For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மரணதிற்கு முன் எமதர்மன் அனுப்பும் நான்கு கடிதங்கள் என்னென்ன தெரியுமா?

|

உலகின் மிகப்பெரிய பணக்காரனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி அனைவரும் நினைத்து நினைத்து பயப்படும் ஒரே விஷயம் மரணம்தான். ஏனெனில் மரணத்தை காட்டிலும் தன்னுடைய மரணத்திற்கு பிறகு தன்னை சார்நதவர்களின் நிலை என்னாகுமோ என்பதே இங்கு பெரும்பாலானவர்களின் கவலை. மரணம் எப்போது நிகழும்? எப்படி நிகழும்? என்பது யாருக்குமே தெரியாத ஒன்று. ஆனால் அதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய சுவாரஸ்யமும் கூட.

The story about Yamarajs 4 letter to his friend Amrita

மரணத்தின் கடவுளான எமதர்மன் உங்கள் உயிரை எதுக்கு சில காலத்திற்கு முன்னரே உங்களுக்கு நான்கு கடிதங்கள் அனுப்புவார். அவை உங்கள் நேரம் நெருங்கிவிட்டது, இனிமேலாவது உங்கள் பாவங்களை குறைத்துக்கொள்ளுங்கள் என்பதற்கான அறிகுறி ஆகும். அப்படி அவரின் கடிதங்களை மதிக்காத அவரின் நண்பர் பரிதாபமான முடிவிற்கு ஆளானார். அந்த நண்பர் யார், எமதர்மன் அனுப்பும் அந்த நான்கு கடிதங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எமதர்மன்

எமதர்மன்

எமதர்மன் மரணத்தின் கடவுளாக சிவெபருமானால் அங்கீகரிக்கப்பட்டவர். இவர் லோகபாலன் என்றும் அழைக்கப்படுகிறார் அதன் அர்த்தம் அனைத்து திசைகளுக்குமான அதிபதி ஆகும். புராணங்களின் படி அவர்தான் பூமியில் இருந்து இறந்து மேல் உலகம் சென்ற முதல் மனிதன் ஆவார். பூமியில் இருந்து இறந்து மேலே செல்லும் அனைவருக்கும் அவர்களின் கர்மபலன்களின் படி அவர்கள் செல்ல வேண்டியது நரகமா? சொர்க்கமா? என்பதை முடிவு செய்வார்.

எமதர்மனும், அம்ரிதனும்

எமதர்மனும், அம்ரிதனும்

புராணகாலத்தில் யமுனை நதி கரையில் அம்ரிதன் என்னும் வணிகன் வாழ்ந்து வந்தான். மரணத்தை நினைத்து அதிக பயம்கொண்ட அவன் எமதர்மனை நோக்கி பல யாகங்களையும், தவத்தையும் மேற்கொண்டான். அவனது நோக்கம் எமதர்மனை நண்பராக்கி கொண்டு மரணத்தை தள்ளிபோடுவதுதான். அவனது உண்மையான நோக்கத்தை அறியாத எமதர்மன் அவனது தவத்தால் ஈர்க்கப்பட்டார். அவன் முன்தோன்றி அவனது ஆசையை நிறைவேற்ற எண்ணினார். மரணம் நேரப்போகிறவர்களுக்கு மட்டுமே எமதர்மன் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

எமதர்மனின் தரிசனம்

எமதர்மனின் தரிசனம்

அம்ரிதன் முன் தோன்றிய எமதர்மன் " நீ எனக்கு நண்பனாக வேண்டுமென்று ஆசைப்படுகிறாய். உனது ஆசை நிறைவேறிவிட்டது, எனது தரிசனம் எமதூதர்களுக்கும், மரணிக்கப்போகிறவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். பூமியில் பிறந்த அனைவரும் இருந்துதான் ஆக வேண்டும், இறந்தவர்கள் மீண்டும் பிறக்கத்தான் வேண்டும். இது எவராலும் மறுக்கவும், மாற்றவும் முடியாதது. இருப்பினும் நீ உயிரோடு இருக்கும்போதே உனக்கு என் தரிசனம் கிடைத்துள்ளது. என்று கூறினார்.

