For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பியூட்டி அண்ட் பீஸ்ட் குடும்பத்தைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

அழகிய இளம்பெண் ஒருத்தியும் காட்டுமிராண்டியான ஒரு ஆணும் பல்வேறு போராட்டங்களை கடந்து காதலித்து கரம்பிடிக்கும் கதையை திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால் இது பியூட்டி அண்ட் த பீஸ்ட் என இயல்பு வாழ்க்கை

|

டிஸ்னியின் ஒரு படைப்பான பியூட்டி அண்ட் த பீஸ்ட் குறித்து உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். இது ஏதோ கற்பனையான படைப்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

இல்லை, இந்த கேரக்டர்களை ஒரு ரியல் கப்பிலை பார்த்து தான் உருவாக்கியிருக்கிறார்கள். எதோ ஒரு சாபத்தில் மிக அகோரமான முகத்தை பெற்றிடுவான் ஹீரோ, எல்லாரும் அவனைப் பார்த்து அஞ்சி நடுங்கு நம் அழகு தேவதை ஹீரோயினுக்கு அவன் மேல் காதல் அரும்பும் எல்லாரும் அவனின் வெளித்தோற்றத்தை பார்த்து உதாசீனப்படுத்த நம் ஹீரோயின் மட்டும் அவனது உள்ளத்தை பார்ப்பாள், அவனது உண்மையான மனதை புரிந்து கொள்வாள்.

இவர்களுக்கு ஆதரமாக விளங்கிய அந்த ரியல் ஜோடி யார் தெரியுமா? கேத்ரீன் மற்றும் பீட்டர்ஸ் கோனசலவுஸ். இவர்கள் இயற்கையின் அரசர் அரசி என்று போற்றப்பட்டார்கள்.இவர்கள் 1500 காலகட்டத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

பார்னம் என்பவர் பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசவையில் இருந்த பொருட்களை விளையாட்டாக ஆய்வு செய்திருக்கிறார். அப்போது தான் அரண்மனையில் விசித்திர மனிதன் ஒருவன் வாழ்ந்ததற்கான அடிப்படை ஆதாரம் கிடைத்திருக்கிறது.

பீஸ்ட்டாக நாம் கருதுகிற பீட்டர்ஸ் முகம் முழுவதும் முடியாய் நிறைந்து வினோத முகத்துடன் இருந்திருக்கிறான். பிரஞ்சு அரசாங்கத்தில் அவனை ஒரு கேலிப்பொருளாக வைத்திருந்தார்கள். அங்கிருக்கக்கூடிய அரசர்களை மகிழ்விக்க இவனை கிண்டல் செய்து சிரித்து மகிழ்ந்தார்கள். அதன் ஒரு பகுதியாக இந்த பீஸ்ட்டுக்கு விளையாட்டாக திருமணம் செய்ய நினைத்திருக்கிறார்கள்.

Image Courtesy

#2

#2

கற்பனையில் நீங்கள் பார்த்த கதையை விட பீட்டரஸ் எக்கச்சக்கமான இன்னல்களை தன் இளவயதில் அனுபவித்திருக்கிறான். பீட்டர்ஸைத் தவிர அவன் குடும்பத்தில் வேறு யாருக்குமே இப்படியான இன்னல்கள் ஏற்பட்டிருக்கவில்லை. பீட்டர்ஸுக்கு பத்து வயதாகும் வரையிலும் அவனது உருவத்தைப் பார்த்து பெற்றோரே பயந்திருந்தார்கள். அதோடு அவனை ஒரு கூண்டுக்குள் அடைத்து ஒரு மிருகத்தை போலவே நடத்தினார்கள்.

Image Courtesy

#3

#3

தங்களது காதலால் சாபத்தை எப்படி வென்றெடுக்கிறார்கள் என்பதே கதை. 1991 ஆம் ஆண்டே இந்த கதை அனிமேஷன் திரைப்படமாக வந்திருக்கிறது அதன் பிறகு கடந்த ஆண்டு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் இன்றைய யுகத்தினருக்கு ஏற்ப திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து பியூட்டி அண்ட் த பீஸ்ட் திரைப்படம் வெளியானது.

ஆனால் இவர்களுக்கு ஆதாரமாக விளங்கிய ப்யூட்டி அண்ட் த பீஸ்ட் ரியல் ஸ்டோரி எப்படியிருந்தது தெரியுமா? உண்மையில் அவர்களுக்கு சாபமும் இல்லை, சாபம் நீங்கியவுடன் அந்த கொடூர உருவம் மறையவும் இல்லை, அந்த அழகி கடைசி வரை தன் காதலனை அப்படியே ஏற்றுக் கொண்டிருந்தாள்.

Image Courtesy

#4

#4

கெனரி தீவுகளில் 1537 ஆம் ஆண்டு பீட்டர்ஸ் பிறந்திருக்கிறான். திரைப்படத்தில் காண்பிப்பது போல அஜானபாகுவான உடல், கொம்புகள் போன்றெல்லாம் இருக்கவில்லை பிறரை விட சற்று உயரமாகும் பருமனாகவும் இருந்திருக்கிறான். முகம் மற்றும் உடல் முழுவதுமே முடி இருந்திருக்கிறது.

