For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இலட்சுமணனின் மரணத்திற்கு காரணமாய் இருந்ததே இராமர்தான் என்று தெரியுமா?

  |

  இராமாயணம் என்னும் மாபெரும் இதிகாசத்தில் இராமபிரான், இராவணேஸ்வரன், ஆஞ்சநேயர், சீதாபிராட்டி என பல முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கலாம். ஆனால் பலர் மிக முக்கியமான கதாபாத்திரமாக கருதுவது இராமனின் சகோதரன் இலட்சுமணனை தான். "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்னும் கூற்றுக்கு மிகச்சிறந்த உதாரணம் இலட்சுமணன்தான். அண்ணன் பால் அவர் கொண்டிருந்த ன்பு. விசுவாசம் மற்றும் இராமனுக்காக அவர் செய்த தியாகம் என இலட்சுமணின் பெருமைகளை கூறிக்கொண்டே போகலாம்.

  Spiritual

  இராமாயண போரில் வானர சேனையும், ஆஞ்சநேயரும் இராமபிரானின் வெற்றிக்கு உதவி புரிந்திருந்தாலும் இலட்சுமணன் இல்லையெனில் அந்த வெற்றி சாத்தியமாகி இருக்காது. குறிப்பாக வானர சேனையை துவம்சம் செய்த இராமபிரானாலேயே தோற்கடிக்க இயலாத ராவணனின் மகன் இந்திரஜித்தை வாதம் செய்தது இலட்சுமணன்தான். இராமனின் வெற்றிக்கு இது மிக முக்கிய காரணமாய் அமைந்தது. வீரம், அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றிக்கு உதாரணமாக திகழும் இலட்சுமணனின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  இலட்சுமணன்

  இலட்சுமணன்

  தசரத சக்ரவத்திக்கும் சுமித்ரா அம்மையாருக்கும் மகனாய் பிறந்தவர்தான் இலட்சுமணன். இலட்சுமணன் உடன் பிறந்தவர் சத்துருக்கனன் ஆவர். இருப்பினும் இராமபிரான் மீது அளவற்ற பக்தியும், பாசமும் கொண்டே வளர்ந்தார். இராமபிரான் திருமாலின் அவதாரம் என நாம் அறிவோம். ஆனால் இலட்சுமணன் திருமாலின் உடன் இருக்கும் சேஷன்தான் என்பது பலரும் அறியாத ஒன்று. அதேபோல கிருஷ்ணர் அவதாரத்தில் பலராமனாக உடன் இருந்ததும் அவர்தான். திருமாலையும், சேஷனையும் பிரிக்க இயலாது.

  தூங்காவரம்

  தூங்காவரம்

  இராமன் மற்றும் சீதாவுடன் தானும் வனவாசத்தை மேற்கொண்ட இலட்சுமணன் தன் தமையனின் பாதுகாப்பிற்காக வனவாசம் முடியும்வரை தான் தூங்காமல் இருக்க போவதாக சபதமெடுத்தார். அண்ணன் மீது அவருக்கு இருந்த பாசத்தை கண்டு தூக்கத்தின் கடவுளான நித்ரா தேவியும் அவர் கேட்ட வரத்தை வழங்கினார். ஆனால் அவருடைய தூக்கத்தையும் சேர்த்து அவரது மனைவி ஊர்மிளை தூங்கவேண்டுமென நிபந்தனை விடுத்தார். கணவர் மீது பக்தி கொண்ட ஊர்மிளையும் அதற்கு சம்மதித்தார். சரித்திரத்தில் அதிகம் பேசப்படாத ஒரு அற்புத காதல் கதை இலட்சுமணன் மற்றும் ஊர்மிளையுடையது.

  இந்திரஜித் வதம்

  இந்திரஜித் வதம்

  ராவணனின் மகன் இந்திரஜித் வீரர்களுக்கெல்லாம் வீரனாவான். அவனை வதைப்பதென்பது அவ்வளவு எளிதானதல்ல. இந்திரலோகத்தையே ஆட்டி வைத்த இந்திரஜித் மும்மூர்திகளிடம் இருந்து பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்திரம் மற்றும் பாசுபதாஸ்திரத்தை வரமாக பெற்றவன். அப்படிப்பட்ட மாவீரன், 'எவன் ஒருவன் பதினான்கு ஆண்டுகள் தூங்காமல் இருக்கிறானோ அவனே தன்னை கொல்ல வேண்டும்' என்ற வரத்தை பெற்றவன். நித்ரா தேவியிடம் இருந்து பெற்ற வரத்தின் மூலம் இலட்சுமணன் அவ்வாறு பதினான்கு ஆண்டுகள் நித்திரை கொள்ளாமல் இருந்தார். இந்த வரத்தின் மூலமே இலட்சுமணனால் இந்திரஜித்தை கொல்ல முடிந்தது. இலட்சுமணன் இந்த தியாகத்தை செய்திருக்கா விடின் போரில் இராமனின் வெற்றி என்பது சாத்தியமற்றதாகி இருக்கும்.

