For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இறந்தபின் நம் ஆவி நேராக எங்கெல்லாம் போகும் தெரியுமா?... தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க...

  By Suganthi Rajalingam
  |

  இந்து மதத்தில் ஆயிரக்கணக்கான கடவுள்களும் தெய்வங்களும் இருந்தாலும் நாம் எல்லாரும் முதலில் வணங்கும் தெய்வம் என்றால் அது விநாயகரைத் தான். அப்படி தோற்றத்தில் எளிமையானவர். தன் பக்தர்களின் அன்புக்கு பாத்தியப்பட்டவர். நாம் எந்த செயல்களையும் தொடங்கி தங்கு தடையின்றி வெற்றி காண உறுதுணை புரியும் வெற்றி விநாயகர் இவர்.

  The abode of Lord Ganesha- Swananda Loka

  மற்ற தெய்வங்களின் வழிபாடுகள் சம்பிரதாயங்கள் சடங்குகள் நிறைந்திருக்கும். ஆனால் விநாயகரை மஞ்சளிலோ சாணத்திலோ பிடித்துவைத்து அன்புடனும் நம்பிக்கையுடனும் வேண்டினாலே போதும்; உடனே வந்து அருளைத் தந்துவிடுவார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  பிள்ளையார் பூஜை

  பிள்ளையார் பூஜை

  பிள்ளையார் பூஜை ஆடம்பரமில்லாதது. நம்மால் முடிந்தவற்றை வைத்து எளிமையாக நைவேத்தியம் செய்துவிடலாம். விநாயகர் யானை முகத்திலும், பெரிய தொந்தி வயிறு, குறுகிய கால்கள் போன்றவை பூத வடிவத்திலும் , புருவம், கண்கள் போன்றவை மனித வடிவிலும், தேவ வடிவத்திலும் என்று நான்கும் ஒருங்கிணைந்து பக்தர்களுக்கு அழகாக காட்சியளிக்கிறார்.

  பிறந்த இடம்

  பிறந்த இடம்

  விநாயகர் வசிக்கும் இடம் தான் ஸ்வானந்த லோகம். இவர் கைலாச நாதன் சிவபெருமானுக்கம் அன்னை பார்வதி தேவிக்கும் மகனாக பிறந்தவர். அவரின் பக்தர்கள் விரும்புவது இவ்வுலக வாழ்க்கை முடிந்த பிறகு அவர் வசிக்கும் இருப்பிடமான ஸ்வானந்த லோகத்திற்கு செல்ல வேண்டும் என்பது தான். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் நிம்மதியும் மோட்சமும் கிடைக்கும். பிரம்மருக்கு பிரம்ம லோகம் என்றும் சிவனுக்கு கைலாச மலை என்றும் விஷ்ணுவிற்கு விஷ்ணு லோகம் என்றும் அவர்களின் இருப்பிடங்கள் அழைக்கப்படுகின்றன.

  ஸ்வானந்த லோகம்

  ஸ்வானந்த லோகம்

  முத்கலா என்ற ஒரு முனிவர் அவர் எழுதிய கணேஷ புராணத்தில் உள்ள உத்தர காண்டம் பகுதியில் 51 வது பாகத்தில் இதை பற்றி விவரிக்கிறார். இந்த பேரண்டம் முழுவதும் கடவுள் விநாயகப் பெருமானுக்குள் அடங்கும் என்கிறார் அவர்.இந்த ஸ்வானந்த லோகம் நாம் வசிக்கும் பூலோகத்தை விட பெரிய பேரண்டம் என்கிறார்.

  சுந்தரர் பவன, ஸ்வானந்த பூவன் மற்றும் ஸ்வானந்த நிஜலோகம் போன்ற பல பெயர்கள் இதற்கு இருக்கின்றனர். இதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான் பேரின்பம் நிறைந்த வீடு அல்லது பேரின்பம் வாழும் இடம் என்பது பொருளாகும்.

