பாலியல் இச்சைக்கு ஆண் குழந்தைகளை நாடும் மக்கள் !

Subscribe to Boldsky

பாலியல் வன்கொடுமை என்பது பெண்களுக்கு எதிராக நடப்பது மட்டுமல்ல ஆண்களுக்கும் நடக்கிறது குறிப்பாக பதினைந்து வயதிற்குள் இருக்கிற ஆண் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவமாக இருக்கிறது.

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வது தண்டனைக்குரிய குற்றமாக இந்தியாவில் அறியப்பட்டாலும், நமது அண்டை நாடான பாகிஸ்தானில் சர்வ சாதரணமாக ஆண் குழந்தைகளை பாலியல் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். நாள் தோறும் பாலியல் சார்ந்த வன்கொடுமைகள், அடி உதை,போதைப் பழக்கம் என இளம் தலைமுறையினர் நாளுக்கு நாள் மிகவும் மோசமான இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் இருக்கிற பெஷாவர் என்ற ஊர் குழந்தை பாலியல் தொழிலுக்கு மிகவும் பெயர் போனது. இது எதோ பல வருடங்களுக்கு முன்னால் நடந்த கதையல்ல இன்றைக்கும் அங்கே இதே நிலைமை தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன தப்பு :

என்ன தப்பு :

ஒரு விஷயத்தை மறைமுகமாக செய்யும் போது மட்டுமே அது தவறாக பார்க்கப்படும். அந்த பகுதியில் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. தெரிந்தும் யாரும் எதுவும் ரியாக்ட் செய்யவில்லை என்று சொன்னால் அவ்வளவு தான் அது இங்கே சாதரணமாக நடக்கும் தானே என்று சொல்லி மிக எளிதாக கடந்து விடுவோம்.

அது தவறு தான் என்று ஒப்புக் கொள்ளவே சிலர் மறுத்துவிடுவார்கள். மனதளவில் அதற்கு நாம் பழக ஆரம்பித்துவிடுவோம். இதே சூழல் தான் தற்போது பெஷாவரில் நடந்து கொண்டிருக்கிறது.

பாதிப்பு :

பாதிப்பு :

கலாச்சாரம், மதம், பொருளாதரம் போன்ற பல்வேறு அடுக்குமுறைகளிலிருந்து ஒரு கூட்டம் ஒதுக்கப்படுகிறது. அந்த கூட்டத்தினரை யார் வேண்டுமானாலும் சுரண்டலாம். யாரும் கேள்விகேட்க மாட்டார்கள் என்று நாம் ஒரு சமூகத்தை கட்டமைத்து வைத்திருக்கிறோம் அல்லவா? அதுவே இந்தப் பிரச்சனையின் ஆரம்ப புள்ளியாக இருக்கிறது.

இது குழந்தைகளை மட்டும் பாதிக்கிற விஷயம் அல்ல அதையும் தாண்டி இந்த விஷயம் ஒரு சமூகத்தையே சீர்குலைக்கக்கூடியது.

பெஷாவர் :

பெஷாவர் :

பெஷாவரில் இது கொடூரம் நிகழ்வதால் பெஷவர் மட்டும் இதற்கு காரணமாக இருக்கவில்லை. அங்கே இந்த கொடூரம் நிகழ்வதற்கு பல காரணங்கள் இருக்கிறது. முதலாவது ஆஃப்கான் ஆக்கிரமிப்பு. 1980 ஆம் ஆண்டு சோவியத் போர் நடந்த போது ஆப்கானிலிருந்து ஒரு கோடிக்கும் அதிகமான ஆப்கானியர்கள் அகதிகளாக பெஷாவருக்கு வந்தார்கள். நாளடைவில் பெஷாவரில் ஆஃப்கானிஸ்தான் கலாச்சாரம் மேலோங்கத் துவங்கியது.

ஆப்கானிஸ்தான் கலாச்சாரம் :

ஆப்கானிஸ்தான் கலாச்சாரம் :

ஆப்கானிஸ்தான் மக்களிடையே பச்சா பஸ்ஸி என்ற ஓர் வழக்கம் இருக்கிறது. அதன் படி ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளை போட உடை அணிந்து நடனம் ஆடி மகிழ்விப்பார்கள். பணக்காரர்கள் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வதும் உண்டு, அதனால் இது மிகப்பெரிய விஷயமாக அங்கே பார்க்கப்படுவதில்லை.

