For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களின் பிறப்புறுப்பில் இருக்கும் வேறுபாடு என்னவென்று தெரியுமா? - டைம் பாஸ் #002

பெண்களின் பிறப்புறுப்பில் இருக்கும் வேறுபாடு என்னவென்று தெரியுமா? - டைம் பாஸ் #002

By John
|

நாம் அறிந்த கேள்விகளுக்கான தெரியாத பதில்களும், அறிந்த விஷயங்கள் குறித்த தெரியாத தகவல்களும்...

இன்றைய டைம் பாஸ் #002ல் நாம் காணவிருக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்...

  • எல்லா பெண்களின் பெண்ணுறுப்பு மத்தியில் இருக்கும் வேறுபாடு என்னவென்று தெரியுமா?
  • கலிலியோ கலிலி எந்த காரணத்திற்காக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்? அதுக்காக வருந்திய சர்ச் எது?
  • உலகில் எந்த தீவில் டிராகன் மரம் இருக்கிறது, ஏன் அது டிராகன் மரம் எண்டு அழைக்கப்படுகிறது?
  • கண் பார்வை இல்லாதவர்கள் மத்தியில் அதிகம் ஏற்படும் கோளாறு என்ன?
  • மயக்க மருந்து கொடுத்தால் டால்பின்கள் இறந்துவிடும், அது ஏன்?
  • நீங்கள் பார்ன் பார்க்கும் நபரா? ஒரு நாளுக்கு இணையத்தில் இருந்து எத்தனை சதவீதம் பார்ன் பதிவிறக்கம் செய்யப்படுகிறது என்று அறிவீர்களா?
  • அமெரிக்காவில் விலங்குகளிடம் இருந்து பெறப்படும் பால் மற்றும் உணவில் எத்தனை மடங்கு ஆண்டி-பயாடிக் அளவுக்கு அதிகமாக கலந்திருக்கிறது?
  • ஒருமனதாக அமெரிக்க அதிபராக தெரிந்தெடுக்கப்பட்ட ஒரே நபர் யார் என்று தெரியுமா?
  • இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி படையை சேர்ந்த எத்தனை ஆயிரம் பேர் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் மட்டும் இறந்தார்கள்?
  • மீன்களுக்கு செதில்கள் புதியதாக வளராது ஏன்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண் பார்வை!

கண் பார்வை!

கண் பார்வையற்ற பத்தில் எட்டு பேருக்கு உறக்கம் சார்ந்த கோளாறுகள் இருப்பதாக அறியப்படுகிறது. இவர்களால் சீரான உறக்கம் பெயர இயல்வதில்லை. மேலும், முற்றிலும் கண்பார்வை இல்லாத நபர்கள் மத்தியில் தான் நிறைய உறக்கம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் கண் பார்வை மற்றும் தூக்கம் குறித்த சிறப்பு நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

டிராகன் மரம்!

டிராகன் மரம்!

ஸ்பெயினில் இருக்கும் கேனரி தீவுகளில் டிராகன் மரம் என்று ஒருவகை மரம் இருக்கிறது. இதை முற்காலத்தில் டிராகனின் இரத்தத்தில் இருந்து உருவான மரம் என்று நம்பி வந்தனர். இதற்கு ஒரு காரணமும் இருந்தது. இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் ஆரஞ்சு பழத்தின் உள் இரத்தம் போன்ற அடர்த்தியான நீர்மம் இருந்தது. இதனால் தான் இதை டிராகன் மரம் என்றும் அழைத்து வந்தனர். இந்த தீவில் மிக பழமையான டிராகன் மரம் ஒன்று இருக்கிறது. இதன் உயரம் எழுபது அடி.

டால்பின்

டால்பின்

டால்பின்களால் மனிதர்கள் போல தானாக சுவாசிக்க முடியாது. அதாவது வேறு வேலைகளில் முழு கவனம் இருந்தாலும், உறங்கிக் கொண்டிருந்தாலும் மனிதர்கள் ஆட்டோமேட்டிக்காக சுவாசித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால், டால்பின்களால் இப்படி சுவாசிக்க முடியாதாம். இதனால் மயக்க மருந்துக் கொடுத்தால் டால்பின்கள் இறந்துவிடும்.

நீர்நிலைகளில் உறங்கும் போது அவற்றின் சுவாசிக்கும் துவாரங்கள் திறந்திருக்கும் படியான நிலையில் தான் டால்பின்கள் உறங்கும். மேலும், உறங்கும் போது எப்போதும் டால்பின்களின் மூளை பாதியளவு ஆக்டிவாகவே இருக்கும்.

பார்ன்!

பார்ன்!

