Latest Updates
-
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா?
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க..
Men's Health Tips in Tamil: தற்போது ஆண்களிடையே கருவுறாமை பிரச்சனை அதிகரித்து வருவதோடு, பொதுவானதாகிவிட்டது. இப்படியான நிலை ஏற்பட காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், மோசமான உணவுப் பழக்கங்களும் தான். பொதுவாக திருமணமான தம்பதிகள் அனைவருமே தங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும், குடும்பத்தை விரிவுபடுத்தவும் பெற்றோராவதற்கு விரும்புகின்றனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக சில ஆண்கள் தந்தையாக மாற சிரமப்படுகின்றனர். இதற்கு அவர்களின் விந்தணுக்களின் தரமும், ஆரோக்கியமும், எண்ணிக்கையும் குறைவாக இருப்பதும் தான். இதன் விளைவாக தனது துணையை கருத்தரித்த வைக்க முடியாமல் சவால்களை சந்திக்க நேரிடுகிறது.
முன்பெல்லாம் ஒரு பெண்ணால் கருத்தரிக்க முடியாமல் போனால் அதற்கு பெண்கள் தான் காரணம் என்று பலரும் கருதுவார்கள். ஆனால் கருத்தரிக்க முடியாமல் போக பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படி ஆண்கள் சந்திக்கும் கருவுறாமை பிரச்சனைக்கு, அதிர்ஷ்டவசமாக உணவுகளின் மூலம் சரிசெய்ய முடியும் என்பது தெரியுமா? ஆம், ஆண்களின் விந்தணுக்களின் தரத்தையும், நீந்தும் திறனையும், ஆரோக்கியத்தையும், எண்ணிக்கையையும் ஒருசில உணவுகளை உட்கொள்வதன் மூலம் அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் பலரும் கூறுகின்றனர்.
டாக்டர் பிள்ளை அவர்களும் தனது இன்ஸ்டா பக்கத்திலும் விந்துவை கெட்டியாக்கி, அதன் ஆரோக்கியத்தையும் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவும் 5 சூப்பர் உணவுகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "பொதுவாக வெயிலில் அதிகமாக வேலை செய்வது, நிறைய நேரம் மிஷின்களில் வேலை செய்வது, அதிகப்படியான மன அழுத்தம் போன்றவை உடலின் சூட்டை அதிகரித்து விந்தணுக்களை பாதிக்கிறது. விந்தணுக்கள் அதன் தரம், நீந்தும் திறன், அதன் அளவு, அமைப்பு போன்ற அனைத்திலும் சரியாக இருந்தால் மட்டும் தான் கருத்தரிக்க முடியும். விந்தணுக்களின் தன்மையானது எந்த அளவு கெட்டியாக உள்ளதோ, அந்த அளவு நன்றாக உள்ளது என்று அர்த்தம். எந்த அளவு நீர்த்து போகிறதோ, அந்த அளவு தரம் குறைந்துள்ளது என்று அர்த்தம்." என்று கூறினார். அதுமட்டுமின்றி, 5 உணவுகளையும் பகிர்ந்துள்ளார். அந்த உணவுகள் பின்வருமாறு:
1. முட்டை
"முட்டை என்பதே ஒரு கரு தான். இந்த முட்டையில் உள்ள சத்துக்கள் விந்தணுக்கள் உருவாவதற்கும், அதன் உற்பத்திக்கும் பெரிதும் உதவுகிறது." என்று கூறினார். முட்டைகளில் உயர்தரமான புரோட்டீன், வைட்டமின் பி12, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளன. இதில் உள்ள வைட்டமின் பி12 விந்தணுக்களில் டி.என்.ஏ உருவாக்கம் மற்றும் ஆற்றல் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே போதுமான அளவு வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை உட்கொள்வது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் நீந்தும் திறன் போன்றவற்றை மேம்படுத்துவதாக ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. ஆகவே ஆண்களே தினமும் தவறாமல் முட்டை சாப்பிடுங்கள்.
2. கீரைகள்
"கீரைகளும் விந்தணுக்களின் ஆரோக்கியத்தையும், எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவுகிறது. கீரைகளில் உள்ள ஃபோலேட், விந்தணுக்களின் அமைப்பு மற்றும் வடிவம் சரியாக இருப்பதற்கும், அதன் டிஎன்ஏ-வை சரியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது." என்று கூறினார். ஆகவே விந்தணு தொடர்பான பிரச்சனைகள் ஏதும் வரக்கூடாதெனில், கீரைகளை வாரத்திற்கு 3 முறை சேர்த்துக் கொள்ளுங்கள்.
3. பருப்பு வகைகள் மற்றும் கொள்ளு
"பருப்பு வகைகள் மற்றும் கொள்ளு ஆகியவை விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, விந்து கெட்டிப்பட உதவுகிறது." என்று டாக்டர் கூறினார். எனவே விந்தணு பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் மற்றும் கருத்தரிக்க முயலும் ஆண்கள் தங்களின் உணவில் புரோட்டீன் நிறைந்த பருப்பு வகைகள் மற்றும் கொள்ளு பருப்பை அடிக்கடி சேர்த்து வாருங்கள். இதன் மூலம் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
4. வேர்க்கடலை மற்றும் பலாப்பழ விதை
"விந்தணுக்களின் எண்ணிக்கையையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த சாப்பிட வேண்டிய மற்றொரு உணவுப் பொருட்கள் தான் வேர்க்கடலையும், பலாப்பழ விதையும். இவை இரண்டுமே விந்துவை கெட்டிப்படுத்த உதவுகின்றன. இதற்கு அதில் உள்ள எல் அர்ஜினைன் என்னும் மூலப்பொருள் தான் காரணம். இது தவிர பாதாம், பிஸ்தா, முந்திரி, பூசணி விதை போன்றவைகளும் விந்து கெட்டிப்படி பெரிதும் உதவி புரியும்" என்று டாக்டர் கூறினார்.
5. வாழைப்பழம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த கொழுப்பு மீன்கள்
"கடைசியாக ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்றால் அது வாழைப்பழமும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களும் தான். இவை இரண்டுமே ஆண்களின் விந்து கெட்டிப்படுவதற்கும், அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நீந்தும் திறனை மேம்படுத்தவும், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன" என்று கூறினார்.
நினைவில் கொள்ள வேண்டியவை
விந்துவை கெட்டிப்படுத்த மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வருவது மட்டுமல்லாமல், பின்வருவனவற்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.
* மதுப் பழக்கம், சிகரெட் பழக்கம் போன்றவற்றை கைவிட வேண்டும்.
* வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.
* புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகள், வைட்டமின் அதிகம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுக்க வேண்டும். முக்கியமாக பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