  MOST READ: இயேசுநாததர் பூமியில் பிறக்கும்முன் எங்கிருந்தார்? என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?

  உருவான விதம்

  உருவான விதம்

  இந்த ஸ்வானந்த லோகம் விநாயகரின் சக்தியால் அதாவது கமதாயினி யோக சக்தியால் உருவாக்கப்பட்டது. இந்த லோகம் கிட்டத்தட்ட 5000 யோஜனைகள் தூரம் இருக்கும். அதாவது ஒரு யோஜனை என்பது தோராயமாக 4.34 மைல்கள் (அ) 7.32 கி.மீ இருக்கலாம்.

  பயண வழி

  பயண வழி

  இந்த விநாயகர் லோகத்திற்கு செல்லக் கூடிய பாதை திவ்ய லோகம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வுலக இறப்பிற்கு பிறகு விநாயகர் லோகத்தை அடைவது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. மிகவும் கடினம். சக்தி வாய்ந்த முனிவர்களால் கூட இந்த லோகத்தை சென்றடைய முடியவில்லை. நீங்கள் என்ன தான் தியானம், தவம் மற்றும் வேதங்கள் ஓதினாலும் விநாயகரின் அன்பையும் விருப்பத்தையும் உங்கள் நம்பிக்கையான பக்தியின் மூலம் பெற்றால் மட்டுமே நீங்கள் அந்த லோகத்தை உங்கள் இறப்பிற்கு பிறகு தரிசிக்க இயலும்.

  காவல் தெய்வங்கள்

  காவல் தெய்வங்கள்

  இந்த லோகத்திற்கு செல்லும் தூரத்தில் 1000 யோஜனைகள் வெறும் வெற்றிடமாக இருக்கும். அவ்வளவு சுலபமாக இதை நீங்கள் கடந்து செல்ல இயலாது. இதையடுத்து நீங்கள் பிரமராம்பிகா காவல் தெய்வங்களை சந்திக்கலாம். இவர்களும் கடவுள் விநாயகரின் சக்தியில் இருந்து உருவாக்கப்பட்டவர்கள். 1000 சூரியன் ஒன்று சேர்ந்து தங்கம் ஜொலிப்பது போல் பிரகாசமாக இவர்கள் காட்சியளிப்பார்கள். அடர்த்தியான முடிகளுடன் உக்கிரமாக நிற்பார்கள்.

  செல்வம்

  செல்வம்

  ஸ்வானந்த லோகம் முழுவதும் செல்வம் நிரம்பி வழியும். நடக்கின்ற பாதைகள் தங்கத்தாலும் கற்களாலும் ஆக்கப்பட்டிருக்கும். கடவுள் விநாயகர் வசிக்கும் இடத்தில் தங்கம், வெள்ளி, வைரம் என்று நவ மணிகளும் நிரம்பி வழியும்.

  MOST READ: முதுகெலும்பின் பலத்தை இரட்டிப்பாக மாற்றும் உணவுகள்..! எவ்வளவு சாப்பிடணும்..?

  காட்சியளித்தல்

  காட்சியளித்தல்

  இந்த லோகத்தின் வடக்கு திசையில் பெரிய கரும்புச் சாற்றால் ஆக்கப்பட்ட சமுத்திரம் ஓடும். இந்த இனிய கடலின் நடுவில் ஆயிரம் இதழ்கள் விரிந்த தாமரையின் நடுவே வைரங்களாலும் முத்துக்களாலும், தங்கத்தாலும் ஆக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து கடவுள் விநாயகர் நமக்கு காட்சியளிக்கிறார்.

