Latest Updates
-
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க..
அட்ட கருப்பா இருந்தாலும் அசத்தலான கலராக மாற்றிடும் புதினா... ஒரே வாரம் ட்ரை பண்ணுங்க...
நம் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படி இருக்கையில் கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் என்னவாகும். கண்டிப்பாக உங்கள் கண்களைப் போலவே உங்கள் முகமும் களையிழந்து போய
நம்முடைய முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படி இருக்கையில் கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் என்னவாகும்.

கண்டிப்பாக உங்கள் கண்களைப் போலவே உங்கள் முகமும் களையிழந்து போய்விடும் அல்லவா.இந்த கருவளையம் நிறைய காரணங்களால் ஏற்படுகிறது.

காரணங்கள்
மன அழுத்தம்
சுற்றுப் புற மாசுக்கள்
அதிகமாக மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம்
ஹார்மோன் பிரச்சினை
வயதாகுதல்
இப்படி நிறைய காரணங்களால் உண்டாகும் கருவளையத்தை நீங்கள் மேக்கப் போட்டு மறைக்க மட்டுமே முடியும். ஆனால் இது உங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கொடுக்காது. எனவே உங்கள் கருவளையத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்றால் இயற்கை முறையை பின்பற்றுவது சிறந்தது.

கருவளையத்தை மறைக்கும் க்ரீம்கள்
இந்த கருவளையத்தை மறைக்க நிறைய க்ரீம்கள் இருக்கின்றன. ஆனால் அவையெல்லா வகை சரும வகைக்கும் சிறந்ததாக இருப்பதில்லை. எனவே எல்லாருக்கும் ஏற்ற விலை மலிவான ஒரு முறை என்றால் அது புதினா இலையைக் கொண்டு கருவளையத்தை போக்குவது.

புதினா இலை
புதினா இலை இயற்கையாகவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி கொண்டது. இதனால் கண்களுக்கு கீழே உள்ள கருவளையப் பகுதிகளில் இதை அப்ளே செய்யும் போது கருவளையத்தை எளிதாக போக்குகிறது. மேலும் இதிலுள்ள விட்டமின் சி சருமத்தின் நீட்சித் தன்மையை மேம்படுத்துகிறது.சரி வாங்க இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்

புதினா இலை, தக்காளி மற்றும் லெமன்
தக்காளி மற்றும் எலும்பிச்சை யில் உள்ள ப்ளீச்சிங் தன்மை சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
பயன்படுத்தும் முறை
1/2 தக்காளி பழம் மற்றும் கொஞ்சம் புதினா இலைகளை அரைத்து அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளவும். சிறுதளவு உப்பும் சேர்த்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கண்களுக்கு கீழே அப்ளே செய்து காய விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் உங்கள் கருவளையம் நீங்கி கண்கள் அழகு பெறும்.

புதினா மற்றும் உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு சருமத்திற்கு நிறத்தை தருவதோடு ப்ளீச்சிங் வேலையையும் செய்கிறது.
பயன்படுத்தும் முறை
உருளைக்கிழங்கு மற்றும் ஒரு கைப்பிடியளவு புதினா இலையை எடுத்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை தோலுரித்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும். இப்பொழுது இரண்டையும் நன்றாக அரைக்கவும். இப்பொழுது ஒரு காட்டன் பஞ்சில் இந்த பேஸ்ட்டை நனைத்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள். இப்பொழுது இந்த காட்டன் பஞ்சை கண்களில் வைத்து 15-20 நிமிடங்கள் காத்திருக்கவும். பிறகு சாதாரண நீரில் கழுவவும்.

புதினா இலைகள் மற்றும் லெமன் ஜூஸ்
இது ஒரு எளிதான முறையும் கூட.
பயன்படுத்தும் முறை
ஒரு கைப்பிடியளவு புதினா இலைகளை எடுத்து நன்றாக அரைக்கவும். அதனுடன் சில துளிகள் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்பொழுது இந்த பேஸ்ட்டை கண்களுக்கு கீழே அப்ளே செய்து 20 நிமிடங்கள் உலர விடுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவி துடைத்து விடுங்கள்.

புதினா மற்றும் ரோஸ் வாட்டர்
ஒரு கைப்பிடியளவு புதினா மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை பிரிட்ஜில் கொஞ்ச நேரம் வைக்கவும். காலையில் இந்த கலவையை எடுத்து வடிகட்டி ஒரு பஞ்சில் நனைத்து கண்களில் வைத்துக் கொள்ளுங்கள். 15 நிமிடங்களுக்கு பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை தொடர்ச்சியாக செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

புதினா இலை, கடலை மாவு மற்றும் மஞ்சள்
இந்த முறை சருமத்தில் தேங்கியுள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை பளிச்சென்று ஆக்குகிறது. இப்பொழுது புதினா இலைகளை சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை
1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை கண்களுக்கு கீழே அப்ளே செய்து 15 நிமிடங்கள் வையுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும்.
மேற்கண்ட முறைகள் மூலம் உங்கள் கருவளையத்தை போக்கி பளிச்சென்ற கண்களை பெறலாம். ட்ரை பண்ணி பாருங்க.



Click it and Unblock the Notifications
