மீன ராசிக்காரர்களுக்கு விளம்பி வருடம் எப்படி இருக்கப்போகிறது?...

Written By:
Subscribe to Boldsky

பூரட்டாதி 4ம் பாதம் உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த மீன ராசிக்காரர்களுக்கு இந்த புதிய விளம்பி வருடம் என்னென்ன நன்மைகளைக் கொடுக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

meenam rasi vilambi tamil new year horoscope 2018

சென்ற ஆண்டு மீன ராசிக்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு கை கொடுக்காத ஆண்டாக இருந்தது. பிறந்த ஜாதக வலுவுள்ள சிலர் மட்டுமே பின்னடைவுகள் ஏதுமின்றி குறைகளை அனுபவிக்காதவர்களாக இருந்தீர்கள். சென்ற சில மாதங்களாக எட்டாமிடத்தில் இருந்த குரு, ஐந்தில் இருக்கும் ராகுபகவானாலும் பெரும்பாலான மீன ராசிக்காரர்களுக்கு சரியான வருமானமின்மை, குடும்பத்தில் சண்டை, வாழ்க்கைத் துணையிடம் கருத்து வேறுபாடு, நண்பர்களுக்குள் தேவையற்ற மனஸ்தாபம், கூட்டுத் தொழிலில் சங்கடங்கள், பங்குதாரர்களிடம் குழப்பம் போன்ற பலன்கள் நடந்து வந்தன.

அந்த நிலைமை தற்போது பிறக்க இருக்கும் தமிழ்ப் புதுவருடமான விளம்பி ஆண்டில் நீங்கி இந்த வருடம் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் நடக்கும் சுறுசுறுப்பான வருடமாக இருக்கும். எல்லாத் துறையினருக்கும் லட்சியங்கள் நிறைவேறும் காலகட்டம் இது என்பதால் உங்களுடைய நீண்டகால திட்டங்களை இப்போது தடங்கலின்றி நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இதுவரை பணவிஷயத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் பணவரவில் நல்ல மேம்பாடான நிலையைக் காண்பீர்கள். நீண்டநாட்களாக நீங்கள் மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் இரட்டிப்பு பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளஉயர்வு உடனடியாகக் கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள்.

விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறை சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த நல்ல நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம். மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும்.

பொதுவாக மீன ராசிக்காரர்கள் நல்லவர்களாக, மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு நல்ல உழைப்பாளர்களாக இருப்பீர்கள். பள்ளிப்படிப்பை விட அனுபவத்தை வைத்தே வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சுலபத்தில் உங்களை ஏமாற்ற முடியாது. யாராவது நம்ப வைத்து ஏமாற்றினால் தான் உண்டு.

கணவன், மனைவி உறவில் இதுவரை இருந்துவந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் சரியாக புரிந்து கொண்டு தீர்த்து வைப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பக்க பலமாக இருப்பீர்கள்.

சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டு மனையோ வாங்க முடியும்.

தொழிலில் கூட்டாளிகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

இதுவரை உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள். கடன்தொல்லைகள் எல்லை மீறாது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். கடன்களை அடைக்க வழி பிறக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். இதுவரை செய்து வந்த வீண் செலவுகளை குறைத்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். புதிய சேமிப்புக் கணக்கை துவங்கலாம்.

பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும். பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். இந்த விளம்பி வருடம் மீன ராசிக்காரர்களுக்கு வெறும் நன்மைகளை மட்டுமே கொடுத்து வாழ்க்கையை இனிமையாகக் கொண்டு செல்லும்.

English summary

meenam rasi vilambi tamil new year horoscope 2018

tamil new year vilambi varuda palangal 14.4.18
Story first published: Sunday, April 15, 2018, 10:00 [IST]