மற்றபடி சாதரண மனிதன் போலவே இருந்திருக்கிறான். ஆனால் அப்போதைய மக்கள் இவனை தங்களோடு ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு மிருகத்தைப் போலவே நடத்தினார்கள்.

Image Courtesy

#5

#5

கூண்டில் அடைக்கப்பட்ட பீட்டர்ஸுக்கு விலகுங்களுக்கு அளிக்கப்படும் சமைக்கப்படாத பச்சையான கறியைத் தான் உணவாக கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு 1547 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டினை ஆண்டு வந்த இரண்டாம் ஹென்றி அரசருக்கு பரிசாக இந்த பீட்டர்ஸ் அனுப்பப்பட்டிருக்கிறான்.

Image Courtesy

#6

#6

பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டவுடன் அங்கேயிருக்கும் மக்கள் எல்லாம் இவனை மிகவும் வினோதமாக பார்த்துச் சென்றார்கள். இவன் மனிதனா அல்லது மிருகமா என்றே எல்லாரும் சந்தேகித்தார்கள்.

அரசவையில் இருந்த மருத்துவர்கள் குழு தீவிரமாக ஆராய்ந்து பீட்டர்ஸ் விலங்கு அல்ல அவன் மனிதன் தான் என்று ஊர்ஜிதமாக தெரிவித்தாரக்ள்.

Image Courtesy

#7

#7

அதோடு பிற மனிதர்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் பீட்டர்ஸுக்கும் இருக்கிறது. அவனது சருமமும் மிகவும் மென்மையாக நம்மைப்போலவே இருக்கிறது ஒரே ஒரு வித்யாசம் அவனது சருமம் முழுவதிலும் அடத்தியான முடிகள் வளர்ந்திருக்கிறது.

அவன் பேசுவான், நம்மைப் போலவே சாப்பிடுவான்,சிரிப்பான், ஆடுவான் அவனுக்கு பத்து வயது தான் ஆகிறது என்று சொன்னார்கள் அரண்மனை மருத்துவர்கள்.

Image Courtesy

#8

#8

ஹென்றி அரசர் அவனுக்கு கல்வி புகட்ட எண்ணினார். ஆனாலும் அவருக்கு பீட்டர்ஸ் என்பவர் ஒரு காட்டு மிராண்டி போலவே தெரிந்தார். ஆனால் மன்னரின் நினைப்பை பொய்யாக்கும் விதமாக லேட்டின் மொழியை மிக வேகமாக கற்றுத்தேர்ந்தார் பீட்டர்ஸ். மெல்ல மெல்ல தன் மேல் கிடந்த அவதூறுகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் அரசவையின் முக்கிய உறுப்பினராக முன்னேறினார் பீட்டர்ஸ்.

Image Courtesy

#9

#9

கல்வி கற்றதோடு பீட்டர்ஸ் மூன்று வெவ்வேறு மொழிகளையும் கற்றுக் கொண்டான், அதுவரை ஒரு விலங்காகவும், காட்டுமிராண்டியாகவுமே நடத்தப்பட்ட பீட்டரஸுக்கு அரசவையின் உயரிய மனிதர்கள் அணியக்கூடிய உடைகள் அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

ஒவ்வொரு விஷயத்திலும் பீட்டர்ஸின் கருத்துக்களை கேட்க ஆரம்பித்தார் அரசர்.

Image Courtesy

 #10

#10

உலகிலேயே முதன் முதலாக hypertrichosis குறைபாடுடைய முதல் மனிதர் பீட்டர்ஸ் தான், இந்த குறைபாடு இருப்பவர்களுக்கு முகம் முழுவதும் முடிகள் வளர்ந்திருக்கும். இந்த குறைபாடு மிகவும் அரிதானது. வரலாற்றிலேயே இதுவரை நூறுக்கும் குறைவான நபர்கள் தான் இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Image Courtesy

#11

#11

பிரான்ஸை ஆண்டு கொண்டிருந்த மன்னர் ஹென்றி இறந்ததும் அவரின் தாயார் கேத்ரின் டி மெடிசி பிரான்ஸை ஆள ஆரம்பித்தார்.இந்த கேத்ரீனுக்கு ஹென்றியைப் போல பீட்டர்ஸ் மீது அபிப்ராயம் இல்லை என்றாலும், எங்களுக்கு சேவை செய்ய, எங்களுக்கு பொழுது போக்க பீட்டரஸ் இருக்கிறான் என்றே எண்ணம்.

பீட்டர்ஸுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார் அரசி. அவனுக்கு எப்படிப்பட்ட குழந்தைகள் பிறக்கும், நம்மைப் போலவே சாதரண குழந்தையா அல்லது காட்டு மிராண்டி குழந்தையா என்று அறிந்து கொள்ள துடிக்கிறார்.

