Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
ஐஸ்வர்யா மாதிரி அடிக்கடி மூடு மாறிக்கிட்டே இருக்கும் ராசிகள் எதுன்னு தெரியுமா? இந்த ஆறும் தான்
தங்களுடைய மனநிலை அடிக்கடி பிறழ்ச்சி அடையும் ராசிக்காரர்களும் அவர்களுடைய குணங்களும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் நண்பர் குழுவில் யாரவது ஒருவர் மட்டும் அடிக்கடி எரிச்சல் அடைவதை பார்த்ததுண்டா? உங்கள் கல்லூரியில் ஒருவர் மட்டும் எப்போதும் ஒரு நல்ல நிகழ்வை கெடுத்ததுண்டா?

உங்கள் துணைவரின் மனநிலையில் எப்போதும் மாற்றம் ஏற்பட்டு, அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் இருந்ததுண்டா? இவர்கள் அனைவருக்கும் அடிக்கடி மனநிலை மாற்றம் உண்டாவது தான் இதற்குக் காரணம்.

மனநிலை மாற்றங்கள்
பிக்பாஸ் ஐஸ்வர்யாவையும் அவரோட மூடையும் புரிஞ்சிக்க யாராலயும் முடியல. ஏன் உலக நாயகனாலயும் முடியல. இது ஐஸ்வர்யாவுக்கு மட்டுமில்லைங்க. அதேபோல் தான் நம்முடைய மளநிலையும். சில நேரம் நமது நெருங்கிய நண்பர்களின் மனநிலை மற்றும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர்கள் நடந்து கொள்ளும் முறை ஆகியவை பற்றி நாம் உணர்ந்திருப்போம். ஆனால் வெளிமனிதர்கள் மனநிலையை அறிந்து கொள்வது என்பது சற்று கடினமான ஒரு செயல் தான். குறிப்பாக அடிக்கடி மனநிலை மாற்றம் உண்டாகும் நபராக இருந்தால் அவரைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம்.
ஆனால் ஜோதிடம் மற்றும் ராசியின் மூலம் ஒருவரின் மனநிலையை அறிந்து கொள்ள முடியும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆகவே மனநிலை மாற்றம் அடிக்கடி ஏற்படும் சில ராசிகள் பற்றி இப்போது இந்த பதிவில் நாம் காணலாம். ஐஸ்வர்யா மாதிரி அடிக்கடி மூடு மாறிக்கிட்டே இருக்கும் ராசிகள் எதுன்னு தெரியுமா? இந்த ஆறும் தான்

மேஷம் : 21 மார்ச் - 20 ஏப்ரல்
மேஷ ராசியினரின் மனநிலையில் மாற்றத்தை உண்டாக்க எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் தேவையில்லை. இவர்களுக்கு அடிக்கடி மனநிலை மாற்றம் உண்டாகிறது. இவர்களுக்கு மனநிலை மாற்றம் என்பது ஒரு பொதுவான நிகழ்வு. அடிக்கடி இவர்களின் மனநிலையில் மாற்றம் உண்டாகிக் கொண்டே இருக்கும். இவர்களின் மன நிலைக்கு ஏற்ற விதத்தில் தான் இவர்களில் செயல்பாடுகள் இருக்கும் என்பது முக்கியமான ஒரு விஷயம். சந்தோஷமாக இருக்கும்போது எதிரியைக் கூட உபசரிக்கும் இவர்கள், கோபத்தில் இருக்கும் போது நண்பர்களைக் கூட தூக்கி எரிந்து பேசும் தன்மை கொண்டவர்கள். ஆனால் இவர்களின் மனநிலை மாற்றம் என்பது நீண்ட நேரம் நீடித்திருக்காது என்பது ஒரு நல்ல விஷயம்.

மிதுனம் : 22 மே - 21 ஜூன்
மிதுன ராசியினர் விஷயத்தில் இது ஒரு சிக்கலான செய்தி. சமூக ஊடகங்களில் இவர்களின் மனநிலை மிகச்சிறப்பாக வெளிப்படும். இவர்கள் வாழ்வில் வெளிப்படும் எந்த ஒரு இன்பமான மற்றும் துன்பமான நிகழ்வுகளைப் பற்றி சமூக ஊடகங்களில் பகிரவே அதிகம் விரும்புவார்கள். சில நேரங்களில் தங்கள் சந்தோஷ சம்பவங்களை பகிர மறந்தாலும், துக்க நினைவுகளைப் பகிர மறக்க மாட்டார்கள்.
நீங்கள் மிதுன ராசியினரிடம் எப்படி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினால், நன்றாக இருப்பதற்கு ஆயிரம் காரணம் கூறினாலும், கடைசியில் அவர்களின் துன்பத்திற்கான ஒரு காரணத்தையாவது கூறுவார்கள். அவர்களின் சோக மனநிலை மாறியவுடன், அவர்கள் சமூக ஊடகத்தில் இட்ட சோக பதிவிற்காக வருத்தம் தெரிவிப்பது இவர்களிடம் இருக்கும் ஒரு சுவாரசியமான பழக்கம்.

