Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் எப்படி இருக்கப்போகிறது?
2018ம் ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் முடிந்து விட்டது. ஆம். இந்த ஆண்டினுடைய 6 ம் மாதத்தின் தொடக்கத்தில் இன்று நாம் இருக்கிறோம். இந்த மாதத்தை எப்படி நல்ல முறையில் தொடங்கலாம்? இந்த மாதம் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம்.

இந்த பதிவில், அனைத்து ராசிகளுக்குமான இந்த மாத பலன்கள் நம் ஜோதிட வல்லுநரால் கணித்துத் தரப்பட்டுள்ளது. இந்த பலன்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களுடைய அதிர்ஷ்ட நேரம் மற்றும் கெட்ட நேரத்தை அறிந்து அதற்கேற்ற முறையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். இம்மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

ஜூன் மாத மேஷ ராசி பலன்கள்
தன்னுடைய போட்டி மனப்பான்மையால் எல்லா சூழ்நிலைகளையும் எளிதாகக் கையாளும் மேஷ ராசி அன்பர்களே!
இந்த ஜூன் மாதம் உங்கள் ராசி நாதன் எந்த மாதிரியான அணுகூலன்களை அள்ளி வழங்கப் போகிறார் என்பதை முன்கூட்டியே அறிந்து செயல்பட நாங்கள் உங்களுக்கு உதவப் போகிறோம்.
இந்த ஜூன் 2018 ல் இதுவரை கிடப்பில் கிடந்த விஷயங்களை தூசி தட்டி நிதானமாக முன்னெடுத்து செல்ல சாதகமான மாதமாகும். உங்கள் அவசர ஆக்கிரமிப்பு செயல்கள் உங்கள் திட்டங்களை நாசாமாக்கக் கூடலாம். எனவே உங்கள் அவசரங்களை விட்டு விட்டு பொறுத்திருந்து நிதானமாக செயல்பட்டால் வரும் பிரச்சினைகள் கூட அலைகளாக கடந்து சென்று விடும். இந்த மாதத்தில் ரெம்ப ரிலாக்ஸாக பொறுமையாக அமர்ந்து செயல்பட முடியும். எனவே நீங்கள் அவசரமாக செயல்பட்டால் அது கண்டிப்பாக உங்களுக்கு எதிர்மறை பலன்களை மட்டுமே கொடுக்கும். சரி வாங்க இந்த ஜூன் மாதம் உங்கள் தொழில், பொருளாதாரம், காதல் வாழ்க்கை, உடல் நலம் எல்லாம் எப்படி இருக்கப் போகிறது என்பதை இப்பொழுது காணலாம்.

உடல் நலம்
இந்த மாதம் உடல் நலம் ரீதியாக நல்ல அணுகூலன்களை கொடுக்கப் போகிறது. உங்கள் ராசி நாதன் உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை வழங்கப் போகிறார். இவ்வளவு காலம் இருந்து வந்த நாள்பட்ட நோய்கள் ுூட ணமாகும். வரும் நோய்கள் கூட வந்த வாசல் வழியே திரும்ப போய்விடும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் உடல் நலத்தை பேணுதல் நல்லது. தொண்டையில் ஏற்படும் தொற்றை இலகுவாக எடுத்துக் கொள்ளலாமல் மருத்துவரை நாடி பரிசோதனை பெறுவது நல்லது. அதே மாதிரி கீழ்வாதம், வாத நோய் மற்றும் செரிமான பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எனவே வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் உடலை பாதுகாத்தாலே போதும் நோய் நொடியில்லாமல் வாழலாம்.

தொழில்
தொழில் முறை வெற்றிக்கு இது ஒரு சிறந்த மாதமாகும்.உங்கள் தொழில் வாழ்க்கைக்கு உங்கள் ராசி ராதன் அணுகூலமான பலன்களை அள்ளி வழங்கப் போகிறார். தொழில் முன்னேற்றமும் பயணத்தின் மூலம் பண வரவும் மேலோங்கும். லேசான வேலைச் சுமைகளுடன் ஸ்மார்ட் ஆக வேலை பார்ப்பீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள், சக ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் மூலமும் நல்ல லாபம் கிட்டும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஸ்மார்ட் ஆன வேலை செய்து வருவாய் ஈட்டுவீர்கள்.

பொருளாதாரம்
இந்த மாதம் பொருளாதார ரீதியாக சாதகமான நிலை நிலவும். நீங்கள் போக்குவரத்து துறையில் இருந்தாலும் சரி வர்த்தக ரீதியில் இருந்தாலும் சரி எல்லா வழிகளிலிருந்தும் பண வரவு கிட்டும். பெரிய லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. திட்டமிட்ட பண வரவும் கையில் கிடைக்கும். பயணம் மற்றும் தொழில் மூலமாக சிறு லாபத்தையும் ஈட்டித் தள்ளுவீர்கள்.இதுவரை வராமல் கிடப்பில் கிடந்த பண வரவும் கையில் சேர்ந்து பொருளாதார நிலையை வலுவாக்கும்.இப்போதைக்கு பெரிய முதலீடுகளிலிருந்து தள்ளி இருப்பது நல்லது. சிறிய முதலீடுகள் லாபகரமானதாக அமையும்.பணி யிடங்களில் ஊதிய உயர்வு, போனஸ் போன்றவை உயர வாய்ப்புள்ளது.

காதல் வாழ்க்கை
இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கையை தீர்மானிக்்க் கூடிய மாதமாக அமையும். உங்கள் உள்ளுணர்வு பொருளாதார ரீதியாக ஏற்படும் வீழ்ச்சியை முன் கூட்டியே சொல்லும். நீங்கள் உங்கள் துணையை தேடும் நபர் என்றால் இந்த ஜூன் மாதம் சமூக நிகழ்வுகளில் உங்கள் துணையை கண்டறிந்து விடுவீர்கள். அதே நேரத்தில் திருமண செய்ய முடிவெடுத்தால் உங்கள் ஆக்கிரமிப்பு மனப்பான்மையையும் குணநலன்களையும் ஒரு முறை மறுபரிசீலனை செய்து பொறுமையாக முடிவெடுங்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே சிறிய கருத்து வேறுபாடுகள் வரலாம். எனவே அவசரமாக முடிவெடுப்பதற்கு பதிலாக அமர்ந்து பேசி முடிவெடுப்பது சிறந்தது. இல்லையென்றால் உங்கள் பக்கம் விளைவுகள் திரும்ப வாய்ப்புள்ளது. எனவே பொறுமையுடன் செயல்பட்டால் காதல் வாழ்க்கை இனிக்கும்.

இந்த மாத அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டமான நிறங்கள் :சிவப்பு
அதிர்ஷ்டமான எண்கள் :9,6,24,33 மற்றும் 36
அதிர்ஷ்டமான கற்கள் :சிவப்பு பவளமுத்து, அமைதிஸ்ட் படிக கற்கள் கொண்ட அணிகலன்கள்.



Click it and Unblock the Notifications
