தமிழக அரசியலில் பெரும் மாற்றம் உண்டாகுமா?... என்ன சொல்கிறது விளம்பி வருடப் பஞ்சாங்கம்

Posted By:
Subscribe to Boldsky

வருடந்தோறும் சித்திரை முதல் நாளை ஆண்டின் முதல் நாளாகக் கருதி, தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடி வருகிறோம். அப்படி இந்த வருடமும் இன்று (14.4.18) தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தைப் பொருத்தவரையில், புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கிரகங்களை அடிப்படையாக வைத்து, அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று பஞ்சாங்கத்தை வைத்து கணிப்பார்கள். அப்படி இந்த ஆண்டு எப்படி இருக்கப் போகிறது... என்னென்ன துறைகளில் எந்த மாதிரியான மற்றங்கள் உண்டாகும்? ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார மாற்றங்கள், இயற்கை மாறுபாடுகள் என எல்லாவற்றையும் கணித்து சொல்லிவிட முடியும். அந்த வகையில் இந்த ஆண்டு என்ன மாதிரியான அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் நிகழும் என்பதைப் பார்க்கலாம்.

tamil new year 2018

விளம்பி ஆண்டு

2018 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1-ம் தேதி (14.04.2018) சனிக்கிழமை விளம்பி ஆண்டாகப் பிறக்கிறது. திரயோதசி, உத்திரட்டாதி நட்சத்திரம், ஐந்திரம் நாம யோகம், பத்திரை கரணத்தில் காலை 08.16 மணிக்கு செவ்வாய் ஹோரையில் ரிஷப லக்னத்தில் மீன நவாம்சத்தில் பிறக்கிறது. விளம்பி வருடம் சித்திரை மாதம் 01 ஆம் நாள் அதாவது ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை வாக்கியப் பஞ்சாங்கப்படி காலை 07.00 மணிக்கு பிறக்கின்றது. விளம்பி என்பதை தமிழில் பிரகாசமான, ரம்யமான வருடம் என கொள்ளலாம்.

நல்ல நேரம்

இது இந்துக்களின் 60 வருட சுற்று வட்டத்தில் 32 ஆவது வருடமாகும். முதல் நாள் இரவு அதாவது 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 3 மணி முதல் சனிக்கிழமை காலை 11 மணி வரை விஷு புண்ணிய காலமாகும்.

பரிகாரம்

14-04-2018 ,தமிழ் புத்தாண்டு சித்திரை மாதம்1 ஆம் தேதி காலை 6.56 க்கு மேஷ லக்னத்தில் சனி ஓரையில் பிறக்கிறது.இராஜகிரகமாகிய சூரியன் உச்சம் பெற்று வர்க்கோத்தம யோகம் பெற்றுள்ளது சந்திர கிரகணம் (27-7-2018) ஆடி 11 ஆம் தேதி இரவு 11.54 மணி முதல் இரவு 3.49 இருப்பதால் வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் சாந்தி செய்ய வேண்டும்.

tamil new year 2018

என்னவெல்லாம் நடக்கும்?

இந்த ஆண்டு விபத்துகள் அதிகம் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கின்றன. அரசியல் தலைவர்கள் சிலர் உயிர் பிரிய நேரிடலாம். 9-ல் செவ்வாய், குரு வீட்டில் இருப்பதால் குருமங்களா யோகம் பெற்று உலகத்தில் சுவாமிகளுக்கு திருவிழா நடந்த வண்ணம் இருக்கும். கால்நடைகள் பெருகி வளம் நன்றாக இருக்கும். இவ்வாண்டு பணப்பற்றாக்குறை ஏதும் இருக்காது. போதுமாக அளவு பொருளுாதார முன்னேற்றம் உண்டாகும். மழை அதிகம் இருக்கும். அதனால் மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

அனுமின் நிலையம் அடிக்கடி பாதிப்படையும். மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கைகள் இந்த ஆண்டு நிறைவேறும். மதுரை, இராஜபாளையம், சதுரகிரி, மேகமலை, தேனி, கம்பம், மூணாறு, வால்பாறை, திருப்பதி, ஏற்காடு, ஜவ்வாது மலை போன்ற இடங்களில் பயங்கர தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. புரட்டாசி மாதம் 18 ந்தேதி (04-10-2018) வியாழக்கிழமை தாமிரபரணி ஆற்றில் புஷ்கரணம் நடப்பதால் வெள்ளம் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட வாய்புள்ளது எச்சரிக்கையுடன் செயல்படவும். மின்னல், இடி, தரைகாற்று அதிகம் வீசும். தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடக்கும் எச்சரிக்கையுடன் பயணிக்கவும். மளிகை, காய்கறி, கனி விலை குறையும். சிலிண்டர் விலை குறையும். இவ்வாண்டு பொதுமக்கள் கவனமுடன் இருக்கவும்.