திருமணத்திற்கு முன்னால் உறவு வைத்துக் கொள்வது என்பது மிகப்பெரிய பாவமாக பார்க்கப்படுகிறது. இதனால் குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைப்பதில் துவங்கி கொலை செய்யக்கூட தயங்குவதில்லை. இதனால் அவர்களின் கவனம் யாரும் கேட்பாரற்று கிடக்கிற தெரு குழந்தைகள் மீது விழுந்துள்ளது. தெருவில் இருக்கிற குழந்தைகளுக்கு உணவோ அல்லது சொற்ப பணமோ கொடுத்தால் போதும்.

அதோடு யாரிடமும் சொல்லக்கூடாது சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டுவது இல்லையென்றால் பணம் தருகிறேன் என்று சொல்வதினால் விஷயம் பாதுகாக்கப்படுகிறது.

ஆண் பெண் :

ஆண் பெண் :

அங்கே நிலவுகிற ஆண் பெண் ஏற்றத்தாழ்வும் இதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. ஒரு பெண்ணை வீட்டை விட்டு அழைத்துச் செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல வீட்டை விட்டு இறங்கியதிலிருந்து எல்லாரும் அந்தப் பெண்ணையும் அவளுடன் வருபவரையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அந்தப் பெண் தன் குடும்பத்தினர் அல்லாது வேறு யாருடனோ செல்கிறாள் என்று சொன்னால் அந்த விஷயம் தெருவைத் தாண்டுவதற்குள் எல்லாருக்கும் கசிந்திடும். அதோடு யாருமே தங்கள் வீட்டுப் பெண்ணை வெளியில் அழைத்துச் செல்லவே விரும்ப மாட்டார்கள். பெண் என்பவள் தங்களின் கௌரவமாக பார்க்கப்படுவதால் அவளை வீட்டிற்குள்ளேயே இருக்கச் செய்திடுவார்கள்.

ஆண் குழந்தைகள் :

ஆண் குழந்தைகள் :

ஆண் குழந்தைகளை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம். அதனை யாரும் விசித்திரமாக பார்க்க மாட்டார்கள். அதோடு குழந்தை என்பதால் நாம் சொல்வதை கேட்டுக் கொள்ளும். அதோடு எந்த ஆதரவும் இன்றி தெருவில் சுற்றித் திரியும் குழந்தைகளே இவர்களின் முக்கிய டார்கெட்டாக இருக்கிறது.

முன்னதாக குழந்தைக்கு போதை மருந்து கொடுத்து போதைப் பழக்கத்திற்கும் அடிமையாகிறார்கள். பின்னர் தங்களுக்கு தொடர்ந்து போதை மருந்து வேண்டும், பணம் வேண்டும் என்ற சூழலை உருவாக்கி பணத்திற்காக என்னிடம் வா என்று அழைத்து தங்களின் இச்சையை தீர்த்துக் கொள்கிறார்கள்.

வறுமை :

வறுமை :

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் வறுமை. பெஷாவரில் வாழ்கிற பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் தான் வாழ்கிறார்கள். ஒரு வேலை உணவுக்கே திண்டாடும் நிலைமை தான். ஒரு அறை கொண்ட வீட்டில்தான் ஐந்தாறு குழந்தைகளுடன் உறங்குகிறார்கள்.

அத்தனை குழந்தைகள் மத்தியில் பெற்றோர் உறவு கொள்வது என்பது அங்கே சாதரணமாக நடக்கிறது. வீட்டில் அதைப் பார்த்தே வளர்ந்த குழந்தைகள் இதை தவறு என்றோ அல்லது தனக்கு எதிராக நடக்கிற அத்துமீறல் என்றோ உணர்வதில்லை மாறாக அதுவும் ஓர் அன்பின் வெளிப்பாடு என்பதாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

நயீம் :

நயீம் :

பெஷாவரிலிருந்து மீட்கப்பட்ட ஒரு குழந்தை தான் நயீம். நயீமுக்கு தற்போது பதினான்கு வயது. கராச்சியில் பெற்றோருடனும் தனது சகோதரனுடனும் வசித்து வந்தான். ஒரு கட்டத்தில் பெற்றோர் இருவரும் இறந்து போகவே, அண்ணனின் கொடுமை தாங்காது வீட்டை விட்டு ஓடி வந்திருக்கிறான்.