அம்ரிதனின் ஆசை

அம்ரிதனின் ஆசை

எமதர்மன் கூறியதை கேட்ட அம்ரிதன் அதிர்ச்சியடைந்தாலும் வேறு யோசனை செய்தான். " நமது நட்பின் அடையாளமாக நான் ஒரு உதவியை கேட்கிறேன். மரணம் தவிர்க்க முடியாது என்றால் , நான் மரணிக்க தயாராக உள்ளேன், ஆனால் என் நேரம் முடிவதற்கு முன்பே எனக்கு அது தெரிய வேண்டும். எனவே நான் என் குடும்பத்திற்கு தேவையானவற்றை செய்துவிடுவேன் " என்று கூறினான்.

MOST READ:மூளையை செயலிழக்க வைக்கும், நம்மை அறியாமல் செய்யும் விஷயங்கள் என்னென்னு தெரியுமா...?

எமதர்மனின் வரம்

எமதர்மனின் வரம்

அம்ரிதன் கூறியதற்கு ஒப்புக்கொண்ட எமதர்மன் அம்ரிதன் இறப்பதற்கு முன்பே அவனுக்கு தெரிய வைப்பதாக கூறிய எமன் அதற்கு பதிலாக மற்றொன்றை கேட்டார். உனக்கு எப்பொழுது என் கடிதம் கிடைக்கிறதோ அப்பொழுதே நீ உன் குடும்பத்திற்கு தேவையானவற்றை செய்துவிடவேண்டும் என்று கூறிவிட்டு மறைந்தார்.

அம்ரிதனின் ஆணவம்

அம்ரிதனின் ஆணவம்

எமன் கூறிய வாக்கில் இருந்த நம்பிக்கையால் அம்ரிதனின் ஆணவம் அதிகரித்தது. எனவே மரணம் பற்றிய பயத்தை விடுத்து சுகபோக வாழ்வை வாழ தொடங்கினான். எந்தவித அச்சமுமின்றி பாவங்களை செய்யதொடங்கினான். நாளடைவில் அவன் முடி நரைக்க தொடங்கியது. எமனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் தன் இஷ்டம்போல வாழ்க்கையை வாழ தொடங்கினான்.

கடவுளை மறுத்தல்

கடவுளை மறுத்தல்

ஆண்டுகள் கடந்தன, அம்ரிதனின் பற்கள் அனைத்தும் விழத்தொடங்கியது. நமது மரணம் இப்போது நேரப்போவதில்லை என்று நினைத்த அம்ரிதன் தொடர்ந்து பாவங்களை செய்தான். கடவுள்களை வழிபடுவதையும் துறந்தான்.

கண்பார்வை மறையுதல்

கண்பார்வை மறையுதல்

மேலும் சில ஆண்டுகள் கழிந்தது, அம்ரிதனின் கண்பார்வை குறைய தொடங்கியது, ஒருகட்டத்தில் பார்வை முழுவதும் பறிபோனது, ஆனாலும் எமனிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. வயதான காலத்தில் அவனது உடல் தசைகள் வலிமையை இழந்தன, படுத்தப்படுக்கையாய் முடங்கிப்போனான். இருந்தும் தனக்கு இன்னும் மரண கடிதம் அனுப்பாத தன் நண்பனுக்கு மனதிற்குள் நன்றி கூறினான் அம்ரிதன்.

இறுதி நாள்

இறுதி நாள்

ஒரு நாள் இரவில், அம்ரிதன் தூங்கிக்கொண்டிருந்தபோது எமதூதர்களை கண்டு ஆச்சரியமடைந்தான். உடனே வீடு முழுவதும் எமன் அனுப்பிய கடிதத்தை தேடத்தொடங்கினான். ஆனால் எந்த கடிதமும் கிடைக்கவில்லை. எமதர்மன் செய்த துரோகத்தை எண்ணி கோபம் கொண்டான் அம்ரிதன் இருப்பினும் அவனின் விதி முடிந்துவிட்டதால் அவன் எமலோகத்திற்க்கு அழைத்துச்செல்லப்பட்டான். அங்கே எமன் புன்னகையுடன் அமர்ந்திருந்த போது அதைப்பார்த்து மேலும் கோபம் கொண்ட அம்ரிதன் அவரை துரோகி என்று தூற்ற ஆரம்பித்தான்.

