Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் தீயசக்திகள் உள்ளது என்று அர்த்தமாம் தெரியுமா?
சிலசமயம் நமது செயல்களே நமது இல்லத்திற்கு எதிர்மறை சக்திகளை அழைத்துவரும். அதனால் நமது குடும்பத்தின் நிம்மதியும், மகிழ்ச்சியும் பல வழிகளில் சீர்குலையும்.
நமது வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது பெரும்பாலும் நமது வீட்டை சார்ந்தே உள்ளது. அலுவலகம், சுற்றுலா என பல வெளியிடங்களுக்கு சென்றாலும் நமது உண்மையான மகிழ்ச்சி மறைந்திருப்பது என்னவோ நமது வீட்டில்தான். ஆனால் நமது சில செயல்களே நமது வீட்டிற்கு தீயசக்திகளையும், எதிர்மறை சக்திகளையும் கொண்டுவரும் என்பதுதான் அதிர்ச்சிகரமான செய்தி.

உண்மைதான், சிலசமயம் நமது செயல்களே நமது இல்லத்திற்கு எதிர்மறை சக்திகளை அழைத்துவரும். அதனால் நமது குடும்பத்தின் நிம்மதியும், மகிழ்ச்சியும் பல வழிகளில் சீர்குலையும். நம் வீட்டில் எதிர்மறை சக்திகள் உள்ளதை கண்டறியவும், அதனை விரட்டவும் சில வழிகள் உள்ளது. இதன்மூலம் உங்கள் இல்லம் இழந்த மகிழ்ச்சி உங்களுக்கு மீண்டும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

வீட்டில் ஒழுங்கீனம்
உங்கள் வீடு சுத்தம் இல்லமால் இருப்பதே எதிர்மறை ஆற்றலை உங்கள் இல்லத்திற்கு அழைத்துவரும் ஆகச்சிறந்த முதல் வழி ஆகும். உங்கள் வீடு எப்பொழுதும் சுத்தமாகவும், தெளிவாகவும் இருப்பதில் உறுதியாய் இருங்கள். இதுதான் உங்கள் இல்லத்தின் மகிழ்ச்சியை பாதுகாக்கும் முதல் வழியாகும்.

கையில் இனிப்பை வைத்திருப்பது
உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களோ அல்லது நீங்களே இனிப்பு வாங்கினாலும் அதனை உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும். அதனை இங்கும், அங்குமாய் வைப்பது பூச்சிகளை மட்டுமல்ல எதிர்மறை சக்திகளையும் ஈர்க்கும்.

அழுக்கான உடைகளை உடுத்துவது
அழுக்கான ஆடைகளை உடுத்துவது யாருக்குமே பிடிக்காதுதான். இது உங்கள் மீது கிருமிகள் தொற்றை மட்டும் ஏற்படுத்துவதில்லை, வாஸ்து சாஸ்திரத்தின்படி இது மிகவும் தவறான செயலாகும்.

கடவுள் சிலைகள்
வீட்டில் கடவுள் சிலைகளை நேர் எதிராக வைப்பது துர்சகுனமாகும். இது உங்கள் இல்லத்திற்கு தீயசக்திகளை நீங்களே அழைப்பது போன்றது. சாமி சிலைகளை எப்பொழுதும் ஒருவரை ஒருவர் பார்ப்பது போல வைக்கக்கூடாது. தனித்தனியாகத்தான் வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் தீயசக்திகள் இருக்கிறதா என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம்.

விமர்சனம்
உங்கள் வீட்டில் எதிர்மறை சக்திகள் இருந்தால் உங்கள் வீட்டில் நிறைய விமர்சனங்கள் எழும். உங்களை மற்றவர்கள் விமர்சிப்பார்கள் அல்லது நீங்கள் மற்றவர்களை விமர்சித்து இறுதியில் கத்தி சண்டையுடன் அந்த விவாதத்தை முடிப்பீர்கள்.

தவறாக உணர்தல்
எதிர்மறை சக்திகளின் ஆதிக்கம் உங்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் நீங்கள் வீட்டில் எப்பொழுதுமே எதுவும் சரியில்லை என்று எண்ண தொடங்குவீர்கள். ஒன்று நீங்கள் ஏதவாது தவறான காரியத்தை செய்வீர்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் ஏதாவது சொதப்பி இறுதியில் குடும்பத்தின் நிம்மதி குலையும்.

புகார் கூறுதல்
காரணமேயின்றி வீட்டில் ஒருவர் மீது ஒருவர் புகார்கூறிக்கொண்டே இருப்பீர்கள், குடும்பத்தினர் செய்யும் காரியங்கள் அவர்களை தவிர மற்ற அனைவருக்குமே தவறாக தெரியும். இதனால் அடிக்கடி வாக்குவாதங்கள் எழும். இவ்வாறு இருந்தால் உங்கள் வீட்டில் எதிற்மறை சக்திகள் உள்ளது என்று அர்த்தம். இவ்வாறு பலவழிகளில் உங்கள் நிம்மதியை கெடுக்கும் எதிர்மறை சக்திகளை உங்கள் வீட்டிலிருந்து எளிதில் விரட்டலாம்.

