Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
இந்த 5 ராசிக்காரங்ககிட்ட நீங்க பொய் சொல்லி ஏமாத்தவே முடியாதாம்... ரொம்ப ஷார்ப்பாம் இவங்க..!
எல்லா வகையான மக்களும் நிறைந்ததுதான் இந்த உலகம். உங்களை சுற்றி இருக்கும் மக்கள் எல்லாரும் ஒரு மாதிரி இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணநலன்களை கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆளுமை பண்பின்படி, அவர்களின் நடத்தை இருக்கும்.
சிலருக்கு பொய் சொல்லவே பிடிக்காது, சிலர் எப்போதும் பொய் மட்டுமே கூறிக்கொண்டு இருப்பார்கள். யாரிடம் வேண்டுமானாலும் சிலர் எளிதில் ஏமாந்துவிடலாம். சிலர், எப்போதும் ஏமாறாமல் கவனமுடன் இருக்கலாம். அந்த வகையில், மனிதர்களின் ஆளுமை பண்பை பொறுத்து, ஒருவரிடம் பொய் சொல்வது அல்லது ஏமாற்றுவது சிலருக்கு எளிதில் வரலாம்.

அதேநேரம் அதையெல்லாம் எளிதில் கண்டுபிடிக்கக்கூடிய நபர்களும் இருக்கின்றனர். அவர்கள் கொண்டுள்ள இயற்கையான பண்பின் மூலம், பொய்களை கண்டுபிடிக்கும் திறனை பெற்றுள்ளனர். இதன்மூலம் ஏமாற்றும் நபர்களை அவர்கள் எளிதில் அடையாளம் காண்கிறார்கள். யாரிடமும் ஏமாறாத நபர்களை ஜோதிடத்தின் மூலம் நீங்கள் அடையாளம் காணலாம்.
இராசி அறிகுறிகளின்படி சென்றால், தவறான நபர்களை எளிதில் அடையாளம் காணக்கூடிய வலுவான உள்ளுணர்வு ஆளுமைகளைக் கொண்ட ராசிகள் உள்ளன. அவர்கள் என்னென்ன ராசி? உங்கள் முதலாளி அல்லது நண்பரின் ராசி என்ன? என்பதைக் கண்டுபிடித்து, அவர்களிடம் பொய் சொல்வதை விட்டுவிடுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமானவர்கள் மற்றும் உணர்தல் தன்மை கொண்டவர்கள். மற்றவர்களின் உணர்ச்சிகளையும் நோக்கங்களையும் படிக்கும் இயல்பான திறனை அவர்கள் கொண்டுள்ளனர். இதனால் மற்றவர்கள் விருச்சிக ராசிக்காரர்களை ஏமாற்றுவது கடினம். உள்ளுணர்வை அறியும் பண்பை கொண்டுள்ளதால், இவர்களிடம் யாராவது நேர்மையற்றவர்களாக நடந்துகொண்டால், உடனே கண்டுபிடிக்க முடியும்.
இந்த ராசிக்காரர்கள் தங்கள் உள்ளுணர்வை நம்புகிறார்கள், பாசாங்கான மற்றும் மென்மையான பேச்சுகளால் எளிதில் ஈர்க்கப்பட மாட்டார்கள். அவர்களின் ஆழ்ந்த புலனாய்வுத் திறன்கள் மறைந்திருக்கும் உண்மைகளை வெளிக்கொணரவும், பொய்களை அம்பலப்படுத்தவும் உதவுகின்றன.
மீனம்
மீன ராசி நேயர்கள் உணர்திறன் கொண்ட நபர்கள். உணர்ச்சிவசப்பட்டக் கூடிய நிலையிலும் மற்றவர்களுடன் இணைவதற்கான உள்ளார்ந்த திறனை அவர்கள் கொண்டுள்ளனர். இதனால், யாரவது அவர்களிடம் உண்மையைச் சொல்லாமல் பொய் சொன்னால், அது அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
இந்த ராசிக்காரர்கள் உடல் மொழி, குரலின் தொனி மற்றும் முகபாவங்கள் ஆகியவற்றில் உள்ள நுட்பமான குறிப்புகளைக் கண்கணித்து உண்மையை கண்டறிவர். இரக்கமும் உள்ளுணர்வையும் கொண்ட மீன ராசிக்காரர்கள், பொய்களைப் பார்க்கவும், அவர்களுக்குப் பின்னால் உள்ள அடிப்படை உந்துதல்களைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் விவரம் மற்றும் பகுப்பாய்வு மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் கூர்ந்து கவனிக்கும் உணர்வைக் கொண்டுள்ளதால், ஒருவர் கூறுவதில் உள்ள முரண்பாடுகளை விரைவாக கவனிக்கிறார்கள்.
இந்த ராசிக்காரர்கள் தகவல்களை ஒன்றாக இணைப்பதில் மிகவும் திறமையானவர்கள் மற்றும் சிக்கலான பொய்களின் வலைகளை இவர்களால் எளிதில் அவிழ்க்க முடியும். அவர்கள் உண்மைகளையும் ஆதாரங்களையும் ஆராய்கிறார்கள். எனவே, இந்த ராசிக்காரர்களிடம் பொய் சொன்னால், கண்டிப்பாக மாட்டிக்கொள்வீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் வலுவான பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கம் கொண்டவர்கள். அவர்களை முட்டாள்தனமான அணுகுமுறையைக் கொண்டோ அல்லது ஏமாற்றும் நடத்தையாலோ எளிதில் ஏமாற்ற முடியாது. அவர்கள் நேர்மையையும் உண்மையையும் மதிக்கிறார்கள். மற்றவர்களிடமிருந்தும் அதையே எதிர்பார்க்கிறார்கள்.
மகர ராசிக்காரர்கள் ஒரு தெளிவான மற்றும் பகுத்தறிவு மனநிலையுடன் சூழ்நிலைகளை மதிப்பிடும் திறனைக் கொண்டுள்ளனர். எனவே அவர்கள் பொய்களையும் கையாளுதல் தந்திரங்களையும் எளிதில் கண்டறிய முடியும். ஒருவரின் நேர்மையை மதிப்பிடும்போது அவர்கள் தங்கள் உள்ளுணர்வு மற்றும் உணர்வுகளை மிகவும் சார்ந்து இருக்கிறார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நீதி மற்றும் நியாயம் பற்றிய வலுவான உணர்வு உள்ளது. அவர்கள் ஒரு சூழ்நிலையின் இரு பக்கங்களையும் பார்க்கும் இயல்பான திறமையைக் கொண்டுள்ளனர். எனவே அவர்கள் மக்களின் கதைகளில் உள்ள முரண்பாடுகளையும் தவறுகளையும் எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது.
குணத்தின் சிறந்த நீதிபதிகளாக இருக்கும் துலாம் ராசிக்காரர்களை யாராவது ஏமாற்ற முயற்சிக்கும்போது, அவர்கள் எளிதில் அடையாளம் கண்டுவிடுவார்கள்.
இதர ராசிக்காரர்கள்
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் அந்தப் பொய்களை அடையாளம் காணாமல் இருக்கலாம் அல்லது அடையாளம் காணலாம். ஏனென்றால், இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஏமாறக்கூடியவர்கள். அவர்கள் மற்றவர்கள் கூறுவதை அப்படியே நம்பக்கூடியவர்கள் அல்லது அவர்கள் நினைத்ததைச் செய்வார்கள்.



Click it and Unblock the Notifications