எமதர்மர் மீது குற்றச்சாட்டு

எமதர்மர் மீது குற்றச்சாட்டு

அம்ரிதன் எமதர்மனிடம் " நீ என்னை ஏமாற்றிவிட்டாய், நீ உன் வார்த்தையை காப்பாற்றவில்லை, உன்னிடம் இருந்து எந்த எச்சரிக்கை கடிதமும் எனக்கு வரவில்லை, இப்பொழுது என் உயிரை எடுக்க உன் கோர உருவத்தில் வந்திருக்கிறாய். ஒரு நண்பனை ஏமாற்ற உனக்கு வெட்கமாக இல்லையா? என்று சீறினான்.

எமதர்மனின் பதில்

எமதர்மனின் பதில்

அம்ரிதனின் குற்றச்சாட்டுகளுக்கு எமதர்மன் அமைதியாக பதிலளித்தார். " வாழ்க்கை மீது உனக்கு இருந்த மோகம் உன்னை குருடனாக்கிவிட்டது. பிறகு எப்படி உன்னால் நான் அனுப்பிய கடிதங்களை பார்க்க இயலும்?. ஒன்று அல்ல மொத்தம் நான்கு கடிதங்கள் உனக்கு அனுப்பினேன், ஆனால் நீ அவற்றை கண்டுகொள்ளவில்லை.

மரண கடிதங்கள்

மரண கடிதங்கள்

இதனை கேட்ட அம்ரிதன், நான்கு கடிதங்களா? எனக்கு ஒன்று கூட வரவில்லையே. அவை தவறான இடத்திற்கு சென்றிருக்கலாம். அதற்காக என் உயிரை எடுத்துவிடுவாயா? இது நியாமா? என்று ஆத்திரத்தில் கத்தினான்.

மரணத்தின் அறிகுறிகள்

மரணத்தின் அறிகுறிகள்

இந்த கேள்விக்கு எமன் சற்று கோபத்துடன் பதிலளித்தார், நீ புத்திசாலியாக இருந்த போதிலும், நான் உனக்கு எழுதுகோலால் எழுதி கடிதம் அனுப்புவேன் என்று எப்படி நினைத்தாய் முட்டாளே!. உன் உடல்தான் காகிதம் அதில் ஏற்படும் மாற்றங்களே எழுதுகோல் மற்றும் நேரம்தான் என் தூதுவன். அதன்மூலம் உனக்கு நன்கு கடிதங்கள் அனுப்பினேன் என்று கூறினார்.

மரணம் தவிர்க்கமுடியாது

மரணம் தவிர்க்கமுடியாது

பல ஆண்டுகளுக்கு முன்னர் உன் தலைமுடி நரைத்து அதுவே என் முதல் கடிதம், உனது பற்கள் விழத்தொடங்கியது எனது இரண்டாவது கடிதம், மூன்றவது கடிதம் உன் பார்வை மங்கியது, நான்காவதோ உன் உடல் முடங்கியது. அதனை கருத்தில் கொள்ளாமல் நீ உன் பாவங்களை தொடர்ந்துகொண்டே இருந்தாய். இப்போது உனக்கு நரகம்தான் தண்டனை என்று கூறி அம்ரிதனை நரகத்திற்கு அனுப்பிவைத்தார் எமதர்மன்.

எமபுராணம்

எமபுராணம்

நாம் மாற்ற முடியாத நமது எதிர்காலத்தை நினைத்து பயப்படும்போது அதாவது மரணத்தை நினைத்து பயப்படும்போது நாம் நமது வாழ்க்கை தர்மங்களை கடைபிடித்து வாழ்வின் இறுதியை நோக்கி பயணிக்க வேண்டும். நமது கடமைகளை நிறைவேற்ற இப்போதிருந்தே தொடங்க வேண்டும். எமனின் நான்கு கடிதங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நமக்கு வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The story about Yamaraj's 4 letter to his friend Amrita

The god of death, Lord Yama, is also known as Lokpala. He sent 4 letters as a death signs to his friend Amrita
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more