சாதனையாளர்கள் எல்லாரும் பின்பற்றிய வழி இது தான்!! வெற்றிக்கான சூப்பர் டிப்ஸ்

Subscribe to Boldsky

சாதனையாளர்கள் எல்லாம் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்பதை கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொரு சாதனையாளர் பின்னாலும் உணர்ச்சி பெருக்குள்ள ஓர் கதை விவரிக்கப்படும்.

மிகவும் கடினமாக உழைத்தார்கள் என்று சொல்வதை விட அவர்களைப் பற்றிச் சொல்லும் போதோ அல்லது அவர்களைப் பற்றிய அறிமுகம் கிடைக்கும் போது பிறரை விட இவர்கள் இந்த விஷயத்தை சற்று வித்யாசமாக செய்தார்கள். அல்லது சிந்தனையை மாற்றினார்கள் என்று சொல்லலாம். அப்படி நாம் சாதனையாளர்கள் என்று நாம் வியந்து பார்க்கும் நபர்கள் வித்யாசமாக என்ன செய்திருக்கிறார்கள், அவர்களது விசித்திர சிந்தனை எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயது ஒரு பொருட்டல்ல :

வயது ஒரு பொருட்டல்ல :

காலம் கடந்து விட்டது என்று நாம் எந்த காலத்திலும் நினைத்து விடக்கூடாது என்பதன் சாட்சியாக இருப்பவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்.

195க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார். திரை உலகின் ஜாம்பவான் என்றே சொல்லலாம். இப்போது எழுபதுகளில் இருக்கும் அமிதாப் இன்றளவும் சுறுசுறுப்பாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பணக்காரர் :

பணக்காரர் :

அப்பா பணக்காரராக இருந்தால் அவரது மகன் பணக்காரனாக முடியும் என்ற அரதப்பழசான எண்ணத்தை உடைத்தவர் அம்பானி.

தன் கையில் இருந்த பத்து ரூபாயை வைத்து தொழிலை துவங்கினார். துல்லியமான தொலை நோக்கு பார்வையினால் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பணக்கார குடும்பமாக அம்பானி குடும்பம் மாறியது. மத்திய அரசுக்கு கிடைக்கக்கூடிய மொத்த வரிகளில் ஐந்து சதவீதம் அம்பானி குடும்பம் தான் கட்டுகிறது.

முயற்சி திருவினையாக்கும் :

முயற்சி திருவினையாக்கும் :

தொடர் முயற்சி மட்டுமே வெற்றியின் அடித்தளம் என்று வாழ்ந்தவர் சச்சின் . கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் சச்சினின் ஆரம்ப நாட்கள் அவ்வளவு எளிமையானதாக இருந்திருக்கவில்லை.

நிறையத்தோல்விகளை சந்தித்தே இந்த பெரும் சாதனையை செய்திருக்கிறார். கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் தன்னுடைய பெயரை பதிய வைத்திருக்கிறார்.

உடல் நிலை :

உடல் நிலை :

என்னுடைய சாதனைக்கு தடையாக இருப்பது என்னுடைய உடல் தான் என்று ஸ்டீஃபன் ஹாக்கிங்கை பார்த்தால் யாரும் சொல்ல மாட்டார்கள்.

இவர் ஒரு காஸ்மாலஜிஸ்ட், பிஸிசிஸ்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடிய காஸ்மாலஜி துரையின் இயக்குநர். இவரது ரெவலுயூஸ்னரி தியரிக்கள் எல்லாம் உலகையே மாற்றியது.

எல்லாம் சரி,இவருக்கு உடலளவில் என்னப் பிரச்சனை..... இவருக்கு தாக்கியிருப்பதோ மோட்டார் நியூரான் என்ற ஒரு வகை தசை இறுக்க நோய். இது உடல் அசைவுகள் மட்டுமல்ல குரலையும் பறித்துக் கொண்டுவிடும். வாழ்நாள் முழுமைக்கும் சர்க்கர நாற்காலி தான். பல அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இவரது கண்டுபிடிப்பை எண்ணி வியக்கிறார்கள்.

 சூழல் காரணமா? :

சூழல் காரணமா? :

இந்தக்கதை பலரும் சொல்லக்கூடும். அப்படியான சூழ்நிலை சரியாக அமையவில்லை, எனக்கு அப்போது சூழ்நிலை சரியில்லை படிக்க வேண்டிய வயதில் படிக்க முடியவில்லை என்று சொல்லக் கேட்டிருப்போம். அப்படிச் சொல்பவர்கள் எல்லாம் ஒப்ரா வின்ஃப்ரேயின் கதையைக் கேளுங்கள்.

மிசிசிபியில் பிறந்த ஓப்ராவின் இளமைக்காலம் முழுவதும் கொடூர வறுமை ஆட்கொண்டிருந்தது. மிகவும் கண்டிப்பான குடும்பம், சின்ன சின்ன தவறுகளுக்கு கூட பயங்கரமான அடி உதை விழுந்ததது. ஒன்பது வயதில் மாமா, குடும்ப நண்பர் மற்றும் உறவினர் ஒருவர் என மூன்று நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். இந்தக் கொடுமைகளை எல்லாம் தாங்க முடியாமல் ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறினார்.

