தனுசு ராசிக்காரர்களுக்கு விளம்பி வருடம் எப்படி இருக்கப்போகிறது?...

Posted By:
Subscribe to Boldsky

மூலம், பூராடம், உத்திராடம் 1,ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய தமிழ் வருடமான விளம்பி ஆண்டில் என்னென்ன நன்மைகள் உண்டாகப் போகின்றன என்பதைப் பற்றி பார்ப்போம்.

தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்கவிருக்கும் காலம் இது. இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்றால் பிரகாசமான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் தயங்கித் தயங்கி ஒரே இடத்தில் உழன்று கொண்டு இருப்பவர்களை கிரகங்கள் இதுபோன்ற நேரங்களில் தான் வெளியே தள்ளும். அதை உணர்ந்து கொண்டால் வாழ்வில் வெற்றி தான்.

tamil new year 2018

முதலில் கடவுள் உங்களை சோதிப்பார். அவருடைய மகிமையை உணர்ந்த பின், உங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான சகல செல்வங்களையும் அள்ளிக் கொடுப்பார். எதிர்காலத்தில் மிகவும் நன்றாக வாழும் வாழ்க்கைக்கான ஆரம்பகட்ட விதை இந்த ஆண்டு தான் தூவப்படுகிறது. எனவே, கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு தற்போது ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கிறது. ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு சனியின் பாதிப்புகள் எதுவும் நிச்சயமாக இருக்காது. அவர்களுக்கு இது பொங்கு சனியாக நன்மைகளைத் தரும் விதத்தில் அமையும் ஆனால் எப்போதும் விளையாட்டுத்தனமாக இருக்கக் கூடிய இளைஞர்களுக்கு இப்போது வாழ்க்கையைப் புரிய வைக்கும் விதமாக சொந்த வாழ்க்கையிலும் வேலை விஷயத்திலும் மனஅழுத்தங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

பணத்தின் அருமையை நீங்கள் உணரும் காலகட்டம் இதுதான். அதேபோல உண்மையான உறவுகளையும், கஷ்டத்தில் கை கொடுக்கக்கூடிய நட்புகளையும் சனி இந்த காலகட்டங்களில் உங்களுக்கு அடையாளம் காட்டுவார்.

இப்போது காதல் வேண்டாமே. அதை கொஞ்ச நாள் தள்ளிப்போடுங்கள். தொடர்ந்தால் கொஞ்சம் மனக்கசப்புகளுக்கு ஆளாக நேரிடும்.

இந்த தமிழ்ப் புத்தாண்டின் பிற்பகுதியில் இருந்து நீங்கள் எதிலும் அகலக்கால் வைத்துவிடாதீர்கள். எந்த செயலையும் நிதானத்துடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டிருக்கும். புதிதாக எதையும் தொடங்காமல் இருக்க வேண்டியது அவசியம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே பொறுமையாகவும் நிதானமாகவும் செய்யுங்கள்.

வேலை மாற்றம், ஊர் மாற்றம், வீடுமாற்றம், தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். அதே நேரத்தில் அனைத்து மாற்றங்களும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும். குறிப்பாக, வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்யக் கூடிய அமைப்புகள் உருவாகும்.

அரசு, தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் சம்பளம் தவிர்த்த மேல் வருமானங்களுக்கு ஆசைப்படாதீர்கள். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். பணியிடங்களில் யாரையும் நம்ப வேண்டாம். அதிகாரிகள்பற்றி விமர்சனம் செய்வதை நிறுத்திவிடுங்கள்.

வியாபாரிகளுக்கு தொழில் நன்றாக இருந்தாலும் லாபம் குறைவாகத்தான் இருக்கும்.

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். பங்குச்சந்தை போன்ற வணிகங்கள் இப்போதைக்கு கை கொடுக்காது. நஷ்டம் வரும் என்பதால் ஷேர் மார்க்கட்டில் முதலீடு செய்யும்முன் மிகுந்த கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம்.

ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் இப்போது இருக்கும். மனதைப் போட்டு குழப்பிக் கொண்டிருப்பீர்கள். அடிக்கடி ஞாபக மறதி வரும்.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களின் கீழ் வேலை செய்பவர்களை நம்ப வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடக்க வாய்ப்பிருக்கிறது. எதையும் நேர்வழியில் சென்று சாதிப்பதே நல்லது. குறுக்குவழியில் செல்லாதீர்கள். சிக்கல்கள் வரும். பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு துறை சார்ந்த நெருக்கடிகள் இருக்கும். மேலதிகாரிகளிடம் சற்றுத் தள்ளியே இருங்கள். செய்யாத தவறுக்கு வீண்பழி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

பெற்றோருடன் கருத்து வேற்றுமை வரலாம். பெரியவர்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்து கொள்வது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். உடல் ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. வேலை மாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல் போன்றவைகள் நடந்து அலைச்சல்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

நாற்பது வயதுக்குட்பட்டவர்கள் ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால் விளம்பி வருடத்தில் புதிய தொழில் முயற்சிகள் எதையும் செய்யாமல் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. சற்று கவனத்துடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது.

Read more about: tamil new year
English summary

thanusu rasi vilambi tamil new year horoscope 2018

tamil new year vilambi varuda palangal 14.4.18
Story first published: Sunday, April 15, 2018, 8:00 [IST]