Image Courtesy

#12

#12

பீட்டர்ஸைப் பற்றி சொன்னால் யார் திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பார்கள். அதனால் பீட்டர்ஸின் நிலையை சொல்லாமல் ஒரு பெண்ணைத் தேடுகிறார். பிறகு அரண்மைனையில் வேலை செய்யும் ஒருவனின் மகள் அவளது பெயரும் கேத்ரீன் தான், உனக்கும் அரண்மனையில் இருக்கக்கூடிய பீட்டர்ஸுக்கும் திருமணம் என்று சொல்லிவிடுகிறார்.

மகாராணியே சொன்னபிறகு எப்படி மீற முடியும். கேத்ரீன் வாயடைத்து நிற்கிறார்.

Image Courtesy

#13

#13

அரண்மனையில் திருமணம் நடந்தது. அப்போது கேத்ரீன் பயந்து ஓடினார் என்றும் இறுதி வரையில் பீட்டர்ஸின் முகத்தை அவள் பார்க்கவேயில்லை என்றும், பார்த்து பயந்து அலறினாள், மயங்கினாள் என வெவ்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைத்திருக்கவில்லை.

மகாராணி சொன்னது போல திருமணம் செய்து கொண்டாள் கேத்ரீன். சுமார் நாற்பது ஆண்டு காலம் தம்பதிகளாக வாழ்ந்தார்கள்.

Image Courtesy

#14

#14

கேத்ரீன் மற்றும் பீட்டர்ஸுக்கு முதலில் இரண்டு குழந்தைகள் பிறந்தன. இரண்டுக்குமே அப்பாவைப்போல ஒரு குறைபாடு இல்லை, நம்மைப் போலவே மிகச் சாதரணமாக பிறந்திருக்கிறார்கள்.

அரசிக்கு பெருத்த ஏமாற்றம், காட்டுமிராண்டிக்கு என்ன மனித குழந்தையா என்று ஏமாற்றமடைந்தார்.

#15

#15

அடுத்து பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவைப் போலவே உடல் முழுவதும் முடியிருந்தது, பீட்டர்ஸ் மற்றும் கேத்ரீனுக்கு மொத்தம் ஏழு குழந்தைகள். அவர்களில் நான்கு குழந்தைகளுக்கு அப்பாவைப் போலவே உடல் முழுவதும் முடி இருந்திருக்கிறது மூன்று குழந்தைகள் பிறரைப் போல மிகச் சாதரணமாக இருந்திருக்கிறார்கள்.

#16

#16

இங்கிலாந்து முழுவதும் குடும்பத்துடன் சுற்றுலா சென்றார்கள். ஒவ்வொரு அரண்மனையிலும் இவர்களை வரவேற்றார்கள் இவர்களை ஓவியமாக வரைந்து வைத்தார்கள்.

தொடர்ந்து பீட்டர்ஸை ஆய்வு செய்தது போலவே அவனது குழந்தைகளையும் விசித்திரமாக பார்த்தது அந்த சமூகம்.

#17

#17

ஒரு வழியாக பீட்டர்ஸ் குடும்பம் இத்தாலியில் தங்கினார்கள். ஆனாலும் பீட்டர்ஸுக்கு வேலை கொடுக்க யாருமே முன்வரவில்லை, அவனை விசித்திரமான ஒரு காட்டுமிராண்டி போலவே பார்த்தார்கள். அவர்களால் சாதரண ஒரு வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்லவே முடியவில்லை.

தந்தையைப் போலவே குறைப்பாட்டுடன் பிறந்த குழந்தைகள் பக்கத்து நாட்டு அரசர்களுக்கு பொழுது போக்க விற்கப்பட்டார்கள்.

#18

#18

சினிமாவில் பார்க்கிற பியூட்டி அண்ட் த பீஸ்ட் கதை பல போராட்டங்களை கடந்து பீஸ்ட் சாதரணம மனிதான மீண்டு விடுவான் அதன் பிறகு இருவரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்பது போல கதை முடியும்.

ஆனால் உண்மையில் அப்படியொன்றும் நடக்கவில்லை. தன் இறுதி வரையிலும் பீட்டர்ஸ் அநீதிகளை சந்தித்து வந்திருக்கிறான்.

#19

#19

இத்தாலியில் இருக்கக்கூடிய கபோடிமோண்டே என்ற கிராமத்தில் இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள். 1623 ஆம் ஆண்டு கேத்ரீன் இறந்துவிட்டிருக்கிறாள். அதற்கான ஆதாரம் டவுனில் இருக்கும் இறந்தவர்களை கணக்கெடுத்து வைத்துக்கொள்ளும் அலுவலகத்தில் பதிவு இருக்கிறது.

ஆனால் பீட்டர்ஸ் குறித்து எந்த பதிவும் இல்லை, அவன் பிறக்கும் போதே ஒரு மனிதனாக நினைத்து ரிஜிஸ்டர் செய்திருக்கவில்லை அதனால் இறப்பும் கணக்கில் கொள்ளப்படவில்லை. பீட்டரஸ் இறக்கும் வரையிலும் ஓர் மனிதனாகவே கண்டுகொள்ளப்படவில்லை என்பது புலனாகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Real Couples of Beauty and the Beast

Real Couples of Beauty and the Beast
Story first published: Friday, March 2, 2018, 16:20 [IST]
Desktop Bottom Promotion