அங்கே இங்கே என சுற்றி பலரது கை மாறி அவன் கொண்டு வந்து விடப்பட்ட இடம் பெஷாவர். இங்கே இவனைப் போலவே ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களின் முக்கிய தொழிலே குப்பை பொறுக்குவது தான். அதை விற்று அன்றைய உணவை முடித்துக் கொள்வார்கள்.

பேருந்து நிலையம் :

பேருந்து நிலையம் :

இவர்களுக்கு என்று தங்குமிடம், பாதுகாவலர் என்று யாரும் இருக்கமாட்டார்கள். ஒன்று இரண்டு அல்ல எக்கச்சக்கமான குழந்தைகள் இப்படி தெருவில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். பெஷாவர் பேருந்து நிறுத்தத்தில் அதிகளவில் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது நடக்கிறது.

டிரைவர்களும் கண்டெக்டர்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. பேருந்திலேயே கூட குழந்தைக்கு எதிரான பாலியல் அத்துமீறல் நடக்க எதுவும் நடக்காதது போல வெளியில் நின்று கொள்ளும் வாடிக்கை அங்கே இருக்கிறது.

இரவுக்கு குழந்தை வேண்டும் :

இரவுக்கு குழந்தை வேண்டும் :

பல ஆயிரம் கிலோமீட்டர் பயணித்துக் கொண்டு வரும் லாரி மற்றும் ட்ரக் ட்ரைவர்களுக்கு ரோட்டோரத்தில் ஹோட்டல் திறந்து வைத்திருப்பது போல அவர்கள் ஓய்வெடுக்கவும் கட்டில் வழங்கப்படுகிறது. இரவு அங்கேயே சாப்பிட்டு தூங்கி காலையில் எழுந்து செல்வது வழக்கம்.

அங்கே கூடுதலாக இன்னொரு வழக்கமும் இருக்கிறது வருகிற டிரைவர்கள் தங்களின் பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்ள ஒரு குழந்தை வேண்டும் என்று கேட்கிறார்கள். கூடுதலாக பணம் கொடுப்பதாகச் சொல்ல அந்த கடைகாரர்களே பணத்தை வாங்கிக் கொண்டு தெருவில் சுற்றித் திரியும் குழந்தைகளை உணவு வழங்குவதாகவோ அல்லது பணம் கொடுப்பதாகவோ சொல்லி இவர்களிடம் கொடுத்து விடுகிறார்கள்.

இரண்டு நாட்கள் தூங்கவேயில்லை :

இரண்டு நாட்கள் தூங்கவேயில்லை :

நயீம் எட்டு வயதில் இங்கே வந்திருக்கிறான். முதன் முதலாக ஒரு பஸ் டிரைவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். அன்றைய இரவு முழுக்க அழுது கொண்டேயிருந்தேன். இரண்டு நாட்களாக வேலைக்கும் செல்லவில்லை. பின்னர் பசித்தது. நாளெல்லாம் குப்பையை பொறுக்கி அதை விற்று அதன் பின் சாப்பிட வேண்டிய நிலை ஆனால் பசி வயிற்றைக் கிள்ளியது உடனடியாக உணவு வேண்டும் என்ன செய்ய என்று யோசித்த போது, அந்தக் கடைக்காரரிடம் சென்றால் யாரிடமாவது என்னை அனுப்பி பணமோ உணவோ கொடுப்பார் என்று தோன்றியது. வேறு வழி தெரியவில்லை அங்கே சென்று விட்டேன்.

சாப்பிட்டேன். இதில் என்னுடைய தவறு என்ன என்று எனக்கு எதுவும் தெரியவில்லை என்கிறான்.

நின்றால் போதும் :

நின்றால் போதும் :

இரவு ஆகிவிட்டால் போதும், தெருவில் குறிப்பிட்ட இடம் இருக்கிறது அங்கே போய் நின்றாலே போதும் எங்களை அழைக்க பலரும் வருவார்கள். நாங்கள் வரிசையாக போய் நிற்போம் இங்கே பேரம் பேசுவது எல்லாம் கிடையாது, அழைத்தால் சென்று விடுவோம். சிலர் உணவு வாங்கி கொடுப்பார்கள். சிலர் கையில் காசு கொடுத்து அனுப்புவார்கள் சிலர் எதுவுமே கொடுக்காமல் துறத்தி விடுவதும் உண்டு.

