For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராமன் எப்போது ஹனுமானை கொல்ல நினைத்தார்? எதற்காக என்று தெரியுமா?

ராமனுடைய தீவிர பக்தர் ஹனுமான் என்பது நமக்குத் தெரியும். ஆனால் ஏன் ராமன் அவரை கொல்ல நினைத்தார் என்பது பற்றி இங்கே காணலாம்.

|

ஸ்ரீ ராமர், ராவணனை வதம் செய்த பிறகு, அயோத்தியின் மன்னராக அறிவிக்கப்பட்டார். ஸ்ரீ ராமருடன் இணைந்து போர் புரிந்தவர்கள் அனைவரும் ராமருடன் சேர்ந்து அயோத்தி மாநகருக்கு சென்றனர்.

story behind the war between lord rama and hanuman

அங்கிருந்த பெரியவர்கள், முனிவர்கள் ஆகியோரின் கால்களைத் தொட்டு வணங்கினர். அவர்கள் அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்கப்பட்டது. ஹனுமனும் ராமருடன் அயோத்தி மாநகருக்கு சென்றிருந்தார். ஹனுமான் தீவிர ராம பக்தன் மட்டுமில்லாமல், ஒரு அப்பாவி. சூது அறியாதவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாரதரின் கலகம்

நாரதரின் கலகம்

நாரதர் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அவர் மிகவும் புத்தி கூர்மை மிக்கவர். அதே நேரம் எல்லோரிடமும் கலகம் புரிபவர். "நாரதர் கலகம் நன்மையில் முடியும்" என்ற வாக்கும் உண்டு. அயோத்தியில் இருக்கும் முனிவர் மற்றும் விருந்தினர் கூட்டத்தில் நாரதரும் இருந்தார். அப்போது ஹனுமனிடம், முனிவர்களின் காலைத் தொட்டு வணங்கும் போது முனிவர் விஸ்வாமித்ரரைத் தவிர மற்றவர்களின் காலைத் தொட்டு வணங்குமாறு ரகசியமாகக் கூறினார். விஸ்வாமித்ரர் ஆரம்பத்தில் ஒரு அரசராக இருந்ததால் அவர் ஒரு முழுமையான முனிவர் அல்ல என்றும் கூறினார்.

MOST READ: ஒருத்தரோட பல்லை வெச்சே ஆண்மைக்குறைவு முதல் மாரடைப்பு வரை எல்லா நோயும் கண்டுபிடிச்சிடலாம்... எப்படி?

`ஹனுமானும் விசுவாமித்ரரும்

`ஹனுமானும் விசுவாமித்ரரும்

ஒன்றும் அறியாத ஹனுமான், நாரதரின் வார்த்தைகளை அப்படியே நம்பினார். நாரதரின் கலக குணம் பற்றி அறியாத ஹனுமான், விஸ்வாமித்ர முனிவரைத் தவிர மற்றவர்களின் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றார். விஸ்வாமித்ர முனிவர் ராமரின் குரு ஆவார். ஹனுமான் தன் காலைத் தொட்டு வணங்காதது குறித்து பெரிதாக கோபம் கொள்ளவில்லை விஸ்வாமித்ரர்.

நாரத முனி எதிர்பார்த்ததைப் போல் எதுவும் நடக்க வில்லை. ஆனால் நாரதரால் இதனை லேசாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவருடைய திட்டம் பலனளிக்கவில்லை என்ற எண்ணத்தில் மறுபடி மற்றொரு கலகத்திற்கு முயற்சித்தார். நேராக விஸ்வாமித்ரரிடம் சென்று ஹனுமான் அவர் காலைத் தொட்டு வணங்காமல் போனது பற்றி கூறினார். ஹனுமான் மேல் கோபம் கொள்ளத் தூண்டினார்.

MOST READ: இந்த ஆறு எடத்துக்கு பக்கத்துல வீடு இருந்தா வாழ்க்கையில முன்னேறவே முடியாதாம்... வாஸ்து சொல்லுது

ஹனுமனுக்கு வந்த சோதனை

ஹனுமனுக்கு வந்த சோதனை

ஹனுமான் பற்றி நாரதர் கூறியதைக் கேட்டு எரிச்சலடைந்த விஸ்வாமித்ரர், ஹனுமான் மேல் தீவிர கோபம் கொண்டு , ராமனை அழைத்து ஹனுமனைக் கொல்வதற்கு ஆணையிட்டார். குருவின் ஆணையை ஏற்று ஸ்ரீ ராமர், ஹனுமனை தாக்கத் தொடங்கினார். ஹனுமான் தொடர்ந்து "ராம ராம" என்ற மந்திரத்தை ஜெபித்தார். ஹனுமான் வாயில் இருந்து வந்த இந்த மந்திர வார்த்தையின் சக்தியால், ஸ்ரீ ராமர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட போதும் அவரால் ஹனுமனைக் கொல்ல முடியவில்லை.

இதனை அறிந்து கொண்ட ராமர், பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்து ஹனுமனைத் தாக்கினார் . ஆனால், அதுவும் ராம மந்திரத்தின் சக்தி முன் செயலிழந்து விட்டது. மேலும் ஹனுமானின் ராம பக்தி இந்த சக்தி மிகுந்த ஆயுதத்தின் முன் வெற்றி பெற்று அவரின் உயிரைக் காப்பாற்றியது.

MOST READ: நம்முடைய உள்ளாடைகளை எவ்வளவு நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?

நாரதரின் இதயம் கனிந்தது

நாரதரின் இதயம் கனிந்தது

ஹனுமனின் பக்தியைக் கண்டு அதிசயித்த நாரதர், அவருடைய குறும்புத்தனத்தை தவறு என்று புரிந்து கொண்டு, அதற்காக மன்னிப்பு கேட்க நினைத்தார். அவர் நேராக, விஸ்வாமித்ரரிடம் சென்று ஹனுமனைக் காப்பாற்றுமாறு கூறினார்.

ஹனுமானின் அப்பாவித்தனம் மற்றும் ராமர் மீது அவருடைய பக்தி ஆகியவற்றைப் பற்றி விளக்கிக் கூறி, இந்த தவறுக்கு காரணாம் தான் மட்டுமே என்பதையும் கூறி விஸ்வாமித்ர முனிவரின் ஆணையை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். முனிவரும், ஹனுமானின் ராம பக்தியையும் அன்பையும் புரிந்து கொண்டு, அவரின் ஆணையை திரும்பப் பெற்று, ஹனுமானின் உயிரைக் காப்பாற்றினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

story behind the war between lord rama and hanuman

Lord Hanuman was not only a staunch devotee of Lord Rama, but also purely innocent at heart.
Desktop Bottom Promotion