மெருகேற்றிய ஓப்ரா :

மெருகேற்றிய ஓப்ரா :

பதினான்கு வயதில் கர்ப்பமானார். சத்துக்குறைபாடு காரணமாக அந்த குழந்தையும் இறந்தது. பின்னர் செய்தி வாசிப்பாளாரக, நிகழ்ச்சித்தொகுப்பாளராக என நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக் கொண்டேயிருந்தார்.

இன்றைக்கு வட அமெரிக்காவில் பில்லியனாரக இருக்கும் ஒரே கறுப்பினப் பெண் ஓப்ரா தான்.

தனியாள் :

தனியாள் :

போர்ச்சுகலுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்க வந்தார். வந்த இடத்தில் ஒருவர் காதலித்து திருமணம் செய்ய அது விவாகரத்தில் முடிந்தது.

ஒரு குழந்தையுடன் தனியாளாக அனாதரவாய் நின்ற அந்தப் பெண்மணி வயிற்று பிழைப்புக்காக புத்தகக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு புத்தகங்களின் மீது ஏற்பட்ட தீராக் காதலினால் இவரும் ஒரு புத்தகம் எழுதினார்.

அதனை வெளியட நினைத்த போது பல தடங்கல்கள். பலரும் இது ஒரு பிரதி கூட விற்காது என்று தீர்க்கமாக சொல்லி வாயை அடைத்தார்கள்.

தன் கதையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து சொந்த செலவில் புத்தகத்தை வெளியிட்டார். யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு மிகவும் வேகமாக விற்பனை சூடுபிடித்தது.

வரலாற்றிலேயே அதிக விற்பனையான புத்தகம் என்ற சாதனையை படைத்தது இவரது புத்தகம்.இப்போது பெரும் பணக்காரராக இருக்கும் பெண்மணி தான் ஜே.கே. ரவ்லிங்.

பில் கேட்ஸ் :

பில் கேட்ஸ் :

கல்லூரி படிப்பை கூட முடிக்காத இளைஞர் தான் பில் கேட்ஸ். இன்றைக்கு உலகிலேயே மிகப்பெரும் முதன்மை பணக்காரராக திகழ்கிறார், இவர் ஆரம்பித்த முதல் தொழிலும் தோல்வி தான்,அதற்காக எல்லாம் அவர் முடிங்கி விட வில்லை.

வெற்றி என்பது இன்ஸ்டண்ட் விஷயமல்ல என்பதை உணர்ந்தவர் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார்.

மைக்ரோசாஃப்ட் என்ற நிறுவனத்தை துவங்கி புதிய புரட்சியை ஏற்படுத்தி இன்றைக்கு உலகில் நம்பர் 1 பணக்காரராக திகழ்கிறார்.

தனிமனிதனால் என்ன செய்ய முடியும்? :

தனிமனிதனால் என்ன செய்ய முடியும்? :

நெல்சன் மண்டேலா. தென் ஆப்ரிக்காவின் தந்தை, தென் ஆப்ரிக்காவின் பிரதமராக 1994 முதல் 1999 வரை இருந்தவர். மக்களுக்கு ஆதரவாக எண்ணற்ற முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறார்.

1961 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அமைப்பை உருவாக்கி புரட்சியை ஏற்படுத்தினார். அதனால் 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனாலும் தான் கண்ட கனவு, அமைதி ஆகியவற்றில் எந்த சமரசமும் அவர் கொள்ளவில்லை. எண்ணற்ற விருதுகளை வாங்கி உலக மக்களின் ஆதரவைப் பெற்றார்.

விட்டுக் கொடுப்பது எளிது :

விட்டுக் கொடுப்பது எளிது :

ஆப்பிள் நிறுவனம் பற்றி இன்றிருக்கும் சிறு குழந்தைக்கு கூட தெரியுமளவிற்கு மிகவும் பிரபலமாக இருக்கிறது. உலகின் தொழில்நுட்பத்தில் நம்பர் 1 இடத்தில் இருப்பது ஆப்பிள் நிறுவனம் தான்.

புதிய நிறுவனத்தை துவங்கியவுடன் எல்லாமே வளர்ச்சிப்பாதையில் சென்று விட்டது அவரும் பெரும் பணக்காரர் ஆகிவிட்டதாக நினைக்காதீர்கள் தான் உருவாக்கிய கம்பெனியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் பல நிறுவனங்களை உருவாக்கினார். மறுபடியும் புத்துணர்ச்சி பெற்றது ஆப்பிள் நிறுவனம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    Read more about: insync pulse
    English summary

    People Who Changed Some Most Common Viewpoints

    People Who Changed Some Most Common Viewpoints
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more