உங்களின் இந்த செயல்கள் மஹாலக்ஷ்மியின் சாபத்தை மட்டும்தான் பெற்றுத்தரும்

உங்களுக்கு தெரியாமல் தினசரி செய்யும் உங்களின் சில செயல்கள் லக்ஷ்மிதேவியின் கோபத்தை உங்களுக்கு பெற்றுத்தருகிறது. இந்த செயல்கள் உங்களுக்கு சாதாரணமானதாக தெரியலாம் ஆனால் லக்ஷ்மி தேவிக்கு இவை கொடும்பாவங்கள

இந்து புராணத்தின் படி செல்வம் மற்றும் வளத்தின் கடவுளாக கருதப்படுபவர் மஹாலக்ஷ்மி. ஒருவரின் வாழ்க்கையில் செல்வம் குவிந்து பண பிரச்சினைகள் நீங்க லக்ஷ்மிதேவியின் அருள் மிகமுக்கியமானது. மஹாலக்ஷ்மியின் அருளை பெற பல வழிகள் உள்ளது. வீட்டை தூய்மையாக வைத்திருப்பது, இறைவழிபாடு, லக்ஷ்மி மந்திரம் என உங்களுக்கு லக்ஷ்மி தேவியின் அனுகூலத்தை பெற பல வழிகள் உள்ளது.

these things can invite the wrath of goddess Lakshmi

அதேசமயம் உங்களுக்கு தெரியாமல் தினசரி செய்யும் உங்களின் சில செயல்கள் லக்ஷ்மிதேவியின் கோபத்தை உங்களுக்கு பெற்றுத்தருகிறது. இந்த செயல்கள் உங்களுக்கு சாதாரணமானதாக தெரியலாம் ஆனால் லக்ஷ்மி தேவிக்கு இவை கொடும்பாவங்களாகும். இந்த பதிவில் நீங்கள் செய்யும் எந்த செயல்கள் உங்களுக்கு லக்ஷ்மி தேவியின் சாபத்தை பெற்றுத்தருகிறது என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஹாலக்ஷ்மி

மஹாலக்ஷ்மி

மஹாலக்ஷ்மி குடியிருக்கும் இல்லத்தில் செல்வத்துக்கும், மகிழ்ச்சிக்கும் ஒருபோதும் குறை இருக்காது. ஆனால் லக்ஷ்மி தேவி எப்பொழுதும் ஒரே இடத்தில் இருக்கமாட்டார். ஏனெனில் வீட்டில் நிலவும் சூழ்நிலைதான் லக்ஷ்மிதேவியை அதே இடத்தில கட்டிப்போடும். அங்கு அமைதியும், சுத்தமும் இல்லாத போது லக்ஷ்மிதேவி அது இருக்கும் இடம் நோக்கி சென்றுவிடுவார். எனவே நீங்கள் செய்யும் செயல்களில் எச்சரிக்கையாய் இருங்கள். குறிப்பாக மாலை நேரங்களில். சில செயல்களை மாலை நேரங்களில் செய்வது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

துளசி வழிபாடு

துளசி வழிபாடு

துளசியை வழிபடுவதும் அதற்கு தண்ணீர் ஊற்றுவதும் புனிதமான செயல்களாக கருதப்படுகிறது ஆனால் இதனை மாலை நேரத்தில் செய்வது பாவசெயலாக கருதப்படுகிறது. எனவே மாலை நேரத்தில் துளசிக்கு தண்ணீர் விடாமல் கான் அருகில் ஒரு நெய்விளக்கை மட்டும் ஏற்றிவையுங்கள். இது உங்கள் வீட்டில் உள்ள தீயசக்திகளை விரட்டுவதுடன் லக்ஷ்மி தேவியையும் உங்கள் இல்லம் நோக்கி அழைத்து வரும்.

மாலை நேரத்தில் வீட்டை கூட்டுவது

மாலை நேரத்தில் வீட்டை கூட்டுவது

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வீட்டை கூட்டுவது அபசகுணமான செயலாகும். சாஸ்திரங்களின் படி மாலை நேரத்தில் நீங்கள் வீட்டை கூட்டி குப்பைகளை வெளியே தள்ளுவது உங்கள் அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தையும் வெளியே தள்ளுவது போன்றதாகும்.

உடல்ரீதியான நெருக்கம்

உடல்ரீதியான நெருக்கம்

மாலை நேரத்தில் உடல்ரீதியான நெருக்கத்திலும், உறவிலும் ஈடுபடுவது சாஸ்திரங்களின் படி தவறான ஒரு செயலாகும். இந்து புராணங்களின்படி மாலை நேரத்தில் உறவில் ஈடுபாடுவது குடும்பத்தில் அமைதியை சீர்குலைப்பதோடு, துரதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும்.

அஸ்தமனத்தின் போது தூங்குதல்

அஸ்தமனத்தின் போது தூங்குதல்

கதிரவன் மறையும் நேரம் நீங்கள் தூங்குவது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதோடு, உங்கள் வீட்டுக்கு தீயசக்திகளையும் வரவேற்கும். இது சாஸ்திரரீதியாக பிரச்சினை ஏற்படுத்துவதோடு ஆரோக்கியரீதியாகவும் பிரச்னைகளை ஏற்படுத்தும். மாலை நேரத்தில் தூங்குவது எடை அதிகரிப்பு, தூக்கமின்மை போன்ற ஆரோக்கிய சீர்கேடுகளை உருவாக்கும்.

அசுத்தமான பாத்திரங்கள்

அசுத்தமான பாத்திரங்கள்

மாலை நேரத்தில் எப்பொழுதும் பாத்திரம் கழுவக்கூடாது. முடிந்தளவு அதற்கு முன்னரோ அல்லது இரவு நேரத்திலோதான் கழுவவேண்டும். பாத்திரங்களை அவற்றின் தேவை முடித்தவுடனேயே சுத்தம் செய்துவிட வேண்டும். பாத்திரங்களை உடனுக்குடன் சுத்தம் செய்யாதவர்கள் இல்லத்திற்கு சனிபகவான் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்பப்படுகிறது. அதேநேரம் உடனடியாக பாத்திரங்களை சுத்தம் செய்துவிடும் இல்லத்திற்கு லக்ஷ்மி தேவி செல்வத்தை வாரி வழங்குவாராம்.

படிப்பது

படிப்பது

இது குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கலாம். மாலை நேரத்தில் வீட்டிற்குள் அமர்ந்து படிப்பது மஹாலக்ஷ்மியின் சாபத்தை பெற்றுத்தரும். சூரிய அஸ்தமனத்தின் போது ஒரே இடத்தில அமர்ந்து இருப்பதற்கு பதிலாக ஓடி ஆடி விளையாடுவது, அல்லது வேறு ஏதேனும் செயல்களோ செய்ய வேண்டும். சுருக்கமாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

எச்சில் துப்புவது

எச்சில் துப்புவது

முன்னரே கூறியது போல தூய்மை இல்லாத இடத்திலும், தூய்மையாக இல்லாத மனிதர்களிடத்திலும் மஹாலக்ஷ்மி ஒருபோதும் வரமாட்டார். எனவே தவறான இடங்களில் எச்சில் துப்புவதை தவிருங்கள். தவறான இடங்களில் எச்சில் துப்புவது கெட்ட நேரத்தை கொண்டுவரும். உங்களையும், சுற்றி உள்ள இடங்களையும் அசுத்தமாக வைத்திருப்பது நிச்சயம் உங்களுக்கு லக்ஷ்மிதேவியின் சாபத்தை பெற்றுத்தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion