For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  தேசத்துக்கே டீ ஆத்தும் அண்ணி... வீடியோக்களை தெறிக்கவிடும் சென்சேஷனல் பெண்மணி!

  By Staff
  |

  ஒரே ஒரு கண் அசைவில் ஐந்து மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பாளர்கள், பாலிவுட் முதல் கோலிவுட் வரை படங்களில் நடிக்க வாய்ப்பு என வேற லெவல் வைரல் ஆனவர் ப்ரியா பிரகாஷ் வாரியார். இதுக் கூட ஒரு படத்தில் இருந்து வெளியான காட்சி மூலமாக கிடைத்த பிரபலம் என்று வைத்துக் கொள்ளலாம்.

  ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் கல்பனா அக்கா என்பவர் தனது மன அழுத்தம் குறைத்துக் கொள்ள தனக்கு தெரிந்த பாணியில் பாடல்களை பாடி வந்தார். அவரது இலங்கை தமிழ் பாணி கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால்.. அவர் ஒரு கேளிக்கை நட்சத்திரமாக சமூக தளங்களில் மாறினார். ஆனால், சிறிது காலத்தில் அவர் தனது போக்கை மாற்றிக் கொண்டார்.

  Meet Somvati Mahawar, sensational Bhabhi who has set internet on fire; see videos

  ஆனால், இவரை தொடர்ந்து, மண்ணை சாதிக் என்ற லெஜண்டு பிறந்தார்... அவர் தான் கேவலமாக நடனம் ஆடுவது, கத்தி, கத்தி பாடுவது வேண்டுமென்றே வார்த்தை பிழைகளுடன் பேசுவது, எழுதுவது என ஏதேதோ செய்து இணையத்தில் பிரபலம் ஆனார். (குறிப்பு: மண்ணை சாதிக் நிறைய நல்ல காரியங்களும் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது) இவரை போலவே இணையத்தில் ஏதாவது இன்றை செய்து பிரபலமாகிவிட வேண்டும் என்ற எண்ணம் பலர் மத்தியில் விளைந்துள்ளது.

  அப்படியான நபர்களில் ஒருவர் தான் சமீப நாட்களாக இந்திய சமூக தளங்களில் மிகவும் வைரலாக பரவி வரும் சோம்வதி மகாவர் என்ற பெண்மணி.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  லேடி மண்ணை சாதிக்!

  கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் என சமூக தள செயலிகளில் தீயாக பரவி வருபவர் இந்த பெண்மணி. இன்ஸ்டாகிராமில் கூட இவரது வீடியோக்கள் அதிகம் பகிரப்படுவதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். மண்ணை சாதிக் போல ஹல்லோ பிராண்ட்ஸ் என்று கேலியாக அழைக்கும் பழக்கம் கொண்டிருக்கும் இந்த பெண்மணி இந்தியாவை சேர்ந்தவர்.

  இவரை அனைவரும் பாபி என்று அழைக்கிறார்கள். அதாவது இந்தியில் அண்ணி என்று பொருள். இவர் தனது வீடியோக்கள் மூலம் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களை தேநீர் பருக கூறியும், உணவருந்த கூறியும் வற்புறுத்துகிறார். தேசி பாபி (Desi Bhabhi) என்று அழைக்கப்படும் இந்த பெண்ணின் உண்மை பெயர் சோம்வதி மகாவர்.

  டீ குடிங்க!

  ஒரு விஜய் படத்தில் டீ சாப்பிட்டீங்களாண்ணா, டிபன் சாப்டீங்களாண்ணா என்று கேட்டு, கேட்டு மணிவண்ணனை கடுப்படிப்பது போன்ற நகைச்சுவை காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும். ஏறத்தாழ அவர்களை போல தான் இந்த பெண்மணியும், டீ குடிக்க சொல்லி தொந்தரவு செய்துக் கொண்டிருக்கிறார்.

  ஒருமுறை, இரண்டு முறை அல்ல... எண்ணிலடங்காத முறை தனது வீடியோக்களில் டீ குடிக்க கூறுவது, டீ கொடுப்பது, ஸ்நாக்ஸ் சாப்பிடு அழைப்பது போன்ற வீடியோக்களை இந்த பெண்மணி பதிவு செய்துக் கண்டே இருக்கிறார்.

  வைரல்!

  ஏறத்தாழ சமீபத்தில் டாக் ஆப் தி டவுன் என்று அறியப்படும் நபராக மாறி இருக்கிறார் சோம்வதி. வீடியோக்கள் பதிவு செய்து தனது ரசிகர்களுடன் பேசுவதில் பேரார்வம் கொண்டிருக்கிறார் சோம்வதி. ஏதோ ஒருசில வீடியோக்கள் மூலம் இவர் வைரலாகி இருக்கிறார் என்று எண்ணிவிடாதீர்கள். ஏறத்தாழ நானூறுக்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவிட்டுள்ளார் இந்த பெண்.

  ஊர், பெயர்?

  இவரது பெயர் சோம்வதி மகாவர் என்பது மட்டுமே பெரும்பாலும் அனைவரும் அறிந்து வைத்திருக்கும் தகவல். இவர் எந்த ஊரை சேர்ந்தவர்கள், இவர் யார், என்ன செய்து வருகிறார் என்ற வரலாறு எதுவும் யாருக்கும் தெரியாது.

  விகோ வீடியோ எனும் சமூக செயலி மூலம் தனது 15 நொடி வீடியோக்களில் தோன்றி இந்திய நெட்டிசன்களை குதுகலப்படுத்தி வருகிறார் சோம்வதி. இவர் பெரும்பாலும் தனது வீடியோக்களில் பேசும் வார்த்தை... டீ குடிங்க என்பது தான்.

  இவரது அனைத்து வீடியோக்களும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பார்வைகளை கொண்டிருக்கிறது.

  ரசிகர்கள்!

  விகோ வீடியோ எனப்படுவது ஒரு சமூக செயலி. இதில் சிறிய அளவிலான வீடியோக்களை எடுத்து பகிரலாம். சோம்வதி இதுநாள் வரை நானூறுக்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இவருக்கு 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களும், 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களும் இருக்கிறார்கள்.

  பாசமா?

  சோம்வதி மகாவர் டீ மட்டும் குடிக்க அழைப்பது இல்லை, பன்னீர் உணவுகள், மாங்காய் உணவுகள் மற்றும் பலவகையிலான உணவுகளை அளித்து சாப்பிட கூறுகிறார். சில சமயங்களில் பல பாடல்களுக்கு நடனமும் ஆடி வீடியோக்களை பதிவிடுகிறார் சோம்வதி மகாவர்.

  மோகம்!

  இவர் தனது ஒரு வீடியோவில் பேசிக் கொண்டே தான் அணிந்திருக்கும் நெக்லஸ் ஒன்றை ரசிகர்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது மேகராவுக்கு முன் சோம்வதியின் மகன் குறுக்கே வந்து நின்ற காரணத்தால்.... சமுக தளத்தின் மீதிருந்த மோகம் கண்ணை மறைக்க... பெற்ற மகனை உதாசீனமாக பிடித்து தள்ளி விடுவது போன்ற காட்சியும் பதிவாகியுள்ளது.

  கிறுக்குத்தனம்!

  இன்றைய நாளில் எப்படியாவது பிரபலமாகிவிட வேண்டும் எண்ணம் சாமானிய மக்கள் மத்தியில் இருக்கிறது. அனைவரும் ப்ரியா வாரியார் ஆக ஆசைப்படுகிறார்கள். சிலர் மண்ணை சாதிக் போல லெஜண்ட் ஆக விரும்புகிறார்கள்.

  ஆனால், இது இப்படியே போனால் ஒரு கட்டத்தில் சமூக தளங்களில் கிறுக்கர்கள் எண்ணிக்கை ஏகபோகமாக எகிறும் என்பது மட்டும் உறுதி. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஒரு 'ஆண்டி' வயது பெண்மணி செய்து வரும் அலம்பல் தாங்க முடியாமல் போய் கொண்டிருக்கிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Meet Somvati Mahawar, sensational 'Bhabhi' who has set internet on fire; see videos

  'Chai Pi Lo Friends': Meet Somvati Mahawar, sensational 'Bhabhi' who has set internet on fire; see videos
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more