என்ன செய்ய முடியும் :

என்ன செய்ய முடியும் :

இது குறித்து கடந்த ஆண்டு ஒரு டாக்குமென்ட்ரி எடுக்கப்பட்டிருக்கிறது அதனை மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்திருக்கிறார்கள். அந்த டாக்குமென்ட்ரியில் பேருந்து ஓட்டுநிடமும் நடத்துனரிடமும் பேசப்படுகிறது. அப்போது அவர்கள் கூறுகையில்,. தெருவில் வருகிறவர்கள் எல்லாரும் நல்லவர்களாக இருப்பார்களா என்ன?

பிற பெண்களை காம உணர்வுடன் அணுகுவதே இஸ்லாம் தவறு என்கிறது. அதோடு குழந்தைகளிடம் இப்படியான உறவு வைத்துக் கொள்வதும் இஸ்லாத்திற்கு எதிரானது தான். ஆனால் என்ன செய்ய எங்களின் இச்சையை தீர்த்துக் கொள்ள வேறு வழியில்லை என்கிறார்கள்.

நானும் குற்றவாளி :

நானும் குற்றவாளி :

நயீம் பாதிக்கப்பட்டவன் மட்டுமல்லாமல் அவனும் பிற சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். பெஷாவரில் ஹெராயின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சிறுவர்களுக்கு கூட அது எளிதாக கிடைப்பதால் சிறுவர்கள் அதனை பயன்படுத்த துவங்கிவிடுகிறார்கள். போதை தலைக்கேறியதும் என்ன செய்வதென்றே தெரியாமல் சிலர் மூர்க்கத்தனமாக மாறுவதும் உண்டு.

நான் போதை மருந்து பயன்படுத்தியதும் எனக்கு அதீத கோபம் வரும் யாரிடம் என்னுடைய கோபத்தை காட்ட முடியாது என்பதால் என் உடலில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வேன், ப்ளேடால் அறுத்துக் கொள்வேன்.

இன்னொரு சிறுவன் :

இன்னொரு சிறுவன் :

நானும் ஒர் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறேன். அவனுக்கு பத்து அல்லது பதினோறு வயது இருக்கலாம். அவனுக்கு திரையரங்கிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தேன் அவன் முதலில் மறுத்தான் பின் திண்பண்டம் வாங்கி கொடுத்ததும் அமைதியாகிவிட்டான்.

ஒரு கட்டதில் என் உடலை நான் வெறுக்கத் துவங்கிவிட்டேன். இங்கிருந்து நான் எப்படியாவது கராச்சிக்கு தப்பிச் செல்ல வேண்டும் அங்கே நான் மறுபடியும் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது என்கிறான் நயீம்.

தம்பியைப் பற்றி :

தம்பியைப் பற்றி :

கராச்சியில் வசிக்கிற நயீமின் அண்ணன், நயீம் பெற்றோர் இறந்ததிலிருந்து மாறிவிட்டான், அடிக்கடி கோபப்படுவான், தெருவில் இருக்கிற சிறுவர்களுடன் சேர்ந்து எப்போதும் எதாவது சேட்டை செய்து கொண்டேயிருப்பான்.மார்க்கெட்டில் போய் சின்ன சின்ன திருட்டுகளில் எல்லம ஈடுபட்டான். நானே அவனை இரண்டு முறை கையும் களவுமாக பிடித்தேன்.

வீட்டிற்கு அழைத்து வந்து அடித்து வெளியில் கட்டிவைத்துவிடுவேன். பின் மாலையில் அவிழ்த்து விடுவேன். இன்னொரு முறை இப்படி எதாவது தவறு செய்தால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டினேன். அவ்வளவு தான் அதன் பிறகு அவனை நான் பார்க்கவேயில்லை இங்கிருந்து ஓடிவிட்டான்.

அவன் என்ன செய்கிறான் :

அவன் என்ன செய்கிறான் :

அவன் பெஷாவரில் இருக்கிறான் அங்கே தன் உடலை விற்று பணம் சம்பாதிக்கிறான் என்பது தெரியுமா? அதைப் பற்றி எப்போதாவது உங்களிடம் சொல்லியிருக்கிறானா என்று கேட்கிறார்கள் அதற்கு பதிலளித்த நயீமின் சகோதரர் இல்லை என்னிடம் அப்படி எதுவும் சொன்னதில்லை.

