கம்பம் மக்களுக்கு இனி ப்ரீமியம் வீடியோக்கள் இலவசம் - பார்ன் ஹப் பகீர் அறிவிப்பு! ஏன்?

Posted By:
Subscribe to Boldsky

மே 25, 2007ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது பார்ன் ஹப் எனும் ஆபாசப்பட இணையத்தளம். இது உலகின் முன்னணி மற்றும் பெரிய ஆபாசப் பட இணையமாக கருதப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோ, ஹவுஸ்டன், லண்டன் மற்றும் நியூ ஓர்லியன்ஸ் போன்ற ஊர்களில் தனது அலுவலகங்கள் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

Porn-hub Decided To Offer Free Premium Access To Dirty Sounding Cities

Image Source: exploringforever

கடந்த 2010 மார்ச் மாதம் அன்று பார்ன் ஹப் நிறுவனம் மேன்வின் (தற்போது மைன்ட்ஜிக் என்று அழைக்கப்பட்டு வருகிறது) விலைக்கு வாங்கியது. இந்த நிறுவனம் பல ஆபாசப் பட இணையங்களை தன் வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, விஷயம் இதுவல்ல... இரட்டை அர்த்த பெயர் கொண்டிருக்கும் உலக நகரங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு தனது ப்ரீமியம் வீடியோக்களை இலவசமாக காணும் சலுகை அளித்துள்ளது பார்ன்ஹப். அதில், தமிழ்நாட்டை சேர்ந்த கம்பம் எனும் ஊரும் இடம் பெற்றுள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ப்ரீமியம்!

பார்ன்ஹப் என்பது உலகின் முன்னணி ஆபாசப்பட இணையதளமாகும். இதில் இலவசம், ப்ரீமியம் என்று இரண்டு வகை பிரிவுகள் உள்ளன. ப்ரீமியம் பிரிவில் பணம் செலுத்தினால் மட்டுமே, பார்ன்ஹப்பின் பிரத்யேக வீடியோக்களை காண இயலும்.

இரட்டைப் பொருள்!

ஃபக்கிங், ஃபிங்கிரிங்ஹோ, புஸி, அப்பர் டிக்கர், லோவர் டிக்கர் என உலகின் பல ஊர்களுக்கு இரட்டை அர்த்தம் கொண்ட பெயர்கள் இருக்கின்றன. இது போன்ற ஊர்களுக்கு சுற்றுலா செல்லும் போதோ, பயணிக்கும் வழியில் இடையே இதுப் போன்ற ஊர்களின் பெயர் பலகை காணும் போதோ, அவற்றை கிண்டல், கேலி செய்து இணையங்களில் வீடியோ பகிர்வதை பரவலாக காண முடியும்.

அவமானம்!

அவமானம்!

இது மற்றவர்களுக்கு கேலியாக இருந்தாலும், அதே ஊரில் காலம், காலமாக பிறந்த, வளர்ந்து வாழ்ந்து வரும் மக்களுக்கு மன வருத்தத்தை ஏற்படும். இதுபோன்ற பெயர் கொண்ட ஊர்களில் வசிக்கும் மக்கள் சிலர், அந்த ஊர்களில் இருப்பதையே அவமானமாக கருதுவதுண்டு. இவர்களுக்காக ஒரு "அரிய" வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது பார்ன்ஹப்!

ஃப்ரீ!

ஃப்ரீ!

பார்ன் ஹப் இதுவரை பணம் செலுத்து மட்டுமே காணலாம் என்று வைத்திருந்த தனது ப்ரீமியம் வீடியோக்களை முதன் முறையாக, இதுபோன்ற இரட்டை பொருள் கொண்டிருக்கும் ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டும் இலவசமாக காண சலுகை அளித்துள்ளது. இது, சங்கடத்தில் இருக்கும் அந்த மக்களுக்கு தாங்கள் ஏற்படுத்தும் பெருமை என்றும், இனிமேல், அந்த ஊர்களை கண்டு கேலி செய்தவர்கள் பொறாமை அடைவார்கள் என்றும் பார்ன்ஹப் அறிவித்து வீடியோவும் வெளியிட்டுள்ளது.

கம்பம்!

கம்பம்!

ஆனால், தெரிந்தோ, தெரியாமலோ, கம்பம் என்ற பெயர் கொண்டிருக்கும் தமிழக ஊரும் அந்த பட்டியலில் இடம் பெற்றுவிட்டது. ஆபாச மொழியில் கம், பம் எனும் இரண்டுமே கொச்சையான அர்த்தம் கொண்ட இரு வார்த்தைகள் ஆகும். இதை பெயராக கொண்டிருக்கும் ஊராக இருப்பதால். கம்பத்தை தனது சலுகை ஊர்களின் பட்டியலில் இணைத்துள்ளது பார்ன் ஹப். இதனால், இனிமேல் கம்பம் பகுதியில் பார்ன் ஹப் ப்ரீமியம் வீடியோக்களை பணம் செலுத்தாமல் இலவசமாக காணலாம் என்று அறியப்படுகிறது.

உண்மை பெயர் காரணம்!

உண்மை பெயர் காரணம்!

கம்பம் எனும் பெயரானது, அந்த பகுதியில் அமைந்திருக்கும் பிரபலமான கம்பரய / கம்பராய பெருமாள் கோவிலின் பெயரில் இருந்து உருவானது ஆகும். விஸ்வநாத நாயக் என்பவர் கடவுள் சிவன் மற்றும் விஷ்ணு இருவருக்கும் ஒருசேர ஒரு கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக கட்டிய கோவில் இதுவாகும். இங்கே விஷ்ணு கம்பரிய பெருமாள் என்ற பெயரிலும், சிவன் காசி விஸ்வநாதர் என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர்.

Image Source:kambaraayaperumaltemple

தங்கப்ப - தாக்கம்!

தங்கப்ப - தாக்கம்!

இந்த உண்மை காரணம் அறியாமல், CumBum என ஆங்கிலத்தில் எழுதப்படும் எழுத்து வடிவத்தை கொண்டு அந்த பெயரை, Cum - Bum என அறிந்து, அதற்கு இலவச சலுகை வேறு அளித்துள்ளது உலகின் முன்னணி ஆபாசப்பட இணையதளமான பார்ன்ஹப். இதை காணும் போது வடிவேலு - சரத்குமாரின் தங்கப்ப - தக்கம் நகைச்சுவை தான் நினைவிற்கு வருகிறது.

ஆந்திராவிலும்...

ஆந்திராவிலும்...

இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவெனில்... கம்பம் என்ற பெயரில் ஆந்திர மாநிலத்திலும் ஒரு ஊர் இருக்கிறது. இது பிரகாசம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. முதலில் இந்த இடம் குர்நூல் எனும் தாலுக்காவாக இருந்தது. குர்நூல், குண்டூர், நெல்லூர் போன்ற இடங்களை பிறகு இணைந்து பிரகாசம் மாவட்டமானது. ஆரம்பத்தில் இந்த இடம் ராயலசீமா என்று அழைக்குப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Porn-hub Decided To Offer Free Premium Access To Dirty Sounding Cities

From Now People From Cumbum and 49+ Cities Around The World Can Access Pornhubs Premium Content For Free!