  விநாயகர் தோற்றம்

  விநாயகர் தோற்றம்

  ஒரு 9 வயது சின்னஞ்சிறிய குழந்தை வடிவில் அவரின் சருமம் சுண்டி விட்டால் சிவக்கும் சிவப்பு நிறத்தில்,நெற்றியில் செந்தூர் திலகம் இட்டு, மூன்று கண்கள் (சூரியன், சந்திரன் மற்றும் நிலாவை குறிக்கிறது) உடைய சிவனை போல, உலகத்தையே கொண்ட பெரிய தொந்தி வயிறுடன், அவரின் முடி முதல் உடம்பு முழுவதும் இந்த உலகின் நட்சத்திரங்கள், கோள்கள் போல, அவரின் வியர்வை துளிகள் கரைகடந்து ஓடும் சமுத்திரம், மழையை போல, உடம்பு முழுவதும் நகைகள், ஆபரணங்கள் அணியப்பட்டு, ஆடம்பர ஆடைகளுடன், பக்தி மலர்களால் சூடிய திவ்ய மாலையுடன், தலையில் முகூர்த்தபாரண கிரீடத்துடன், முடியில் சூட்டிய பாதி பிறையுடன் அழகும் அம்சங்களும் ததும்ப ததும்ப காட்சியளிக்கிறார். அவரின் திருவுருவத்தை உங்கள் கண்முன்னே கொண்டு வந்து மனதிற்குள் வைத்து வழிபடுங்கள். உங்களுக்கும் ஸ்வானந்த லோகம் செல்லும் வாய்ப்பு கிட்டும்.

  பணியாட்கள்

  பணியாட்கள்

  அஷ்ட சித்திஸ் என்ற எட்டு பெண்கள் விநாயகருக்குப் பணியாட்களாக பணிவிடை செய்கின்றனர். இவர்களைப் பற்றி பல வேத மற்றும் புராண நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த சின்னஞ்சிறிய ஸ்வானந்த லோக விநாயகர் கூட அறிவிலும் திறமையிலும் சிறந்து விளங்குகிறார்.

  திறப்பு வாயில்

  திறப்பு வாயில்

  இந்த லோகத்தில் மொத்தம் 4 கதவுகள் என்று 2 காவலர்கள் ஒவ்வொரு வாயிலிலும் காவல் புரிகிறார்கள். இரக்கத்துடன் வலிமையுடன் நான்கு கைகளை கொண்டு காணப்படுகின்றனர். இரண்டு கைகளில் ஆயுதங்களையும் மூன்றாவது கையில் பிரம்பையும் நான்காவது கையை தர்சினா முத்திரையிலும் வைத்து நிற்கின்றனர். கிழக்கு வாசலில் விக்ன ராஜா மற்றும் அவிக்ன ராஜா, தெற்கில் பலராம் மற்றும் ஸ்வத்ரா, மேற்கே கஜகர்ணா, கோகர்ணா, வடக்கே ஸ்சூசேமியா, ஸ்சுமதயக்கா போன்றவர்கள் காவல் புரிகின்றனர். இந்த லோகத்தில் நிறைய பக்தர்களின் ஆத்மாக்கள், மோட்சம் அடைந்தவர்கள் வாழ்கின்றனர். மேலும் கணேஷனை சுற்றி ஆயிரக்கணக்கான உடும்பரா மரங்கள் காணப்படுகின்றன.

  எலி வாகனம்

  எலி வாகனம்

  கடவுள் விநாயகர் எலி வாகனத்தில் தான் பயணம் செய்வார். இந்த எலி கடவுள் அக்னி என்றும் இதை சிவபெருமான் விநாயகருக்கு வழங்கினார் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்வானந்த லோகத்திலும் சின்னஞ் சிறிய விநாயகப் பெருமான் அருகில் எலி வீற்றிருப்பதை நாம் காணலாம்.

  MOST READ: அட்ட கருப்பா இருந்தாலும் அசத்தலான கலராக மாற்றிடும் புதினா... ஒரே வாரம் ட்ரை பண்ணுங்க...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  the abode of lord ganesha swananda loka

  Summary :Lord Ganesha is perhaps the most loved deity for the Hindu community. Hinduism is a religion which worships thousands of Gods and Goddesses. Most devotees pick a God and serve him as his favorite. But no matter which God is chosen as his favorite, the devotee will offer prayers to Lord Ganesha before worshipping his beloved God.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more