For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  நடிகையால் வெளியேற்றப்பட்ட சிறுவன் இன்று நம்பர் 1 ஹீரோ!

  |

  சினிமாவில் ஜெயிப்பது மக்கள் மனங்களில் இடம் பிடிப்பது என்பதெல்லாம் சாதரண விஷயம் கிடையாது. வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு நாம் அடுத்தடுத்து விடாமுயற்சியுடன் போராட வேண்டும்.

  இது நம்முடைய உழைப்பினை மட்டும் பொறுத்ததல்ல என்பதால் உங்களுக்கான வெற்றி கிடைக்க நீண்ட காலம் ஆகலாம். அப்போது நீங்கள் சந்திக்கிற அவமானங்கள், உதாசீனங்கள் ஆகியவற்றை கண்டு அஞ்சி அதிலிருந்து விலகினால் அவ்வளவு தான் உங்களது கனவு எல்லாம் வீணாகிவிடும். உங்களின் வெற்றியிடமிருந்து யாரும் உங்களை பிரிக்க முடியாது என்பதை முதலில் உணருங்கள். அதற்கான உழைப்பினை மட்டும் கொடுத்துக் கொண்டேயிருங்கள்.

  இங்கே அப்படி விடாமுயற்சியுடன் போராடி இன்றைக்கு பாலிவுட்டின் முன்னணியில் இடம் பிடித்திருக்கும் ஒரு ஹீரோவைப் பற்றிய கதை.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  ரவீனா டண்டன் என்பவர் 90களில் டாப் நட்சத்திர ஹீரோயினாக பாலிவுட்டில் வலம் வந்தார். சல்மான் கானுடன் முதல் படம்,அக்‌ஷை குமாருடன் காதல் கிசுகிசு என ஏகப்பிரபலம். இவருக்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளமே அப்போது இருந்தது.

  அவரது திரைப்படத்திற்கு வருகிற அதேயளவு கூட்டம் ரவீனாவின் ஷூட்டிங் வேடிக்கை பார்க்கவும் நிற்பார்கள். ரவீனா இருக்கும் இடம் எப்போதும் அவரது ரசிகர்களால் கூட்டமாக இருக்கும்.

  #2

  #2

  மும்பையில் இருக்கிற ஒரு கல்லூரியில் ரவீனா மற்றும் அக்‌ஷை குமார் நடித்த பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. ரவீனாவின் நடனம் என்றால் சும்மா இருப்பார்களா... கூட்டம் கூடிவிட்டார்கள். மெல்லிய வெள்ளை நிறத்தில் சேலை அணிந்திருந்தார் ரவீணா.

  #3

  #3

  கூட்டத்தினர் எல்லாரும் ரவீனா ரவீனா... என்று கத்துகிறார்கள். ஹூட்டிங் எடுப்பதற்கு இடைஞ்சலாய் இருப்பதாக சொல்லி இயக்குநர் மற்றும் அங்கிருப்பவர்கள் ரசிகர்களை அப்புறப்படுத்தினார்கள். ஒரு வழியாக ரசிகர்களின் கூட்டம் சற்று கலைக்கப்பட்டது. சிலர் வெளியேற, சிலர் இடம்மாற சிலர் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள்.

  #4

  #4

  நடன இயக்குநர் வந்து ரவீனாவிற்கு ஸ்டெப்ஸ்களை சொல்லிக் கொடுத்தார். அக்‌ஷை குமாரும் ரவீனாவும் அதனை பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். அப்படி பயிற்சி எடுத்து ஆடிக் கொண்டிருக்கும் போது யதார்த்தமாக இடது பக்கம் பார்த்தால் ஒரு சிறுவன் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

  வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ரவீனா தன்னைப் பார்க்கிறார் என்பதைக் கூட உணராமல் ஒரு நடிகையை மிகவும் அருகிலிருந்து பார்க்கிறோம் என்ற ஆர்வத்தில் அப்படியே பார்த்துக் கொண்டு இருந்தானாம் அந்த சிறுவன்.

  Image Courtesy

  #5

  #5

  இரண்டு மூன்று முறை அந்த சிறுவனை ரவீனா கவனித்து விட்டார். எல்லா நேரங்களிலும் அந்த சிறுவன் ரவீனாவையே பார்த்துக் கொண்டு பிரம்மிப்புடன் நின்று கொண்டிருந்தான். இது ரவீனாவிற்கு சங்கோஜத்தை ஏற்படுத்தவே... தன் உதவியாளரை அழைத்து அந்த சிறுவனை கை காட்டி ஏதோ கிசுகிசுத்தார்.

  உடனே அவர் அந்த சிறுவனை அந்த அறையை விட்டே வெளியில் அனுப்பினார்.

  #6

  #6

  முதலில் மறுத்த அந்த சிறுவன், தன்னை விட பலம் வாய்ந்த ஒருவர் வலுக்கட்டாயமாக வெளியில் இழுத்து விட்ட போது மறுப்பேதும் சொல்ல முடியவில்லை.

  தன் ஆசை நாயகி நடனமாடுவதை பார்க்கமுடியாத ஏக்கத்தில் அந்த சிறுவன் அந்த இடத்திலேயே உட்கார்ந்து அழுகிறான்.

  #7

  #7

  அழுத அந்த சிறுவனுக்கு அப்போது பன்னிரெண்டு வயதிருக்கும். அந்த இடத்திலிருந்து வெளியேற்றிய அந்த அவமானம் சிறுவனை அதே துறையில் நடிகனாகவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது.

  ரசிகனாக இருந்தவர் அதன் பிறகு சினிமா கனவுகளுடன் சுற்ற ஆரம்பித்தார். தனக்கான மேடையை அமைத்துக் கொண்டார். வாய்ப்புகளை தேடி அழைந்தார் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். இன்றைக்கு பேரும் புகழும் பெற்று பாலிவுட் சினிமாவின் முதன்மையான இடத்தில் இருக்கிறான் அந்த சிறுவன்.

  அந்த சிறுவன் வேறுயாருமல்ல... ரன்வீர் சிங்!

  #8

  #8

  இன்றைக்கு ரன்வீரை பார்ப்பதற்கென்றே ஆண்கள், பெண்கள்,குழந்தைகள் என ஏராளமானோர் காத்துக் கிடக்கிறார்கள். பதினோராவது டி-20 ஆரம்பிக்கப்பட்ட போது ரசிகர்களை உற்சாகப்படுத்த ரன்வீரின் பதினைந்து நிமிட பெர்ஃபார்மென்ஸுக்கு பேசப்பட்ட தொகை ஐந்து கோடி ரூபாய்!

  Image Courtesy

  #9

  #9

  இதுவரைக்கு திரைப்படங்களைத் தான் கோடிக்கணக்கான பட்ஜெட் போட்டு எடுப்பார்கள். அதிலும் இப்போதெல்லாம் லோ பட்ஜெட் படங்கள் தான் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கிறது.

  ஆனால் ரன்வீர் சிங்கின் விளம்பரம் ஒன்று 75 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. சீன உணவு விளம்பரம் ஐந்து நிமிடம் ஓடக்கூடியது. அதற்கு ரன்வீர் சிங் தூதரானதிலிருந்து அந்த உணவுப்பொருளுக்கு அளவுக்கு அதிகமான லாபம் கிடைத்திருக்கிறதாம். அந்த விளம்பரத்தை அதிகமானோர் இணையத்தில் பார்வையிட்டும் சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Thrown Out From Shooting Spot Now He is Bollywood Hero

  Thrown Out From Shooting Spot Now He is Bollywood Hero
  Story first published: Tuesday, June 12, 2018, 12:20 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more