Latest Updates
-
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
உலகம் முழுவதும் துரதிஷ்டம் தரும் மாய எண்களாக நம்பப்படும் எண்கள் என்னென்ன?
உலகம் முழுவதும் துரதிஷ்டமான எண்களாக சில எண்கள் நம்பப்படுகின்றன. அவை என்ன அதற்கான காரணங்கள் இங்கே விளக்கப்பட்டுள்ளன.
நியுமராலஜியின் படி சில குறிப்பிட்ட எண்கள் மிகவும் துரதிர்ஷ்டமானவை என்று நம்பப்படுகிறது. இந்த கருத்தை உலகம் முழுவதும் ஒப்புக் கொள்கிறது.

இந்த பதிவில் 13 முதல் 43 வரை துரதிர்ஷ்டம் என்று நம்பும் சில எண்களைப் பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம். இது தவிர இன்னும் சில எண்களும் இந்த பட்டியலில் உண்டு.
வாருங்கள் அவற்றைப் பற்றி காணலாம்.

துரதிர்ஷ்ட எண் 4
கிழக்கு ஆசிய நாடுகளின் சில பகுதிகளில் 4 துரதிர்ஷ்ட எண்ணாக பார்க்கப்படுகிறது. சீனாவில் 4 என்ற எண்ணை ஆன்மீக ரீதியாக மிகவும் துரதிஷ்டம் வாய்ந்த எண்ணாக கருதுகின்றனர். இந்த எண்ணை உச்சரிக்கும்போது உண்டாகும். ஒலி, சீன வார்த்தைகளில் இறப்பை குறிக்கும் ஒலியை ஒத்து இருப்பதால் இந்த அளவிற்கு துரதிர்ஷ்டம் வாய்ந்த எண்ணாக இதனைக் கருதுகின்றனர். சீன கட்டிடங்களில் 4வது, 13வது, 14வது மற்றும் 24வது தளங்களே இல்லாத அளவிற்கு இந்த நம்பிக்கை வளர்ந்துள்ளது.

துரதிர்ஷ்ட எண் 9
சீன கலாச்சாரத்தில் எண் 9 துரதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது. சித்ரவதை மற்றும் துயரங்களுக்கான வார்த்தையின் ஒலியைப் போல் இந்த எண்ணின் ஒலி அமைவதால் இந்த கருத்து நிலவுகிறது.

துரதிர்ஷ்ட எண் 13
உலகம் முழுவதும் துரதிர்ஷ்டம் மிகுந்த எண்ணாக நம்பப்படுவது இந்த எண் 13. லிப்ட், ஹோட்டல் அறை போன்றவற்றில் கூட இந்த எண்ணை வைப்பதில்லை. கிறிஸ்தவ மதப்படி, புனித இயேசுவை காட்டிக் கொடுத்தது யூதாஸ் காரியோத். அன்று இரவு விருந்தில் 13வது விருந்தாளியாக சேர்க்கப்பட்டது இவர் தான். கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி, பார்சி கலாச்சாரம் மற்றும் உலகம் முழுவதும் இந்த எண்ணை துரதிர்ஷ்ட எண்ணாக கருதுகின்றனர்.

துரதிர்ஷ்ட எண் 24
ஜப்பானில் எண் 24 துரதிர்ஷ்டம் மற்றும் அபாயம் மிகுந்த எண்ணாக அறியப்படுகிறது. எண் 24ன் உச்சரிப்பு ஒலி , இறந்து பிறப்பது என்ற வார்த்தையின் ஒலியை ஒத்து இருப்பதால் இந்த நம்பிக்கை அவர்களிடையே நிலவி வருகிறது.

துரதிர்ஷ்ட எண் 39
ஆப்கானிஸ்தானில் துரதிஷ்ட எண்ணாக கருதப்படுவது 39. அப்கானிஸ்த மொழியில் 39ம் எண்ணை மோர்டா - கௌ என்று உச்சரிப்பார்கள். இதற்கு இறந்த பசு என்று பொருள். வழக்கு மொழியில் விபச்சாரிகளை வாங்குபவர் என்று இதனை கூறுவர்.

துரதிர்ஷ்ட எண் 43
எண் 24ன் அதே அர்த்தத்தைக் கொண்டிருப்பதால் எண் 43ம் ஒரு துரதிர்ஷ்ட எண்ணாகவே ஜப்பானில் கருதப்படுகிறது. இதன் காரணமாக ஜப்பானில் எந்த ஒரு மருத்துவமனையிலும் 43 என்ற எண்ணில் எந்த ஒரு அறையும் இருக்காது.
மேலே கூறிய துரதிர்ஷ்ட எண்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
