Latest Updates
-
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெசிபி..இப்படி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
இந்த வாரம் குபேரனை வழிபட்டு கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?
12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின்
ராசிக்கும் கிரகங்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. சிலருக்கு அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள். சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காரணமோ என்று கூட நினைக்கலாம்.
அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். அப்படி இன்றைக்கு என்னென்ன ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் எனப் பார்ப்போம். அந்த ஜோதிடத்தின் மூலம் நாம் வாழ்க்கையில் யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது என்பது வரை மிகத் தெளிவாக ஜோடதிடத்தில் நம்மால் அறிந்து கொள்ள முடியும். ஒரு நாள் பார்க்கும் பலன் அன்றோடு முடிவதில்லை.கிட்டதட்ட ஒரு வாரமாவது அதன் பலன்கள் நீடிக்கும். அப்படி இந்த வாரம் என்ன ராசிக்கு என்னென்ன பலன்கள் ஏற்படப் போகின்றன என்று பார்க்கலாம்.

மேஷம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். வீட்டில் உள்ள குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பிரபலமானவர்களின் நட்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சேர தாமதமாகும். தொழில் வளர்ச்சிக்காக சிந்திப்பீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். முழு அறிவாற்றலையும் வெளிப்படுத்துவீர்கள். சுயதொழிலில் மேன்மை உண்டாகும். ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். அக்னி தேவரை வழிபடுங்கள்.

ரிஷபம்
தாய்வழியிலான உறவுகளிடம் சற்று கவனமாக இருக்கவும். செய்யும் வேலையில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். அரசு வேலையில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கொஞ்சம் கவனமுடன் பழகுவது நல்லது. பொதுகாரியங்களில் மனம் ஈடுபடும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சொத்து விஷயங்களில் இருந்துவந்த பிரச்னைகள் குறையும். எந்த காரியத்திலும் நிதானமாக இருக்க வேண்டும். மும்மூர்த்திகளை வழிபடுங்கள்.

மிதுனம்
பயணங்களின் வழியில் தன லாபம் உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். இதுவரை ஒளித்து வைத்திருந்த அத்தனை திறமைகளையும் வெளிப்படுத்தும் காலம் இது. வீட்டில் குழந்தைகளின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் உங்களின் அந்தஸ்து அதிகரிக்கும். தன்னம்பிக்கையோடு எடுத்த காரியங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பல நாட்களாக இருந்து வந்த பிரச்னைகளை கவனமாக தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

கடகம்
தனலாபம் அதிகரிக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் தொழில் விருத்தியடையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். பெரியவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். இதுவரையில் நிலுவையில் இருந்துவந்த வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான அன்பு அதிகரிக்கும். தொழிலில் பங்குதாரருடனான சூழல் சாதகமாக அமையும்.பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சனிபகவானை வழிபட்டால் நன்மை உண்டாகும்.

சிம்மம்
தொழிலில் புதிய திட்டங்களை தீட்டி அதை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். உடன் பிறப்புகளால் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகளின் வழியில் மனமகிழ்ச்சியும் பெருமையும் அடைவீர்கள். உடல் நலத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மனதில் வீண் கவலைகள் தோன்றி மறையும். எதிலும் சிறிது கவனத்துடன் செயல்படுவது நல்லது. போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை நாளில் சுக்கிரனை வழிபடுங்கள்.

கன்னி
ஆரோக்கியத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். உயர்ந்த பொறுப்புகளில் உள்ளவர்கள் தனக்கு கீழ் உள்ளவர்களிடம் கொஞ்சம் அமைதியுடன் நடந்து கொள்ளுங்கள். உற்பத்தி சார்ந்த தொழில் புரிவோருக்கு லாபம் உண்டாகும். வாகன சேர்க்கைக்கான சூழல் உருவாகலாம். பிள்ளைகளின் மூலம் சுப விரயச் செலவுகள் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான சூழல் உண்டாகும். சொத்து விஷயங்களில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். துர்க்கையை வழிபடுங்கள்.

துலாம்
பணியில் ஏற்றுக்கொண்ட பொறுப்பை செய்து முடிக்கும்வரை ஓய மாட்டீர்கள். செய்யும் செயல்களில் வேகம் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானமான நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவீர்கள். கடல்வழி பயணங்களால் நன்மை உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். பொருள்சேர்க்கை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி புகழ் அடைவீர்கள். முருகப்பெருமானை வழிபடுங்கள்

விருச்சிகம்
எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சேர தாமதமாகும். தொழில் வளர்ச்சிக்காக சிந்திப்பீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். முழு அறிவாற்றலையும் வெளிப்படுத்துவீர்கள். சுயதொழிலில் மேன்மை உண்டாகும். ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். விரும்பிய பொருள்களை வாங்கி, மகிழ்ச்சி அடைவீர்கள். பெற்றோர்களின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நினைத்த காரியம் நிறைவேறும்.

தனுசு
சேமிப்புகள் அதிகமாகும். ஆடம்பரச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் லாபம் உங்களுக்குத்தான். கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். வீட்டில் பெரியவர்களுடன் இருந்து வந்த சிறுசிறு கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். உங்களுடைய பேச்சு வன்மையால் பெருமைகள் உண்டாகும். தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். சிவபெருமானை வழிபட்டு வாருங்கள்.

மகரம்
தொழில் சம்பந்தமாக வெளியூர்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். பணியிடங்களில் உயர் அதிகாரியிடம் கருத்து வேறுபாடு உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. வியாபார உத்திகளைக் கற்றுக் கொள்வீர்கள். பிறருடைய விமர்சனங்களுக்கு ஆளாவீர்கள். எந்த செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். தேவையற்ற வீண் அலைச்சல்கள் உண்டாகும். கடன் தொல்லை குறையும். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கும்பம்
உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். பதவிகளால் மதிப்புகள் உயரும். உறவினர்களின் வழியில் ஆதாயம் அடைவீர்கள். தொழில் விரிவுபடுத்துவதற்கான சூழல்கள் உண்டாகும். மனதில் இருந்த வந்த சங்கடங்கள் தீர்ந்து தெளிவு பிறக்கும். கேளிக்கை மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். அரசு அதிகரிகளின் லம் சாதகமான சூழல்கள் உண்டாகும். குபேரனை வழிபட்டால் செல்வம் கொழிக்கும்.

மீனம்
பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவது குறித்த முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பண விஷயங்களில் சாதுர்யமாகப் பேசி சமாளிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக செயல்படுங்கள். வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பண உதவிகள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications











