Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
பூமியில் எப்போது பேரழிவு உண்டாகும்? மகாபாரதத்தில் வியாச முனிவர் சொல்லும் அறிகுறிகள்
உலகில் உண்டாகும் பேரழிவு பற்றி மகாபாரதத்தில் வியாசர் என்னென்ன அறிகுறிகள் பற்றி பேசுகிறார் என்கிற கதை இங்கே கூறப்பட்டுள்ளது.
ராமாயணத்தைப் பொறுத்தவரை அது குடும்ப உறவுகளின் புனிதத்தன்மை, நீதி நெறிகளை பின்பற்றி, அரசருக்கும் அவரது குடிமைகளுக்கும் உள்ள உறவு, தீமையை அழிப்பது போன்றவற்றை பற்றி கூறுகிறது.

ஆனால் இன்னொரு புறம், மகாபாரதமோ, குடும்ப உறவுகளில் கசப்பு, பொறாமை, சகோதரர்களுக்கிடையே போர் உறவுகளில் சிக்கல் பதவிக்கான போராட்டங்கள் போன்றவற்றை பற்றியது.

இந்து புராணங்கள்
இந்து மதத்தில், ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலிருந்து இரண்டு புகழ்பெற்ற போர்களைப் பற்றி சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்த போர்கள் தெய்வீக பாத்திரங்களின் தொடர்ச்சியான செயல்களின் விளைவாக இருந்ததாக சிலர் நம்புகின்றனர், மற்றவர்களோ தர்மத்தை நிலைநாட்ட கடவுளால் நடத்தப்பட்ட தெய்வீக நாடகம் என்கின்றனர்.

மகாபாரதம்
மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சம்பவத்தின்படி 'தெய்வீக பார்வை'யை ஆசீர்வாதமாகப் பெற்ற வியாச ரிஷி அரச குளத்தில் நடக்கப் போகும் விரிசலை ஏற்கனவே அறிந்திருந்தார். உலகில் நடந்த குழப்பங்களை பார்த்த அவர் திருதராஷ்டிரன் தன் மகன்களையும், ராஜ்யத்தையும் முழுவதுமாக இழந்து விடுவார் என்றார்.

வியாசர்
மகரிஷி வியாசர் வரப்போகும் யுத்தம் மிகவும் பயங்கரமானதாக இருக்கும், சுற்றி இருக்கும் அனைத்தையும் அழித்து விடும் என்றும் கூறினார். அவர் தனது தெய்வீகப் பார்வையை திருதராஷ்டிரனுக்கும் அருளி, உலகில் ஏற்படப்போகும் பேரழிவை பற்றி அவருக்கு தெரிவிக்க விரும்பினார். நிராதாவாக நின்ற திருதராஷ்டிரன் வியாசரிடம் இந்த ஆசிர்வாதத்தை சஞ்சய்க்கு வழங்கும் படி வேண்டுகிறார், அப்போதுதான் அவர் அதை எடுத்துரைப்பார் என்றும் தனக்கு தன் வம்சம் அழிவதைப் பார்க்கும் சக்தி இல்லை என்றும் கூறுகிறார்.

உலகப் பேரழிவு
சஞ்சயன் வியாசரிடம் வரப்போகும் பயங்கரமானதாக யுத்தத்தை எப்படி தெரிந்துகொள்வது என்று கேட்கிறார். வியாசர், எப்போதெல்லாம் நான் இங்கே குறிப்பிடும் அறிகுறிகள் தென்படுகிறதோ அப்போதெல்லாம் மிகப் பெரிய அழிவு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றார்.

புழுதிப்புயல்
அடிக்கடி நிகழும் பூகம்பங்களால் பூமி பாதிக்கப்படும் போது, சில நாட்கள் தொடர்ந்து புழுதிப் புயல் ஏற்படும் போது, ஒரே வருடத்தில் தொடர்ந்து கிரகணங்கள் ஏற்படும்போது பேரழிவு காலம் நெருங்குகிறது என்று அர்த்தம்...

அமாவாசை
பொதுவாக அமாவாசை கிருஷ்ண பக்க்ஷத்தின் பதின்மூன்றாம் நாள் வரும், ஆனால் அதுவே கிருஷ்ண பக்க்ஷத்தின் பதினாறாம் நாள் நிகழ்ந்தால் அது நல்ல அறிகுறி அல்ல.

குளோபல் வார்மிங்
கைலாசம், மந்த்ராச்சல், இமாலயம் போன்ற பனி மூடிய மலைகளில் வழக்கத்தை விட அதிகமாக அடிக்கடி பனிக்கட்டிகள் உடைந்தால் விரும்பத்தகாத நிகழ்வு நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பௌர்ணமி நிலா
பௌர்ணமி நிலவு வழக்கத்தை விட பிரகாசமானதாக இருந்தும், அதன் வெளிச்சம் பூமியை வந்தடைய தடங்கல்கள் ஏற்பட்டால், பூமியை வந்தடையா விட்டால் அதுவும் அசாதாரண நிகழ்வு ஏற்படப் போவதைக் குறிக்கும்.



Click it and Unblock the Notifications