கடகம் : 22 ஜூன் - 22 ஜூலை
எதையும் ஆழமாக சிந்திக்கும் மனநிலை கொண்டவர்கள் கடக ராசியினர். மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் என்பதால் எப்போதும் சோகமாகவே இருப்பார்கள். உங்களுக்கு தெரிந்தவர்களில் மிகவும் சோகமான நண்பர் யார் என்று உங்கள் நண்பரிடம் கேட்டால் அவரின் பதில் நிச்சயம் கடக ராசியைக் கொண்ட நண்பராகத்தான் இருக்க முடியும். கடக ராசியினர், தங்கள் மேல் அன்பு செலுத்தி அரவணைக்கும் ஒரு நபரிடம் மொத்த அன்பையும் வாரி வழங்குவர். ஆனால் மோசமான மனநிலையின் போது அவர்களை விட்டு விலகிச் செல்லவே விரும்புவார்கள்.
தேவையற்ற வீண் விவாதத்தால் மற்றும் கடும் சொற்களால் தனது அன்புக்குரியவர்களை நோகடிக்க மனமில்லாமல் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்வது இவர்களின் வழக்கம். மற்றவரின் உணர்வைப் பற்றி கவலைப்பட்டாலும் அவர்களின் மனநிலையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையால் இந்த நிலை உண்டாகிறது. சில நேரங்களில், ஒரு நபரைப் பற்றி அவர் கூறும் கருத்து என்பது அவரின் அப்போதைய மனநிலையைச் சார்ந்தே அமைகிறது.

துலாம் : 24 செப்டம்பர் - 23 அக்டோபர்
துலா ராசியினர், அவர்களைச் சுற்றி நடைபெறும் செயல்களினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எதற்கும் ஆகாத விஷயங்களுக்காக எப்போதும் கவலைக் கொள்வார்கள். அதனால் எப்போதும் அவர்கள் மனநிலையில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். ஆகவே எந்த ஒரு விஷயத்திற்கும் இன்பம் மற்றும் துன்பம் மாறி மாறி இவர்களுக்கு வந்து கொண்டே இருக்கும். மேலும் ஒழுங்கற்ற மனநிலையின் போது மற்றவர்களிடம் ஏடாகூடமாக நடந்து கொண்டு பின்பு இதற்காக வருத்தப்பட்டு அந்த நேரத்திலும் அவர்கள் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

விருச்சிகம் : 24 அக்டோபர் - 22 நவம்பர்
விருச்சிக ராசியினர் ஆழமானவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் உணர்ச்சிபூர்வமாக சிந்திப்பார்கள். இது இவர்கள் மனநிலையில் மாற்றத்தை உண்டாக்கி அது முகத்தில் பிரதிபலிக்கும். இவர்களின் மனதில் உண்டாகும் மாற்றம், முகம், குணம், உடல் மொழி, பேச்சு என்று எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும். அதனால் ஒவ்வொரு முறை இவர்களைப் பார்க்கும் போது ஒவ்வொரு விதமாக தோன்றுவார்கள். விருச்சிக ராசியினர் எப்படிப் பட்டவர்கள் என்பதை உங்களால் கணிக்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. அவர்களும் நீங்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை உங்கள் மனநிலையை வைத்து தான் உங்களைப் பற்றி தீர்மானிப்பார்கள்.

மீனம் : 20 பிப்ரவரி - 20 மார்ச்
தேவையில்லாதவற்றை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளும் ராசியினர் இவர்கள். ஒரு சிறிய விஷயம் கூட இவர்களை எளிதில் பாதிக்கும். இவர்களின் இந்த பாதிப்பு இவர்கள் மனநிலையில் மாற்றத்தை உண்டாக்கும். எளிதில் இவர்களை சோகமாக்க முடியும். இவர்களுடைய பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு இருப்பதால் இவர்களின் மனநிலை குறித்து யாராலும் யூகிக்க முடியாது. அதனால் இவர்கள் உள்மனதில் இருக்கும் குழப்பத்திற்கான பாதிப்பு கண் முன் இருக்கும் சூழ்நிலைக்கான செயல்களில் பிரதிபலிக்கிறது.



Click it and Unblock the Notifications