ஆபாசப்படம் காண்பது இயல்பான பழக்கமாக இருக்கிறது. பார்ன் பார்ப்பது குற்றம் என்றும் யாரும் கூறுவதில்லை. ஆனால், அதற்கு அடிமையாகிட வேண்டாம், அதை நிஜ வாழ்வில் பொருத்திப்பார்க்கவோ, பிராக்டிஸ் செய்யவோ வேண்டாம் என்று தான் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பார்ன் வீடியோக்களில் ஈடுபடுவது போல நிஜ தாம்பத்தியம் இருக்காது என்பதே உண்மை.

உங்களுக்கு தெரியுமா? இண்டர்நெட்டில் தினமும் பதிவிறக்கம் செய்யப்படுவதில் 35% பார்ன் வீடியோ டவுன்லோட்கள் தானாம்!

ஐநூறு மடங்கு!

ஐநூறு மடங்கு!

அமெரிக்காவில் இருக்கும் பாதியளவு ஆண்டி-பயாடிக் விலங்குகளுக்கு அளிக்கப்படும் உணவுகளில் கலக்கப்படுகிறது. இதனால் அவற்றின் மூலம் பெறப்படும் பால் அல்லது உணவுகளில் அரசாங்கத்தால் குறிக்கப்பட்டிருக்கும் லீகல் அளவை காட்டிலும் ஐநூறு மடங்கு அதிக அண்டி-பயாடிக் அளவுகள் இருப்பதாக அறியப்படுகிறது. இது உடலில் பல தீயத் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருமனதாக!

ஒருமனதாக!

அமெரிக்க அதிபர்களில் ஒருமனதாக போட்டியின்றி தேர்வான ஒரே நபர் ஜியார்ஜ் வாஷிங்க்டன் (1932-1799) தான். மேலும், இவர் தனது அதிபர் பதவிக்கான ஊதியத்தையும் ஏற்க மறுத்துவிட்டார். இவருக்கு ஊதியமாக அறிவிக்கப்பட்டிருந்த பணம் ஆண்டுக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

கலிலியோ கலிலி!

கலிலியோ கலிலி!

கலிலியோ கலிலி (1564-1642) இத்தாலியில் பிறந்து வளர்ந்த அறிவியலாளர் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். இவர் முதன் முதலில் உலகம் சூரியனை சுற்றி வருகிறது என்று கூறி வாதிட்டப்போது கத்தோலிக் சர்ச் கலிலியோ கலிலியை அவரது சொந்த வீட்டிலேயே வீட்டு சிறைப் பிடித்தது. பிறகு, இதற்கான வருத்தத்தை கடந்த 1992ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கத்தோலிக் சர்ச்.

பெண்ணுறுப்பு!

பெண்ணுறுப்பு!

ஒருமுறை பெண்ணோய் நிபுண மருத்துவரிடம் (Gynecologist) நாள் முழுவதும் பெண்ணுறுப்பை பார்த்துக் கொண்டே இருப்பது உங்களுள் எத்தகைய தாக்கம் அல்லது எப்படியான உணர்வை ஏற்படுத்துகிறது என கேட்கப்பட்ட கேள்விக்கு, "வித்தியாசமான சிகை அலங்காரங்களை காண்பது போல தான் இருக்கும்" என்று கூறினார்.

இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. இது பலர் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. எப்படி ஒவ்வொரு வரின் கருவிழி, கைரேகை, நாக்கு அச்சு என அனைத்தும் தனித்தன்மை, அமைப்பு கொண்டிருக்கிறதோ, அப்படி தான் பெண்ணுறுப்பின் தோற்றமும் என்கிறார்கள். எல்லா பெண்களின் பெண்ணுறுப்பும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருக்காதாம்.

மீன் செதில்கள்!

மீன் செதில்கள்!

பொதுவாக மனிதர்கள், பாம்பு, இதர விலங்குகள் என அனைத்து உயிரினங்களின் சரும மேல் தோல், இறந்து, புதிதாக வளரும் தன்மை கொண்டிருக்கிறது. ஆனால், மீன்களுக்கு அப்படி இல்லையாம். மீன்களின் செதில்கள் பிறக்கும் போது உருவாவது தான் இறக்கும் வரை இருக்கும். மீன் வளர, வளர அதன் செதில்களும் பெரிதாகிக் கொண்டே போதும். ஒரு மீனின் செதில் வட்ட அளவை வைத்து அதன் வயதை அறிந்துவிடலாம்.

யூ-போட்

யூ-போட்

யூ-போட் என்பது முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில்ஜெர்மனி பயன்படுத்திய நீர்மூழ்கிக் கப்பல்கள். இரண்டாம் உலகப்போரின் போது ஏறத்தாழ நாற்பதாயிரம் போர்வீரர்கள் இந்த யூ போட் நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் போரிட சென்றுள்ளனர். போரின் முடிவில் வெறும் பத்தாயிரம் பேர் தான் உயிருடன் நாடு திரும்பினார்கள். இதர முப்பதாயிரம் பேர் போரில் மரணம் அடைந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Random Facts to Know 002!

Random Facts to Know 002!
Desktop Bottom Promotion