத்தால் தங்கம், வெள்ளி அல்லது காப்பர் போன்ற உலோகத்தை தேர்ந்தெடுக்கவும். சிவலிங்கத்தின் மேல் பாம்பு குடை பிடித்த வடிவத்தை கூட நீங்கள் வாங்கி வழிபடலாம்.



Click it and Unblock the Notifications