Latest Updates
-
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்..
உங்கள் கைகளில் இந்த முக்கியமான ஏழு ரேகைகள் உடைந்திருந்தால் என்ன நடக்கும்? அதன் அர்த்தம் என்ன?
நம்முடைய கை ரேகைகளில் சில முக்கிய ரேகைகள் பாதியில் உடைந்திருந்தால் அவை நம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றி இங்கே விளக்கியுள்ளோம்.
கைரேகை பற்றி கற்றுக் கொள்ளும் போது உங்கள் மனதில் வரும் முதல் விஷயம், உள்ளங்கையிலுள்ள உடைந்த ரேகைகள் எந்த அர்த்தத்தையும் கொண்டிருக்கின்றனவா என்பதுதான். இங்கே, இந்தக் கட்டுரையில், உடைந்த ரேகைக்கோடுகள் மற்றும் அதில் மறைந்துள்ள அர்த்தங்களைப் பற்றிய விவரங்களை உங்களுக்குத் தெரிவிப்போம்.

இந்த முக்கியமான ஒவ்வொறு உடைந்து ரேகைக்கும் ஒரு குறிப்பிட்ட அர்த்தம் உண்டு. எனவே, உங்கள் உள்ளங்கையின் மீதுள்ள உடைந்த கோடுகளின் அர்த்தம் என்ன என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

உடைந்த ஆயுள் ரேகை
உங்கள் உள்ளங்கையில் ஆயுள் ரேகை துண்டித்துக் காணப்பட்டால் , நீங்கள் குடும்ப வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும் வாய்ப்புகள் உள்ளன. உங்களுடைய வீட்டை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிறிய காயமடையும் வாய்ப்புள்ளது.

உடைந்த இதய ரேகை
உங்கள் உள்ளங்கையில் இதய ரேகை துண்டித்துக் காணப்பட்டால், நீங்கள் ஒரு கஷ்டமான திருமணத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் கஷ்டமான உறவுகளைச் சந்திப்பீர்கள்.

உடைந்த தலை ரேகை
உங்கள் உள்ளங்கையில் தலை ரேகை துண்டித்துக் காணப்பட்டால், கல்வியை முடித்து பட்டம் பெறுவது மிகச் சிரமம். மறுபுறம், நீங்கள் எதிர்பாராத நேரங்களில் மன அழுத்தம் ஏற்படலாம்.

உடைந்த சூரிய ரேகை
உங்கள் உள்ளங்கையில் சூரிய ரேகை துண்டித்துக் காணப்பட்டால் , நீங்கள் மதிப்பு அல்லது பணத்தை இழக்க நேரிடும் நிலை உருவாகும். கண் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

உடைந்த திருமண ரேகை
உங்கள் உள்ளங்கையில் சூரிய ரேகை துண்டித்துக் காணப்பட்டால், உங்களுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்புகள் மிகக்குறைவு. நீங்கள் ஒரு உறவில் இருந்தால் கூட அது நீண்ட காலம் நீடிக்காது அல்லது அது விவாகரத்தில் முடிவடையும் வாய்ப்புகள் உள்ளன.

உடைந்த பயண ரேகை
உங்கள் உள்ளங்கையில் சூரிய ரேகை துண்டித்துக் காணப்பட்டால், பயணத்தின் போது காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் தீவிரமாக இருக்கும். உங்கள் பயணங்கள் வெற்றிகரமாக இல்லாமலும், சில இழப்புகளை அனுபவிக்கும் படியும் இருக்கும்.

உடைந்த விதி ரேகை :
உங்கள் உள்ளங்கையில் விதி ரேகை துண்டித்துக் காணப்பட்டால், உங்களுக்கு எதாவது இழப்பு ஏற்படும் என்று அர்த்தம் அல்லது நீங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை சந்திக்க நேரிடும் அல்லது நகரத்திலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.



Click it and Unblock the Notifications
