இன்று முதல் 14 ஆம் தேதிவரை குரு எந்தெந்த ராசிக்கு அள்ளிக் கொடுக்கப்பார்? யாரை சோதிப்பார்?

வார ராசிபலன்கள் 8.10.18 to 14.10.18 வரை இந்த ஒரு வாரத்துக்கு 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம். அதிலும் ஆவணி என்பது சுப மாதங்களுள் ஒன்று. அது என்னென்ன நன்மைகளை உங்களுக

By Mahi Bala

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள்.

weekly predictions 8.10.18 to 14.10.18

ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயமாகவே நாம் நினைத்தாலும், அதற்குள்ளே சில அறிவியலும் இருக்கிறது. 9 கோள்களும் எப்படி இயங்குகின்றனவோ அதை வைத்து, நம்முடைய வாழ்க்கையைக் கணிக்கிற முறை தான் இந்த ஜோதிடம். அந்த ஜோதிடத்தில் இந்த வாரம் 8.10.18 முதல் 14.10.18 வரையிலும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன ஆரோக்கியக் குறைபாடுகுள் வந்து போகும். வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே பரஸ்பர பேச்சுவார்த்தையை அதிகப்படுத்துங்கள். அது இதுவரை இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து ஒற்றுமையை அதிகரிக்கும். மனைவிவழி உறவினரைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளுடைய ஆதரவுகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வும் ஊதிய உணர்வும் உண்டாவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வீட்டில் பெற்றோரிடம் தேவையில்லாமல் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவினால் நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும். கொடுக்கல், வாங்கலில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். நண்பர்களுடன் கொஞ்சம் நிதானத்துடன் பேசுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். சுற்லா சென்று மகிழ்வீர்கள். வெளியூா் பயணங்களால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய உடல் ஆரோக்கிய விஷயத்தில் இருந்த சிறுசிறு பிரச்சினைகள் தீரும். நல்ல செய்தி வந்து சேரும். வேலையிடத்தில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். எந்த விலையுயர்ந்த பொருள்களைக் கையாண்டாலும் அதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தொழிலில் உங்களுடைய புதிய முயற்சிகள் யாவும் உங்களுக்குச் சாதகமான பலன்களையே தரும். அதேபோல் வியாபாரத்திலும் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். ஆன்மீனத்தில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூா் சம்பந்தப்பட்ட பயணங்களினால் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

மிதுனம்

மிதுனம்

நீங்கள் எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு வரும். அதனால் மனம் குதூகலத்தில் இருப்பீர்கள். உடல் ஆரோக்கியம் பிரச்சினைகள் தீர்ந்து நன்மை உண்டாகும். வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் பேசும்போது கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். முக்கியமான பொறுப்பில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்ற சக பணியாளர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். தேவையில்லாமல் அடுத்தவர்களுடைய விஷயத்திலோ வேலையிலோ தலையிடாதீர்கள். கல்வி தொடர்பாக சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தேடி வரும். அதேபோல் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் கைக்கு வந்து சேரும். உடன் பிறந்த சகோதரர்களிடம் கொஞ்சம் பாசத்துடன் நடந்து கொள்ளுங்கள். பிள்ளைகளுடைய செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்

கடகம்

மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். தொழிலில் புதுப்புது முயற்சிகளைக் கையாளுவீர்கள். நீங்கள் எடுத்த காரியமெல்லாம் வெற்றியில் போய் முடியும். வேலையிடத்தில் பதவி உயர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதற்கான வழிகாட்டுதல்களும் பலன்களும் உங்களுக்குக் கிடைக்கும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். தொழில் சம்பந்தப்பட்ட முதலீடுகளில் தகுந்த ஆலோசனையைப் பெற்று அதன்படி நடந்து கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளின் வாயிலாக உங்களுக்கு நன்மை உண்டாகும். வீட்டில் உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதாயமான சூழல்கள் உருவாகும். உங்களுடைய நேர்த்தியான செயல்களால் பாராட்டப்படுவீர்கள். உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடன் உதவிகள் கைக்கு வந்து சேரும்.

சிம்மம்

சிம்மம்

வெளியூா் பயணங்களினால் உங்களுடைய தொழிலில் வாய்ப்புகள் அதிகரிக்கும். கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். உங்களுடைய நேர்த்தியான செயல்களால், நற்பெயர்கள் உண்டாகும். உங்களுடைய வாழ்க்கைக்கான வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்துங்கள். குடும்ப விவகாரங்களில் வெளியாட்களின் தலையீடைத் தவிர்ப்பது நல்லது. மனதுக்குள் தோன்றுகின்ற தேவையில்லாத குழப்பங்களினால் எடுக்கும் முடிவுகள் கொஞ்சம் காலதாமதமாகும். வெளியாட்களிடம் பேசுகின்ற பொழுது, பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். மனதுக்குள் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றி மறையும். மூலிகை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் கொஞ்சம் பொறுப்புடன் செயல்படுங்கள்.