இந்த விளம்பி வருடத்தில் நிகழ இருக்கும் முக்கிய நிகழ்வுகள் பற்றி பார்ப்போம்..

மருத்துவ பொருள்கள் பல்கிப் பெருகும். ரசாயனம், மின்சாரம், வான சாஸ்திரம், மருந்துவகை, கணிதபொருள் உற்பத்தி ஆகியவற்றில் நாடு சிறந்து விளங்கும்.

அரசியல் நல்ல நிர்வாகத்தை ஏற்று நடத்தக் கூடியதாக மாறும்.

உள்நாட்டு பொருள்களின் உற்பத்தியும் திருப்திகரமாக இருக்கும்.

பொருளாதாரமும் பற்றாக்குறையின்றி சரளமாக அமையும்.

விளையாட்டு போட்டிகளிலும் மிதமான வெற்றி கிடைக்கும்.

பெட்ரோலியம், நிலக்கரி சம்பந்தமான பிரச்னைகளையும் மின்சார பற்றாக்குறை ஆகியவை சில நேரங்களில் ஏற்படலாம். இருப்பினும் வெளிநாட்டிலிருந்து எரிபொருள் உற்பத்தி கணிசமாக உயர்ந்து எரிபொருள் பற்றாக்குறையை ஈடுசெய்யும்.

இந்திய விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி செய்து கண்டு பிடிப்பார்கள். தெய்வ சிந்தனை, நல்லொழுக்கம் பற்றிய அக்கறை எல்லோரிடமும் ஏற்படும்.

பால்பண்ணை, கால்நடை உற்பத்தி ஆகியவைகளுக்கு முக்கிய அந்தஸ்து கிடைக்கும்.

நமது நாட்டில் பல தொழிற்சாலைகள் திறக்கப்படும். மூடிக்கிடந்த மில்களும் ஸ்தம்பித்த நிலையிலிருந்த தொழில்களுக்கும் அரசாங்கத்தின் பேராதரவு கிடைக்கும்.

நமது நாட்டிலுள்ள கட்சிகளின் பூசல்கள் மறைந்து எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்கிற சித்தாந்தம் பரவ ஆரம்பிக்கும்.

இந்த ஆண்டு கல்வியில் பெரும்பாலானோர் தேர்ச்சி பெறுவார்கள்.

இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் இந்த ஆண்டு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும்.

விவசாயத்திற்குரியவர், மழைக்கோளான சுக்கிர பகவான் அவருடைய லக்னத்தில் இந்த ஆண்டு தொடங்கி இருப்பதால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கண்டு பொருளாதாரத் துறையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சூரியன் மேகாதிபதியாக ஆவதால் இவ்வருடத்தில் நல்ல மழை பெய்யும்.

சுக்கிரபகவான் மழைக்கோள் ஆனபடியாலும் அவர் பெற்றுள்ள சுப பலத்தால் நீர்ப்பாசனங்களும் நல்ல விதத்தில் அமையும். ஏரி, குளம், கண்மாய் முதலிய இடங்களில் போதுமான நீர்த்தேக்கம் உண்டாகும். நஞ்சை, புஞ்சை, தானியங்கள் சிறப்பாக விளையும். நெல் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். பழ வகைகள், காய்கறிகள், அன்றாடம் அழியக்கூடிய, உண்ணக்கூடிய பொருள்களை வியாபாரம் செய்வோருக்கு வியாபாரம் செழித்தோங்கும். அவர்கள் மிகுந்த லாபம் அடைவார்கள்.

tamil new year 2018

கடவுள் வழிபாடு

இந்த புண்ணிய காலத்தில் அதிகாலையில் எழுந்து மனதைத் தூய்மையாக வைத்தக் கொண்டு, இஷ்ட தெய்வங்களையும் குல தெய்வங்களையும் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, கண்ணாடி, தீபம், நிறைகுடம், வலக்கை, கடவுள் பற்றிய புத்தகங்கள், வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம், சந்தனம் ஆகிய மங்கலகரமான பொருள்களை காலையில் பார்ப்பது நல்லது. கொன்றை மற்றும் ஆலிலையை தலையில் வைத்து ஸ்நானம் செய்து, சிவப்பு அல்லது சிவப்பும் கருப்பும் கலந்த பட்டாடை அணிந்து விநாயகர், குலதெய்வம், சூரிய பகவான், குரு மற்றும் அவரவர் பெற்றோரை வழிபடுவது நன்மை தரும்.

Read more about: tamil new year
English summary

tamil new year vilambi varuda palangal 14.4.18

tamil new year vilambi varuda palangal 14.4.18
Story first published: Saturday, April 14, 2018, 10:49 [IST]