எலுமிச்சைக்கும் பேய்க்கும் என்ன தொடர்பு?... ஏன் பேய் பிடிக்காமலிருக்க இத கொடுத்தனுப்புறாங்க...

Written By:
Subscribe to Boldsky

மாந்திரீக தந்திரங்களில் கெட்ட ஆவிகளை விரட்டும் விஷயத்தில் எலுமிச்சை பழம் மட்டும் ஏன் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் நினைப்பது போல் எலுமிச்சையும் ஆவிகளும் சொந்தக்காரர்கள் கிடையாது. பரம எதிரிகள்.

spiritual meaning and relationship of lemon in black magic.

ஆவிகளுக்கு எவ்வளவு சக்தி இருந்தாலும் நம் அம்மா சுத்திப்போடும் ஒரு எலுமிச்சை பழத்தை மீறி எந்த ஆவியாலும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆன்மிகத் தொடர்பு

ஆன்மிகத் தொடர்பு

எலுமிச்சை தீய ஆவிகளை நீக்கும் தந்திரத்தில் பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எலுமிச்சையானது திரி சூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இரு புறங்களிலும் வைக்கப்படுகிறது.

கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது இந்தியாவில் மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதனை நோய்வாய்பட்ட மக்களின் அருகில் தொங்கவிடும் போது, இது தீய ஆவிகளை விரட்டி அவர்களை நோய்களிலிருந்து குணமடைய செய்யும் என்று நம்பப்படுகிறது.

எலுமிச்சை விளக்கு

எலுமிச்சை விளக்கு

துர்கா பூஜையின் போது எலுமிச்சை விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. எலுமிச்சை தோல் மெல்லியதாக இருக்க வேண்டும். (ஒற்றை எண்களில், அதிகபட்சம் 9) அதனை நெகிழ்வாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதனை செங்குத்தாக சரிபாதியாக வெட்டி கொள்ள வேண்டும், கிடைமட்டமாக வெட்டக் கூடாது.

சாற்றினைப் பிழிந்து வெளியேற்ற வேண்டும். பின் அந்த பாதி எலுமிச்சையை உள்புறம் வெளியே வருமாறு திருப்பி, ஒரு கிண்ணம் போல் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை எண்ணெய் அல்லது நெய் கொண்டு நிரப்பி திரியிட்டு விளக்கேற்ற வேண்டும்.!

எலுமிச்சை விளக்கின் முக்கியத்துவம்.

எலுமிச்சை விளக்கின் முக்கியத்துவம்.

எலுமிச்சை நம்மை ஒத்ததாகும். மேலும் நாம் நமது உட்பகுதியை கடவுளுக்கு காட்ட வேண்டும். மாயை, பேராசை, காமம் மற்றும் கோபம் ஆகியவற்றை கடவுளுக்கு முன்பாக வெளியே ஏறிய வேண்டும். எலுமிச்சைக்கு உள்ளே இருக்கும் வெள்ளை தோல் நமது தூய மனதையும், இருண்ட பகுதி (மறைந்திருக்கும் பச்சை விதைகள்) மாயையையும் குறிக்கும்.

விளக்குத் திரி தத்துவம்

விளக்குத் திரி தத்துவம்

வாழைத் தண்டில் செய்யப்பட்ட திரியானது குற்றங்களையும், ஜென்ம பாவங்களையும் நீக்குகிறது. பருத்தியில் செய்யப்பட்ட திரி நல்ல அதிர்ஷ்டத்தையும், தாமரை தண்டில் செய்யப்படும் திரி முற்பிறவி வினைகளை நீக்கி வளமான வாழ்க்கையை நிறுவவும், வெள்ளை பூண்டு வகை செடியில் செய்யப்படும் திரி அதிர்ஷ்டம் மற்றும் சொத்துக்களைப் பெருக்கவும், புதிய மஞ்சள் பருத்தி துணி, பராசக்தியின் அருளைப் பெற்று சிக்கல்களிலிருந்து விடுபடவும் மற்றும் புதிய சிவப்பு பருத்தி துணி திருமணம் மற்றும் குழந்தை பெறும் தடைகளை நீக்கி மாயம், மந்திரம், தந்திரம் போன்றவற்றிலிருந்து விடுபடவும் உதவுகின்றது.!

எந்த நாட்களில் விளக்கேற்றுவது சிறந்தது?

எந்த நாட்களில் விளக்கேற்றுவது சிறந்தது?

நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர், அது விரைவில் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால் செவ்வாய் கிழமையன்று ராகு காலத்திலும், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேறுசில வேண்டுதல்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்திலும், 2 எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை மனமுருகி வேண்டினால், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, செழிப்போடும் சந்தோஷமாகவும் வாழலாம்.

பேயை விரட்டும்

பேயை விரட்டும்

ஆவிகளை விரட்டும் மாந்திரிகத்தில் சிவனின் வடிவமாக எலுமிச்சையையும் அதில் மஞ்சள் மற்றும் குங்குமத்தை சக்தியின் வடிவமாகவும் கருதப்படுகிறது. அதனால் தான் நாம் எங்காவது வெளியில் சென்றாலோ வேறு ஏதேனும் பயணம் மேற்கொண்டாலோ அம்மா நம்முடைய பையில் ஒரு எலுமிச்சை பழத்தைப் போட்டு அனுப்புகிறார்கள். அதோடு, வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், ஏதேனும் நல்ல காரியத்திற்கு வண்டியில் செல்லும்போது நமக்கும் வண்டிக்கும் சேர்த்து எலுமிச்சையை சுற்றி நான்கு திசைகளிலும் வீசுகிறார்கள். நான்கு திசைகளில் இருந்தும் எந்த கெட்ட சக்தியும் நெருங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் நான்கு மூலையிலும் வீசுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

spiritual meaning and relationship of lemon in black magic.

some spiritual meaning and relationship of lemon in black magic. black magic is a scary thing.
Story first published: Friday, April 6, 2018, 9:10 [IST]