கன்னி

கன்னி

உங்களுடைய மிக சாதுர்யமான செயல்பாடுகளினால் அடுத்தவர்களிடம் அதிகப்படியான பாராட்டைப் பெறுவீர்கள். உங்களுக்கு எதிர்பாராத தன வரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. எதற்கெடுத்தாலும் கோபப்படும் உங்களுடைய முன்கோபத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது. புதிய அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். பொன், பொருள் சேர்க்கைக்கான தன வரவுகள் உங்களுக்கு வந்து சேரும். உங்களுடைய அலுவலக நிர்வாகத்தில் உங்களுடைய தனித்திறமையும் நுட்ப அறிவும் வெளிப்படுத்தும் வாய்ப்பு உருவாகும். உங்களுடைய இனிமையான பேச்சுக்கிளனால் மற்றவர்களைக் கவர்வீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்த காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய உடன் பிறப்புகளினால் அனுகூலங்கள் ஏற்படும். வழக்குகளினால் உங்களுக்கு இருந்து வந்த இழுபறி நிலைகள் குறைந்து சுமூகமான நிலைகள் உருவாகும்.

துலாம்

துலாம்

வேலையில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சுப செய்திகள் வந்து சேரும். அதனால் சுப விரயச் செலவும் ஏற்படும். வர்த்தகங்கள் சம்பந்தப்பட்ட வேலைகளில் லாபங்கள் அதிகரிக்கும். தொழிலில் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும்.வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கங்கள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலமாக உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பொருள்சேர்க்கைகளுக்கு உதவி செய்வீர்கள். வேலை தேடுகிறவர்களுக்கு முயற்சி கைகொடுக்கும். உணவு சம்பந்தப்பட்ட சமயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிகம்

வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களுடைய விஷயத்தில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு திடீர் யோகம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். பணியில் இட மாற்றம் உண்டாவதற்கான வாய்ப்பு நேரிடலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். முதலீடுகளினால் பிறருடைய ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள பெரியோர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மனதுக்குள் இனம் புரியாத பயமும் கவலையும் ஏற்பட்டு அதனால் உடல் சோர்வு ஏற்படும். உங்களுடைய திறமைக்கான முழு அங்கீகாரமும் கிடைக்கும்.பெற்றோர்களுடைய ஆதரவினால் தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கி, மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். கலைத்தொழிலில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.

தனுசு

தனுசு

தாய்மாமன் உறவுகளிடம் கொஞ்சம் அமைதியுடன் நடந்து கொள்ளுங்கள். வாகனங்களின் மூலமாக லாபங்கள் ஏற்படும். தம்பதிகளுக்கு இடையே கொஞ்சம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழிலில் பங்கு தாரர்களுடைய ஆதரவினால் நல்ல நிலை ஏற்படும். வீடு மற்றும் மனை வாங்குவதற்ககான விஷயங்களில் கொஞ்சம் கால தாமதங்கள் உண்டாகும். எதிர்பாராத சொத்து சேர்க்கைகள் உண்டாகும். எந்த செயலாக இருந்தாலும் அதில் கொஞ்சம் நிதானமாகச் செயல்படுங்கள். உங்கள் உடன் பிறந்த சகோதரர்களினால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனத்துடன் இருங்கள். மன உறுதியுடன் புதிய செயல்களில் ஈடுபடுவீர்கள்.

மகரம்

மகரம்

மாணவர்களுக்கு வழக்கத்தை விட நல்ல முன்னேற்றமான சூழல் காணப்படும். பெண் நண்பர்களின் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். உங்களுக்கு உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய அனுபவ அறிவினால் முன்னேற்றம் ஏற்படும். பரம்பரை சொத்துக்களினால் மகிழ்ச்சி அதிகமாகும். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பேணியில் உயர் அதிகாரிகளிடம் கொஞசம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். தொழிலில் நீங்கள் செய்கின்ற மாற்றங்களால் சக ஊழியர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். வெளியூா பயணங்களினால் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

கும்பம்

கும்பம்

உங்களுடைய புதிய முயற்சிகளால் நினைத்த முடிவுகள் உண்டாகும். சந்தேக உணர்வின் காரணமாக நண்பர்களிடம் சில மனக்கசப்புகள் உண்டாகலாம். மாணவர்களுக்கு சுப விரயச் செலவுகள் உண்டாகலாம். வீட்டில் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். புதிதாக சில திட்டங்கள் வகுத்து அதை நடைமுறைப்படுத்த முயல்வீர்கள். தன லாபம் உண்டாகும். இணையதளம் சம்பந்தமான பணிகளில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். எதிரிகளுடைய செயல்பாடுகளை முறியடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலையாட்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

மீனம்

மீனம்

வேலை தேடுகிறவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். வெளியூா பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீடு மற்றும் மனைகள் மூலம் லாபம் ஏற்படும். உங்களுடைய சிறப்பாக செயல்பாடுகளால் பெருமிதம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் கலந்துரையாடும் போது கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். நீர் ஆகாரங்களை அதிகமாக சாப்பிடுங்கள். திட உணவுகள் அதிகம் சாப்பிடுவதைக் கொஞ்சம் தவிர்த்துவிடுங்கள். தொழிலில் உங்களுடைய திறமையால் பாராட்டுக்கள் கிடைக்கும். போட்டி மற்றும் பந்தயங்களில் வெற்றி உண்டாகும். உங்களுடைய சேமிப்பு அதிகரிக்கும். கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். உடன்பிறப்புகளின் மூலம் சங்கடங்கள் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, October 8, 2018, 14:31 [IST]
Desktop Bottom Promotion