கடல் உப்பு
உப்பு ஒரு கிருமி நாசினி மட்டுமல்ல. அது உங்கள் இல்லத்தி மகிழ்ச்சியையும் தக்கவைக்கும். கடல் உப்பை தண்ணீரில் கலந்து அந்த நீரை கொண்டு வீட்டை சுத்தம் செய்யுங்கள். அதேபோல உங்கள் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் ஒரு கப் உப்பை வைப்பது உங்கள் இல்லத்தில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்டும்.

வீட்டை சுத்தப்படுத்துங்கள்
வாரத்திற்கு ஒருமுறையாவது உங்கள் இல்லத்தை சுத்தப்படுத்துங்கள். உங்களால் முடியுமென்றால் தினமும் கூட சுத்தப்படுத்தலாம். சுத்தம் இருக்கும் இடத்தில்தான் மகாலக்ஷ்மி குடியிருப்பாள். எனவே வீட்டை எப்போதும் சுத்தமாய் வைத்திருக்க உதவுங்கள். குறிப்பாக அதிக தூசிகளும், குப்பையும் சேரும் இடத்தை அடிக்கடி சுத்தப்படுத்துங்கள்.

தேவையில்லாத பொருட்களை தூக்கி எறியுங்கள்
பயன்படுத்தாத புத்தகங்களை பிறருக்கு கொடுத்துவிடுங்கள், பாத்திரங்களுக்கும், உடைகளுக்கும் இதே நிபந்தனைதான். வீட்டில் குறைந்தபட்ச தேவையான பொருட்களை மட்டும் வைத்திருப்பது எதிர்மறை சக்திகளை விரட்டி உங்கள் வீட்டில் உள்ள நேர்மறை ஆற்றலை தக்கவைக்கும்.

கத்தி பேசுவது
சிலருக்கு வீடு எப்போதும் அமைதியாக இருப்பதுதான் பிடிக்கும். அது நல்லதும்தான் கூட. உங்கள் இல்லம் அமைதியாக இருப்பது எந்த அளவிற்கு நல்லதோ அதேயளவு சத்தமாக இருப்பதும் நல்லதுதான். அதிக சத்தம் உங்கள் வீட்டில் உள்ள எதிற்மறை சக்திளின் ஆற்றலை குறைத்து அவற்றை தொந்தரவு செய்து விரட்டக்கூடும். எனவே சில நல்ல இசையை எப்போதும் வீட்டில் ஒலிக்க வையுங்கள்.

திறந்த ஜன்னல்கள்
வானிலை சரியில்லை என்றாலும் கூட சிலசமயம் உங்கள் வீட்டின் ஜன்னல்களை திறந்து வையுங்கள்.புத்துணர்ச்சியான காற்று உங்கள் வீட்டில் உள்ள நேர்மறை சக்திகளை ஊக்குவித்து, எதிர்மறை ஆற்றலை வெளியேற்ற உதவும். இரவு நேரங்களில் வேண்டுமென்றால் ஜன்னல்களை மூடிக்கொள்ளுங்கள்.

நாற்காலிகள்
ஒவ்வொரு 2 அல்லது 3 மாதங்களுக்கு உங்கள் நாற்காலிகளில் ஏதாவது ஒரு மாற்றத்தை செய்யுங்கள். இடத்தை மாற்றுங்கள் அல்லது அவற்றின் மீது கூடுதல் அலங்கார பொருட்களை வையுங்கள். சோபாக்கள் இருக்கும் இடத்தை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.

வீட்டிற்குள் இருக்கும் செடிகள்
வீட்டிற்குள் வளர்க்கும் செடிகள் உங்கள் இல்லத்திற்கு அழகு, வண்ணம், ஆக்சிஜன் மற்றும் நேர்மறை சக்திகளை வழங்குவது. குறைந்த விலையில் அதிக பராமரிப்பு தேவைப்படாத சிறிய செடிகளை உங்கள் வீட்டிற்குள் வளருங்கள்.

பூண்டு
ஒரு பருத்தி துணியில் சில பூண்டு மற்றும் கிராம்பை சேர்த்து கட்டி அதனை உங்கள் வீட்டில் எங்கு எதிர்மறை சக்திகள் அதிகம் உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீகளோ அந்த இடத்தில் கட்டி தொங்கவிடுங்கள். அல்லது உங்கள் வீட்டின் முன்புறத்தில் கட்டி தொங்கவிடுங்கள். இது பேய்கள் மற்றும் தீயசக்திகளை விரட்ட உதவும்.



Click it and Unblock the Notifications











