For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களுக்காகவே பிரத்தியேகமாக கண்டுபிடிக்கப்பட்ட கோக்குமாக்கான பொருட்கள்!

|

எங்கயாச்சும் தியேட்டர்ல ஆண்கள் வரிசன்னு தனி டிக்கெட் கியூ இருக்கா? பஸ்ல பெண்கள் இருக்குன்னு தான் பெயிண்ட்ல எழுதி வெச்சிருக்காங்க.. எங்கயாச்சும் ஆண்கள் இருக்கன்னு எழுதி இருக்கா? (எங்க ஊரு பஸ்ல எல்லாம் எழுத்துலைங்க). ரெட் பஸ்ல இருந்து எந்த ஆன்லைன் பஸ் டிக்கெட் புக்கிங்கா இருந்தாலும்... லேடீஸ் சீட்க்கு மட்டும் தான் தனி முன்னிரிமை இருக்கு... ஆண்களுக்கு எங்க இருக்கு..?

அப்படியே நாங்க முதல்ல ஜன்னல் சீட் புக் பண்ணி அக்கடான்னு உட்கார்ந்தாலும்... வேற ஒரு பொண்ணு வீம்புக்குன்னு டிக்கெட் புக் பண்ணிட்டு... டிரைவர் கிட்ட போய்... அண்ணா, அண்ணா அங்க பக்கத்துல ஒரு ஜென்ட்ஸ் உட்கார்ந்துட்டு இருக்காரு... அன்கம்ஃப்ர்டபிலா இருக்கு.. அவர சீட் மாத்தி உட்கார வைங்கன்னு சொல்லிடும். அப்பறம்... நம்மள ஒரு கடைசி சீட்ல உட்கார வெச்சு வேடிக்கை பார்ப்பாங்க.

இப்படி.. எல்லாமே பொண்ணுங்களுக்கு தாங்க ஸ்பெஷலா இருக்கு இங்க. அது மட்டுமில்ல.. உலகமகா விஞ்ஞானிகள் சிலர் போன்னுகளுக்குன்னே தனியா சிறு கருவிகள் கண்டிபிடிச்சு வெச்சிருக்காங்க... அதையும் என்னன்னு கொஞ்சம் பார்த்திடுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

கூட்டத்தில் தனி ஒருவளாக தெரிய, எல்.இ.டி லைட் கொண்டு தயாரிக்கப்பட்ட செயற்கை கண்ணிமை முடிகள்.

#2

#2

பார்த்தவுடன் மோமோ அல்லது ஆங்கிலப்பட பேய் என்று பயந்துவிட வேண்டாம். நீங்கள் ஒரு ஸ்போர்ட்ஸ் பர்சனாக இருந்தால், என்னடா கை, கால்ல மாட்டுறத, முகத்துல மாட்டி இருக்காங்கன்னு சந்தேகம் வரலாம். ஆனால், இது முக சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் இருக்க உருவாக்கப்பட்டதாகும்.

MOST READ: கற்பூரம் பற்றி இதுவரை நீங்கள் அறியாத மருத்துவ பலன்கள்

#3

#3

எவன்டா அது கண்ணாடிய தப்புத்தப்பா டிசைன் பண்ணதுன்னு கோபம் கூட வரலாம். அஞ்சான் படத்தின் ஒரு பாடலில் சமந்தாவை கண்டு கிறங்கிப் போன சூர்யா இப்படி தான் கண்ணாடியை தலைகீழாக மாட்டிக் கொண்டு வருவார். ஆனால், இது அப்படியான ஒன்றல்ல... கண்களை அழகாக தெரியும்படி வைத்துக் கொள்ள இப்படி ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

#4

#4

இதற்கு பெயர் லிப் ட்ரெயினர் என்று கூறுகிறார்கள். ஆனால், இது என்ன ட்ரெயினிங் கொடுக்கும் என்றெல்லாம் எங்களை கேட்க கூடாது.

#5

#5

சத்தியமாக சில ஏடாகூடாமான நபர்களுக்கு.. இதை பார்த்த வுடன் ஏடாகூடமான யோசனைகள் எல்லாம் வந்திருக்கலாம். தயவு செய்து அதை எல்லாம் கண்ட்ரோல் ஷிப்ட் டெலிட் செய்து விடுங்கள். இது முக சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் இருக்க கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு கருவி.

#6

#6

முன்னாடி கண்களை அழகாக வைத்துக் கொள்ள ஒரு கருவியை பார்த்தோம் அல்லாவா, அதே போல தான் இதுவும். இது மூக்கினை அழகான வடிவத்தில் பெற உதவும் கருவி.

MOST READ: துர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...

#7

#7

ஒருவேளை பெண்கள் பயன்படுத்தும் லிப்ஸ்டிக் சரியாகவோ, எடுப்பாகவோ இல்லை என்றால்.. அல்லது அது சீக்கிரம் அழிந்துவிடுகிறது என்று யாரேனும் கூறினால்.. இதோ அவர்களுக்காக... இத பிளாஸ்டிக் ஸ்டிக்கர் லிப்ஸ்டிக்.

