For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமானுக்கு ஒரு சகோதரி இருந்தது உங்களுக்கு தெரியுமா?

இந்துக்களின் மிகமுக்கிய கடவுளான சிவபெருமான் அழிக்கும் கடவுள் என நாம் அனைவரும் அறிவோம். அவரின் மனைவிகள், மகன்கள் பற்றி கூட நாம் அறிவோம். ஆனால் அவரின் சகோதரி பற்றியும், அவரை கைலாயத்தை விட்டு நீங்கும்படி

|

இந்து மதம் என்பது பல ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிறைந்த ஒன்று. இந்து மதத்தில் இருக்கும் ஒவ்வொரு கடவுளுக்கும் அவர்களின் ;பிறப்புக்கு ஒரு நோக்கமும், ஒரு கடமையும் இருக்கும். சில கடவுள்களின் பிறப்புகள் மர்மமாக கூட இருக்கும். அப்படி பலரும் அறியாத ஒரு மர்மத்தை பற்றித்தான் இப்பொழுது நீங்கள் தெரிந்து கொள்ள போகிறீர்கள்.

இந்துக்களின் மிகமுக்கிய கடவுளான சிவபெருமான் அழிக்கும் கடவுள் என நாம் அனைவரும் அறிவோம். அவரின் மனைவிகள், மகன்கள் பற்றி கூட நாம் அறிவோம். ஆனால் அவரின் சகோதரி பற்றியும், அவரை கைலாயத்தை விட்டு நீங்கும்படி கூறியது பார்வதி தேவிதான் அதைப்பற்றியும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவபெருமானுக்கு சகோதரியா?

சிவபெருமானுக்கு சகோதரியா?

உண்மைதான். சிவபெருமானுக்கு ஒரு சகோதரி உள்ளார். ஆதியும், அந்தமும் அற்ற ஈசனுக்கு எப்படி சகோதரி இருக்க முடியும் என்று உங்களுக்குள் கேள்வி எழலாம். ஆனால் சிவபுராணத்தின் படி ஈசனுக்கு ஒரு சகோதரி உள்ளது உண்மை. அவரின் பெயர் தேவி அஷாவரி. சிவபெருமான் தன் மனைவி பார்வதியின் வலியுறுத்தியதால் அஷாவரியை உருவாக்கினார்.

பார்வதியின் கைலாய வருகை

பார்வதியின் கைலாய வருகை

ஈசனுக்கும், பார்வதிக்கும் திருமணம் முடிந்து பார்வதி தேவி தன் புகுந்த வீடான கைலாயத்திற்கு வந்தார். அங்கே அவர் தன் குடும்பத்தினரையும், சகோதரிகளையும் பிரிந்து மிகவும் வருத்தப்பட்டார். என்னதான் சிவபெருமான் அன்போடு கவனித்து கொண்டாலும் சிவனின் பக்தர்கள் பூஜித்தாலும் பார்வதி தேவிக்கு மனதிற்குள் இந்த குறை இருந்து கொண்டே இருந்தது.

பார்வதியின் வேண்டுகோள்

பார்வதியின் வேண்டுகோள்

சிவபெருமான் தியானம் முடித்து எழுந்தவுடன் பார்வதி தேவி தன் ஆசையை சிவனிடம் தெரிவித்தார். தனக்கு ஒரு பெண் தோழி வேண்டுமெனவும், தன் ஆசைகள் மற்றும் கவலைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். ஏனெனில் கைலாயத்தில் பார்வதியை தவிர மற்ற அனைவரும் ஆண்களாகவே இருந்தனர்.

சிவனின் பதில்

சிவனின் பதில்

அதற்கு ஈசனோ தேவி சரஸ்வதி என்னுடைய சகோதரி போன்றவர் நீ அவரிடம் அனைத்தையும் பகிர்ந்துகொள்ளலாமே என்று வினவினார். அதற்கு பார்வதி அவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கும். அதுமட்டுமின்றி அவர் பிரம்மாவின் மனைவி எனவே அவர் பிரம்மாவுடன் தான் இருக்க வேண்டும். நான் நினைக்கும்போதெல்லாம் அவரால் இங்கு வரமுடியுமா? என்று கேட்டார். பார்வதியின் இந்த பதில் சிவபெருமானுக்கு சரியாகவே பட்டது.