  பெண்களை பார்க்காமல் இருந்தார்

  பெண்களை பார்க்காமல் இருந்தார்

  வனவாசத்தில் இருந்த பதினான்கு ஆண்டுகளும் எந்த பெண்ணையும் பார்க்காமல் இருந்தார் இலட்சுமணன். சீதாபிராட்டி உடனே இருந்தாலும் அவரின் முகம் பார்த்து ஒருபோதும் அவர் பேசியது இல்லை. சீதாபிராட்டி அழைத்தாள் கூட அவரின் பாதங்களை பார்த்து மட்டுமே பேசுவார். சீதையின் கால் கொலுசுகளை தவிர அவர் அணிந்திருந்த எதையுமே இலட்சுமணனால் அடையாளம் கண்டறிய இயலாது.

  எமதர்மனின் நிபந்தனை

  எமதர்மனின் நிபந்தனை

  இராமர் தன் பணிகள் பூமியில் முடிந்துவிட்டதால் வைகுண்டத்திற்கு திரும்ப எண்ணினார். எனவே மரணத்திற்காக காத்திருந்தார். ஆனால் ஆஞ்சநேயர் இருக்கும் வரை எமதர்மனால் தன்னை நெருங்க இயலாது என்பதை உணர்ந்த இராமன் ஆஞ்சநேயரை தான் தொலைத்த மோதிரத்தை எடுத்து வருமாறு தொலைவாக அனுப்பிவிட்டு எமதர்மனை அழைத்தார். எமதர்மன் நமக்குள் நடக்கும் உரையாடல் மிக ரகசியமாக இருக்க வேண்டும் இதற்கு யாரேனும் இடையூறு செய்தல் அவர்களுக்கு மரண தண்டனைதான் என்று நிபந்தனையிட இராமரும் அதற்கு சம்மதித்தார்.

  சத்தியத்தை மீறிய இலட்சுமணன்

  சத்தியத்தை மீறிய இலட்சுமணன்

  இராமர் இலட்சுமணனிடம் அறைக்கு காவல் காக்கும்படியும் எக்காரணத்தை கொண்டும் யாரும் உள்ளே வரக்கூடாது என்றும் கூறி சென்றார். அந்நேரம் பார்த்து இராமரை சந்திக்க வந்தார் மகரிஷி துருவாசர். தான் இராமனை சந்திக்க வேண்டும் உள்ள விடு என்று இலட்சுமணனிடம் கூறினார். நிலைமையை புரிந்துகொண்ட இலட்சுமணன் மகரிஷியிடம் இராமபிரான் கூறி சென்றதை அமைதியாக எடுத்துரைத்தார். அனுமதி அளிக்காததால் கோபமுற்ற துருவாசர் அயோத்தி அழிய வேண்டுமென சாபம் கொடுக்க எத்தனித்தார். அயோத்திக்கு எந்த கெடும் நிகழக்கூடாது என்பதால் சத்தியத்தை மீறி அறைக்குள் சென்றார் இலட்சுமணன். இதனால் கோபம் கொண்ட எமதர்மன் இராமனிடம் அவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றும்படி கூறினார். செய்வதறியாத இராமன் கனத்த மனதோடு இலட்சுமணனை உயிர் விடும்படி கூறினார். அண்ணனின் சொல்லை வேதமாக கருதும் இலட்சுமணனும் சரயு நதியில் மூழ்கி தன் உயிரை விட்டார்.

  காரணம்

  காரணம்

  இலட்சுமணனின் மரணமும் அவசியமானதுதான். ஏனெனில் இராமபிரான் திருமாலாய் வைகுண்டம் திரும்பும் போது அங்கே சேஷன் இருக்க வேண்டுமல்லவா?. சேஷன் இல்லையனில் அது எப்படி வைகுண்டமாக இருக்க முடியும். எனவேதான் இராமனுக்கு முன்னர் இலட்சுமணன் உயிர்நீத்து வைகுண்டம் சென்றடைந்தார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: spiritual
  English summary

  Rama is the reason behind Lakshman's death

  Lakshman was the younger brother of Lord Rama. Due ta Lakshman's broke Rama's promise, Rama told him to die.
  Story first published: Tuesday, July 17, 2018, 15:20 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more