இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன மாதிரி பஞ்சாயத்து வரும்... இந்த வார அதிர்ஷ்டசாலி யார்?

வார ராசிபலன்கள் 17.12.18 to 23.12.18, இந்த ஒரு வாரத்துக்கு 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள்.

weekly predictions 17.12.18 to 23.12.18.18

ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி 17.12.18 to 23.12.18, வரையிலும் ஒரு வாரத்துக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உங்களுடைய உறவினர்களின் மூலமாக சுப செய்திகள் உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்கு விரும்பிய புதிய கருவிகளை வாங்கி மகிழ்ச்சி அடைவார்கள். பிள்ளைகளோடு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வேறுபடும். பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முன்னேற்றம் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வதன் மூலமாக உங்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். மற்றவர்களுடைய பிரச்சினைகளில் தலையிடுவதால் தேவையற்ற அவச் சொல்லுக்கு ஆளாக நேரிடும். நீங்கள் திட்டமிட்ட பணிகளில் காலதாமதம் ஏற்பட்டாலும் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும். தொழில் சார்ந்த எதிர்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

பொருளுாதார உயர்வு உங்களுக்கு உண்டாகத் தொடங்கும். உங்களுடன் பணிபுரிபவர்கள் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுப காரியங்கள் தொடர்புடைய எண்ணங்கள் நிறைவேற ஆரம்பிக்கும். தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் போது தகுந்த ஆலோசனைகளைப் பெற்று முடிவு எடுப்பது சிறப்பு. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அவ்வப்போது தோன்றி மறைய ஆரம்பிக்கும். வீட்டில் குடும்பத்தில் பிள்ளைகளின் வழியில் சுபிட்சமான செய்திகள் வந்து சேரும். மனதுக்குள் புதுவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய வாக்குவன்மையினால் சில காரியங்களில் நினைத்த வெற்றி உண்டாகும்.

மிதுனம்

மிதுனம்

வியாபாரத்தில் பெரிய நபர்களுடைய ஆதரவின் மூலம் உங்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். விளையாட்டு வீரர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலமாக உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உண்டாகும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியுாகத்தில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். புதிய வேலைகள் பற்றிய சிந்தனைகள் உங்களுக்கு அதிகரிக்கும்.

கடகம்

கடகம்

அரசு அதிகாரிகளிடம் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். உறவினர்களிடம் இருநு்து சுப செய்திகள் உங்களுக்கு உண்டாகும். புதிதாக ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் திட்டமிட்ட காரியங்களில் நினைத்தபடி வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் புதுவிதமான திறமை மற்றும் யுக்திகள் வெளிப்பட ஆரம்பிக்கும். வேலையின் காரணமாக வெளியூருக்குப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கொஞ்சம் கவனம் தேவை. பெரிய மகான்களுடைய தரிசனங்களும் ஆசிகளும் உங்களுக்கு உண்டாகும். நண்பர்களுடன் இணைந்து விருந்து போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் பேசுகின்ற பொழுது, கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்

சிம்மம்

காரணமே தெரியாமல் மனதுக்குள் புதுவித புரியாத சோர்வு உண்டாகும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எதிர்பாராத பண வரவு உங்களுக்கு உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையினால் உங்களுடைய வட்டில் கொஞ்சம் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்க வகைகளில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு அனுகூலமாக அமையும். உங்களுடைய புதிய முயற்சிகளால் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும் கலைப் பொருள்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் உண்டாகும்.

கன்னி

கன்னி

உங்களுடைய வாக்குத் திறமையின் மூலம் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய புதிய முயற்சிகள் உங்களுககுச் சாதகமான பலன்களைத் தரும். வீட்டில் உள்ள பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் தொழில் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். மனதுக்குள் உங்களுக்கு ஆன்மீக நாட்டங்கள் அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் வேண்டும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் உங்களிடம் பணிபுரியும் வேலையாட்களிடம் கொஞ்சம் கனிவுடன் பழகுங்கள். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. உறவினர்களின் மூலம் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும்.முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை உயர் அதிகாரிகளிடம் அதிகரிக்கும்.