சிவனின் நிபந்தனை

சிவனின் நிபந்தனை

பார்வதி கூறிய பதிலை ஏற்றுக்கொண்ட ஈசன் தனக்கு ஒரு சகோதரியை உருவாக்க சம்மதித்தார். ஆனால் அவரை வாழ்நாள் முழுவதும் பார்வதி தேவிதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதித்தார். ஆர்வத்தின் காரணமாக பார்வதி தேவி யோசிக்காமல் அதற்கு சம்மதித்தார்.

சிவனின் குழப்பம்

சிவனின் குழப்பம்

மரணத்தின் கடவுளான சிவபெருமானுக்கு ஒரு பெண்ணை எவ்வாறு உருவாக்குவதென்று சரியாக தெரியவில்லை. எனவே தன்னை மனதில் நிறுத்தி தன்னை போலவே ஒரு பெண்ணை படைத்தார். ஈசனால் உருவாக்கப்பட்ட தேவி அஷாவரி கிட்டத்தட்ட ஈசனை போலவே இருந்தார், நீண்ட, பரந்த முடியுடன், விரிந்த பாதங்களுடனும், தோலுடை தரித்து இருந்தார்.

அஷாவரியின் பிரச்சினை

அஷாவரியின் பிரச்சினை

அஷாவரிய பார்வதி தேவியிடம் அழைத்து சென்றார் சிவபெருமான். தனக்கு புது உறவு கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். இனி இவளை பார்த்துக்கொள்வது உன் பொறுப்பு என்று கூறிவிட்டு ஈசன் அங்கிருந்து நகர்ந்தார். பார்வதி அஷாவரியை குளிப்பாட்டி அவருக்கு உணவு ஊட்ட தொடங்கினர். அங்குதான் தொடங்கியது பிரச்சினை. எவ்வளவு சாப்பிட்டும் அஷாவரியின் பசி அடங்கவில்லை. மேலும் மேலும் கேட்டு கொண்டே இருந்தார். கைலாயத்தில் இருந்த மொத்த உணவும் தீர்ந்து விட்டது. தன் நிலையை சிவனிடம் விளக்க விரைந்தார் பார்வதி.

அஷாவரியின் பொய்

அஷாவரியின் பொய்

அவ்வாறு செல்லும்போது பார்வதி தேவி கீழே விழ அஷாவரி தன் விரிந்த பாதங்களுக்கு இடையில் பார்வதியை மறைத்துவிட்டார். சிவபெருமான் வந்து பார்வதி எங்கே என்று கேட்கும்போது தனக்கு தெரியாது என்று பொய் கூறிவிட்டார். உண்மை அறிந்த ஈசன் அஷாவரியை எச்சரித்தார். அஷாவரியின் மோசமான நடவடிக்கைகளால் கோபமுற்ற பார்வதி தேவி அஷாவரியை கைலாயம் விட்டு செல்லும்படி கூறினார்.

மன்னிப்பு கேட்ட பார்வதி

மன்னிப்பு கேட்ட பார்வதி

பார்வதி அப்படி கூறியவுடன் பார்வதி தேவி கூறிய வாக்கை ஈசன் அவருக்கு நியாபகபடுத்தினார். தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்ட பார்வதி அஷாவரியை அங்கிருந்து அனுப்பும்படி கூறினார். ஈசன் அஷாவரிக்கு மீண்டும் ஒரு ஜென்மம் கொடுத்து சில நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

சிவனின் மறுப்பு

சிவனின் மறுப்பு

அஷாவரி மீண்டும் நல்ல பழக்கவழக்கங்களுடன் வந்தால் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று பார்வதி கூறினார். ஆனால் சிவன் அதனை மறுத்துவிட்டார். ஒருவரின் மோசமான நேரத்தில் நீ அவரை ஆதரிக்காவிட்டால் அவரின் நல்லபடியாக இருக்கும்போது அவரை உரிமை கொண்டாட உனக்கு உரிமையில்லை என்று கூறிவிட்டார். இதிலிருந்து ஈசனுக்கு புரிந்தது என்னவென்றால் கடவுளாகவே இருந்தாலும் வெவ்வேறு வயிற்றில் பிறந்த இரு பெண்கள் ஒரு இடத்தில் அமைதியாக இருக்க முடியாது என்று புரிந்துகொண்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Untold story about Lord Shiva's sister

How many of you know that Lord Shiva had a sister? Yes, he had a sister. Her name Devi Asavari.
Story first published: Friday, September 21, 2018, 11:02 [IST]
Desktop Bottom Promotion