For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

நெற்றியில் திருநீறு வைப்பதற்காக ஆன்மீக விளக்கங்களும் வழிமுறைகளும் இங்கே விளக்கப்பட்டுள்ளது.

By Mahi Bala
|

கோவிலுக்கோ ஏதேனும் பூஜையிலோ அல்லது வீட்டிலோ சாமி கும்பிட்டு முடித்ததும் திருநீறை நெற்றியில் பூசுகின்ற பழக்கம் இருக்கிறது.

spiritual meaning and procedure to wear viboothi

அப்படி நெற்றியில் திருநீறு கையில் எடுக்கின்ற பொழுதும் அதை நெற்றியில் வைக்கின்ற பொழுதும் சில வழிமுறைகளையும் சம்பிரதாயங்களையும் கடைபிடிக்க வேண்டும். அவற்றைப் பற்றி இங்கே விளக்கமாகக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலது கை

வலது கை

ஒருவரிடம் இருந்து திருநீறை வாங்குகின்ற பொழுது, உங்களுடைய இடது கையினை கீழே வைத்துக் கொண்டு, வயது கையால் வாங்குதல் வேண்டும்.

MOST READ: உங்கள் கைகளில் இந்த முக்கியமான ஏழு ரேகைகள் உடைந்திருந்தால் என்ன நடக்கும்? அதன் அர்த்தம் என்ன?

இடது கை

இடது கை

வலது கையால் திருநீறை வாங்குகின்ற பொழுது, உடனே நாம் என்ன செய்வோம். பொதுவாக, அந்த திருநீறை வலது கையில் இருந்து இடது கைக்கு மாற்றிக் கொண்டு, பின் வலது கையால் எடுத்து நெற்றியில் பூசுவோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது. அப்படி ஒருபோதும் வலது கையிலிருந்து இடது கைக்கு மாற்றக்கூடாது.

தூய தாள்

தூய தாள்

வலது கையில் உள்ள திருநீறை இடது கைக்கு மாற்றக் கூடாது. அப்படியெனில் வலது கையில் உள்ள திருநீறை ஒரு தூய்மையான பேப்பரில் அல்லது பூஜைக்கு எடுத்துச் சென்ற தேங்காய் ஆகியவற்றில் வைத்துக் கொள்ளலாம்.

கீழே சிந்துதல்

கீழே சிந்துதல்

திருநீறை சிலர் வைத்துக் கொண்டபின், அதை கோவிலாக இருந்தால் ஏதேனும் தூண்களில் கொட்டி விடுவார்கள். அல்லது கீழே கொட்டி விடுவார்கள். அப்படி செய்வது மிகமிகத் தவறு. திருநீறை ஒருபோதும் கீழே சிந்தவே கூடாது. ஒருவேளை அப்படி சிந்திவிட்டால், அந்த இடத்தை உடனடியாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

கோவில் தூண்

கோவில் தூண்

Image Courtesy

கோவில்களில் வாங்குகின்ற திருநீறை மீண்டும் கோவிலில் ஏதேனும் ஒரு இடத்திலோ அல்லது தரையிலோ அல்லது தூண்களிலோ கொட்டிவிடக் கூடாது.

நெற்றியில் பூசும்போது,

நெற்றியில் பூசும்போது,

திருநீறை நெற்றியில் வைக்கின்ற பொழுது, கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் திரும்பி நின்றவாறு தான் நெற்றியில் இட வேண்டும்.

MOST READ: பருத்த உடம்பையும் ஊசிபோல் மெலியச் செய்யும் கருணைக்கிழங்கு... எப்படி சாப்பிடணும்?

மந்திரம்

மந்திரம்

திருநீறு நெற்றியில் பூசுகின்ற பொழுது, சிவனுடைய நாமங்களான சிவ சிவ, ஓம் நமச்சிவாய, ஓம் சிவாய நமஹ ஆகிய மந்திரங்களை உச்சரித்தல் நலம்.

இஷ்ட தெய்வம்

இஷ்ட தெய்வம்

திருநீறை நெற்றியில் அணியும் போது, சிவனைப் போலவே அவரவர் இஷ்ட தெய்வங்களையும் மனதில் நிறைத்து வழிபட்டுக் கொண்டே வைக்க வேண்டும்.

திருநீறு என்றால், ஐஸ்வர்யம் என்று பொருள். அப்படியென்றால், ஐஸ்வர்யம் முழுமையாக நம்மிடம் வர வேண்டும் என்று நினைத்து திருநீறு வைக்க வேண்டும்.

பட்டை போடுதல்

பட்டை போடுதல்

ஆண்களில் சிலர் திருநீறை நெற்றியில் பட்டையாக அணிவதுண்டு. அப்படி பட்டைஇடுவதற்கும் சில முறைகள் உண்டு. ஆம். நெற்றியில் திருநீறை பட்டையாக அணிகின்ற பொழுது, இடது கண்ணினுடைய புருதவத்தின் தொடக்கத்தில் ஆரம்பித்து வலது கண் புருவத்தின் இறுதி வரையிலும் அணிய வேண்டும்.

MOST READ: ஆயுள் விஷயத்தில் விதி மாறுமா? எந்தெந்த பாவத்தால் ஆயுள் குறையும் என விதுர் நீதி சொல்கிறது?

குங்குமம்

குங்குமம்

முழு நெற்றியிலும் திருநீறை அணிந்து கொள்ளலாம். அவ்வாறு அணிந்து கொண்டு, இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அம்பாளுக்குரிய குங்குமத்தை இட்டுக் கொள்ளலாம்.

நன்மைகள்

நன்மைகள்

ஆன்மீகத்தில் திறுநீறு அணிவதால் நிறைய நன்மைகள் இருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றன. அவை,

சிவனருள் கிடைக்கும்

மன அமைதி உண்டாகும்

ஹிப்னாடிசம் செய்ய நடுநெற்றியை தான் பயன்படுத்துவார்கள். அதே திருநீறு, குங்குமம் வைத்த இடத்தில் ஹிப்னாடிசம், செய்வினைகள் தவிர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

MOST READ: உலகம் முழுவதும் துரதிஷ்டம் தரும் மாய எண்களாக நம்பப்படும் எண்கள் என்னென்ன?

திருநீறு நம் நெற்றி மற்றும் தலையில் தேங்கும் தேவையற்ற நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது.

திருநீறு இட்டுக் கொண்டு வெளியே சென்றால், கண் திருஷ்டி உண்டாகாமல் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

spiritual meaning and procedure to wear viboothi

we are giving important tips for the spiritual meaning and procedure to wear viboothi.
Story first published: Monday, October 22, 2018, 16:55 [IST]
Desktop Bottom Promotion