#8

#8

ஒருவேளை நீங்கள் நைட் எல்லாம் சரியாக தூங்காமல் இருந்தோ, அல்லது ரெண்டு முறை குளித்தும் முகத்தில் அந்த சோர்வு அல்லது சோம்பேறித்தனம் பச்சை குத்தியது போல தெளிவாக தெரிகிறது என்றால்.. இதோ இந்த ஃபேக் மாஸ்கினை வாங்கி மாட்டிக் கொள்ளலாம்.

#9

#9

ஒருவேளை நீங்கள் நைட் எல்லாம் சரியாக தூங்காமல் இருந்தோ, அல்லது ரெண்டு முறை குளித்தும் முகத்தில் அந்த சோர்வு அல்லது சோம்பேறித்தனம் பச்சை குத்தியது போல தெளிவாக தெரிகிறது என்றால்.. இதோ இந்த ஃபேக் மாஸ்கினை வாங்கி மாட்டிக் கொள்ளலாம்.

#10

#10

பெண்கள் அதிகம் அவதிப்படுவது இதனால் தான், நெயில் பாலிஷ் பர்பெக்டாக அடிப்பது ஒரு கலை என்றால், அது நன்கு காயும் வரை உலர விடுவது பெரும் கவலை. அதற்காக தான் இந்த ப்ளோவர்.

MOST READ: கர்ப்பிணி பெண்கள் இந்தியன் டாய்லெட் பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா?

#11

#11

நேரத்தை மிச்சம் ஆக்குவதற்கு என்று இந்த கருவி. இந்த கருவியில் ஐந்து நெயில் கட்டர்களை பொருத்தி, சரியாக வைத்து நகத்தினை வெட்டுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் நூறு பேருக்கு நகம் வெட்டி விடலாம்.

#12

#12

இனிமேல், குனிஞ்சு எல்லாம் கூட்டி பெருக்க வேண்டாம். நடந்துகிட்டே.. ஈஸியா கூட்டி பெருக்கி குப்பை எல்லாம் எடுத்திடலாம்.

#13

#13

குழந்தையை வெளி அழைத்து செல்வது கஷ்டமாக இருக்கிறதா... இதோ! இந்த ஸ்கேட்டிங் வீலர் உடன் ஜாலியாக போய் வரலாம் என்று கூவி, கூவி விற்கிறார்கள்.

#14

#14

நடக்கும் போதே துணிகளை துவைக்க வசதியான போர்ட்டபிள் வாஷிங் மெஷின்... ஆமா, இதுல சிலவகை உள்ளாடை மற்றும் சாக்ஸ் தவரிட வேற எதுவுமே துவைக்க முடியாதே... அப்பறம் என்ன பெரிய "ராஜா நீதி மன்றத்த திட்டுன" வார்த்தைக்கு இது!

MOST READ: மேக்ரோ டயட்டை பயன்படுத்தி வேகமாக எடையை குறைப்பது எப்படி?

#15

#15

வெளியிடங்கள்ல என்ன தான் தனக்கு பிடிச்ச உணவா இருந்தாலும் பொண்ணுங்க அதிகமா சாப்டாம இருக்க காரணம்... எங்க அள்ளி எடுத்து வாயில திணிச்சு சாப்பிட்டா நாம அசிங்கமா தெரிவோமோங்கிற கூச்சம் தான். அந்த கூச்சத்த மறந்து வெடுக்கு, வெடுக்குன்னு சாப்பிட தான் இந்த நாப்கின்!

#16

#16

திடீர்னு மழை பெஞ்சு புதுசா வாங்குனா ஷூ, செருப்பு ஈரமாயிட்டா என்ன பண்ண முடியும், அதுக்காக தான் இந்த ஸ்பெஷல் ஐட்டம்... எப்பூடி....!!!!

#17

#17

திடீர்னு மழை பெஞ்சு புதுசா வாங்குனா ஷூ, செருப்பு ஈரமாயிட்டா என்ன பண்ண முடியும், அதுக்காக தான் இந்த ஸ்பெஷல் ஐட்டம்... எப்பூடி....!!!!

#18

#18

ஒருவேளை ஹேண்ட் பேக் எடுத்துட்டு போற அளவுக்கு கஷ்டமா இருந்தா.. இந்த பிரா வாங்கி உபயோகப்படுத்துங்க... போன் எடுத்துட்டு போறது ரொம்ப ஈசி... டக்குன்னு வைப்ரேட்டர் மோட்ல இருக்கும் கால் வந்தா என்ன பண்ணுவாங்கன்னு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்... அப்படி வந்தா எடுத்து அட்டன்ட் பண்ணி பேசுவாங்க... அவ்வளோ தான் சிம்பிள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weird Things Invented for Women Especially!

You cant believe it! But, it is true. Here we have listed the Weird Things Invented for Women Especially.