துலாம்

துலாம்

நீங்கள் செய்கின்ற தொழிலை அடுத்த நிலைக்கு விரிவுபடுத்துவதற்கான எண்ணங்கள் மேம்படும். முக்கிய அதிகாரப் பதவியில் உள்ளவர்களுக்கு நிறைய புதிய நட்புகள் உருவாகும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த சரக்குகள் முற்றிலுமாக விற்றுத் தீரும். இதுவரையிலும் இழுபறியாக இருந்து வந்த வேலைகள் உங்களுக்கு சிறப்பாக முடியும். மனதுக்குள் இருந்து வந்த சோர்வு மற்றும் களைப்பு தீரும். வாகனங்களில் செல்லுகின்ற பொழுது கொஞ்சம் கவனமாக இருக்க வுண்டும். வியாபாரத்திலும் உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற லாபம் பெறுவீர்கள். பொது சுவைகளில் ஈடுபடுகின்றவர்கள் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். பிள்ளைபளுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால், பொருளாதாரப் பற்றாக்குறையை சரிசெய்யலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்களுடைய புதிய திட்டங்கிளல் சில தடைகளைத் தாண்டி நீங்கள் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். உங்களுடைய புதிய நண்பர்களுடைய அறிமுகங்களினால் உங்களுடைய நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடைய எண்ணிக்கை கொஞ்சம் அதிகரிக்கும். முக்கிய உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் உங்களுக்கு உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பெற்றோர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீட்டில் உள்ளவர்களுடைய எண்ணங்களை அறிந்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளைச் செய்வதை தவிர்ப்பது நல்லது.

தனுசு

தனுசு

இணையதளம் சம்பந்தப்பட்ட பணிகளில் உள்ளவர்களுடைய முயற்சிக்கேற்ற முன்னேற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய சக ஊழியர்களால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் உங்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். கலைத்துறையில் இருக்கின்றவர்களுக்கு எதிர்பார்த்தபடி, சாதகமாக அமையும். நண்பர்களுடன் சுற்றுலாக்கள் செல்லத் திட்டமிடுவீர்கள். உங்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கொஞ்சம் சிந்தித்துச் செயல்படுவது மேன்மையை அளிக்கும். தொழில் சம்பந்தப்பட்ட காரியங்களில் கொஞ்சம் இழுபறியே இருக்கும்.

மகரம்

மகரம்

வீடு மற்றும் வாகனங்கள் தொடர்பான விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தகுந்த ஆலோசனைகளைப் பெற்று செயல்படுங்கள். வழக்கு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். ஏதேனும் புதிய முயற்சிகளை எடுத்தால் அதை மிகவும் நிதானத்துடன் செயல்படுத்தினால் நன்மை உண்டாகும். பொது சேவைகள் செய்கின்றவர்களுக்கு பொது இடங்களில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குழந்தைகளின் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கோபத்தைக் குறைப்பது நன்மையை உண்டாக்கும்.

கும்பம்

கும்பம்

வீட்டில் உள்ளவர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல உங்களுடைய உயர் அதிகாரிகளிடமும் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. அது தேவையற்ற பிரச்சினைகளைத் தீர்க்கும். தொழில் சம்பந்தமான நெடுந்தூரப் பயணங்கள் லாபத்தை உண்டாக்கும். தொழிலில் இருக்கும் போட்டியை நினைத்து சோர்ந்து விடாமல் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். உறவினர்களின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்கின்ற இடத்தில் உடன் பணிபுரிகின்றவர்களுடன் கொஞ்சம் அனுசரித்து நடப்பது நல்லது.

மீனம்

மீனம்

நீங்கள் எதிர்பார்க்காத அளவு தனவரவு உண்டாகும். அது குடும்பத்தில் கலகலப்பையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கும். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சின்ன சின்ன பிரச்சினைகள் வந்து போகும். உங்களுக்கு இருக்கின்ற சந்தேக உணர்வினால் நண்பர்களுக்கு இடையே சின்ன சின்ன மன வருத்தங்கள் உண்டாகலாம். சம வயது உடையவர்களிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடக்கவும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள். நீங்கள் நினைத்தபடி நடக்க கால தாமதமாகும். உங்களுடைய பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான உதவிகளைப் பெறுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, December 17, 2018, 13:55 [IST]
Desktop Bottom Promotion