அது மிகப்பெரிய பாவம் இங்கிருப்பவர்களுக்கு தெரிந்தால் எங்களை என்ன நினைப்பார்கள். அவன் நிறைய பாவங்களை செய்திருக்கிறான் அதனால் அதான் அவனுக்கு அப்படி நடக்கிறது என்கிறார்.

எயிட்ஸ் :

எயிட்ஸ் :

நயீம் அங்கிருந்து மீட்கப்பட்ட கராச்சியில் இருக்கிற ஒரு ஹோமில் சேர்க்கப்படுகிறான். பெஷாவரிலேயே இப்படி பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான ஒரு ஹோம் செயல்படுகிறது ஆனால் அங்கே மிக குறைந்த அளவிலான சிறுவர்களே இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவியும் பெரிதளவில் கிடைப்பதில்லை.

நிறைய பணம், போதைப் பழக்கத்திற்கு அடிமையான சிறுவர்கள் ஹோமிலிருந்து ஓடிவிடுவதும் உண்டு. மனதளவில் பெரும் பாதிப்பை சந்தித்த நயீம் தற்போது பெஷாவரிலிருந்தே நான் சென்று விட வேண்டும் என்று விரும்பினான். அதனால் கராச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே ஒரு ஹோமில் சேர்க்கப்பட்டான்.

மகிழ்ச்சி :

மகிழ்ச்சி :

அங்கே முதலில் இவனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நான் பலருடன் உறவு வைத்திருக்கிறேன். அதனால் எனக்கு எயிட்ஸ் இருக்க வாய்ப்புண்டு என்றார்கள். எனக்கு இருக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன். நல்ல வேளையாக பரிசோதனை முடிவு நான் நினைத்தபடியே வந்திருந்தது, அங்கே என்னை ஒரு செல்லில் அடைத்து வைத்திருந்தார்கள். பெஷாவரில் நினைத்த நேரத்தில் ஹெராயின் கிடைக்கும். ஆனால் இங்கே அது இல்லாமல் ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டேன்.

இரண்டு முறை இந்த ஹோமை விட்டு ஓடியிருக்கிறேன். என்னை மீண்டும் கண்டுபிடித்து இங்கே வந்து சேர்த்துவிட்டார்கள்.

நேரமில்லை :

நேரமில்லை :

பெஷாவரில் அடிக்கடி தீவிரவாத தாக்குதல் மற்றும் போலீஸுக்கும் தலிபான்களுக்கும் இடையில் தாக்குதல், துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு என்று நிகழ்ந்து கொண்டேயிருக்கும். அவரவர் உயிரை காப்பாற்றிக் கொள்வதே பெரிய விஷயமாக இங்கே இருக்கிறது. கடந்த ஏழு மாதங்களில் 700க்கும் மேற்பட்ட போலீசார் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த பிரச்சனைக்கு நடுவே தெருவில் இருக்கிற குழந்தைகளைப் பற்றியும் அவர்களுக்கு நடக்கிற கொடுமைகளைப் பற்றியும் இங்கே சிந்திக்க யாருக்கும் நேரமில்லை.

கனவு :

கனவு :

பின்னர் மருத்துவ சிகிச்சை,கவுன்சிலிங் என்று என்னை கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீட்டிருக்கிறார்கள். இப்போது என் வயதொத்த சிறுவர்களுடன் விளையாடுவது டி.வி.பார்ப்பது படிப்பது என்று நிம்மதியாக இருக்கிறேன்.

பெஷாவரிலிருந்து மீட்கப்பட வேண்டியது நயீம் மட்டுமல்ல அங்கே என்னைப் போன்ற இன்னும் ஏராளமான சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் மீட்க வேண்டும்.நான் படித்து பெரியவன் ஆனதும் அவர்களை போய் மீட்பேன். அதுவே என் கனவும் கூட என்கிறான் நயீம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: insync pulse
  English summary

  Shocking Story of Peshawar Child Abuse

  Shocking Story of Peshawar Child Abuse
  Story first published: Tuesday, May 22, 2018, 16:07 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more