Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
இறந்த மனைவியின் உடலுடன் பல ஆண்டுகளாக வசிக்கும் நபர்!
மனைவியின் இறந்த உடலுடன் வீட்டில் பல ஆண்டுகளாக தங்கியிருக்கும் கணவன்
அன்பு கொண்டவர்களை விட்டுப் பிரிவது என்பது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல, வாழ்க்கையின் அடுத்த பாதி முழுவதும் பகிர்ந்து கொள்ளக்கூடிய இணையை இழப்பது எவ்வளவு பெரும் துயரம். வாழும் காலத்தில் எல்லாம் அவர்களின் இருப்பை உணராதவர்கள் இனி அவர் திரும்ப வரவே மாட்டார் என்ற நிலை வரும் போது எப்படி அதிலிருந்து மீள்வது என்பது சாதரண விஷயம் கிடையாது.
அதிலிருந்து முழுவதுமாக மீள முடியாது என்றாலும் அவர் இறந்து விட்டார் என்று உணர்ந்து கொள்வது ஒரு வகை என்றால் என் இணை இறந்து விட்டாலும் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கற்பனையில் நினைத்துக் கொண்டு காலத்தை ஓட்டுவது. இங்கேயும் அப்படிப்பட்ட ஒரு கற்பனை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு நபரைப் பற்றிய கதையைத் தான் பார்க்கப்போகிறோம். மற்றவர்களை விட இவர் எப்படி வித்யாசமாகிறார் தெரியுமா? இவருடைய கற்பனைக்கு உயிரூட்டியிருக்கிறார்.

#1
நம்மோடு வாழ்க்கையை இரண்டற பகிர்ந்து கொள்வதற்காக வந்த இணை திடீரென்று நம்மை விட்டு நிரந்தரமாக பிரிந்து செல்வதை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது தான். அப்படிப்பட்ட பிரிவை வென்றெடுக்க நினைத்தார் லீ வான். வியாட்நாமில் வசிக்கும் இவருடைய மனைவி 2003 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

#2
அழுது புலம்பினார். கைக்குழந்தையாய் இருந்த மகன் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். பிணமாய் கிடந்த தாயின் உடல் மீது ஏறி விளையாட, வந்திருந்தவர்களுக்கு எல்லாம் மனம் கணக்கவே செய்தது.
பெரும் துயருடன் மனைவியை இறுதி காரியங்கள் எல்லாம் செய்து புதைத்துவிட்டார்கள்.

#3
வந்திருந்த உறவினர்கள் எல்லாம் ஒவ்வொருவராக அந்த வீட்டை விட்டு சென்றார்கள். எல்லாரும் சென்ற பிறகு தனிமையில் இருந்த லீ வான் தன்னை விட்டுச் சென்ற மனைவியைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்.
அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள், இவ்வளவு நாட்கள் என்னுடன் இந்த வீட்டில் ஒன்றாய் வசித்தவள் இறுதி வரை உடன் வருவேன் என்றவள் இப்படி திடீரென்று விட்டுச் சென்றுவிட்டாளே என்று அழுதார்.

#4
திடீரென்று அவருக்கு ஒரு யோசனை, அவளை மண்ணில் புதைத்து வந்துவிட்டோம் அவளுக்கு மூச்சு முட்டாதா? என்னையும் குழந்தையையும் விட்டுட்டு எப்படி அவளால் அங்கே இருக்க முடிகிறது? ஒரு வேலை அவளால் எழுந்து வர முடியவில்லையா.... அவள் அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பாள் என்று நினைக்க ஆரம்பித்தார். அதோடு சும்மா இருக்கவில்லை நேராக மனைவியை புதைத்த இடத்திற்கு சென்று தோண்ட ஆரம்பித்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக தனியொருவனாக முழுதாக தோண்டி எலும்பாய் கிடந்த மனைவியின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்து விட்டார்.

#5
சுற்றியிருந்தவர்கள் அத்தனை பேரும் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்கள் லீ வானுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகவும், யாரோ சூனியம் வைத்துவிட்டதாகவும் பேசினார்கள்.
இது தவறு இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று எவ்வளவோ சொல்லியும் லீ வான் கேட்கவில்லை.

#6
எலும்பினைச் சுற்றி ஸ்கின் கலரில் பேப்பரைச் சுற்றி பேக் செய்தார். முகத்திற்கு மனைவியின் முகத்தைப் போலவே ஒரு மாஸ்க் செய்து மாட்டிவிட்டார். மனைவி விரும்பி அணியும் உடையை அந்த எலும்பு கூட்டிற்கு அணிவித்தார். தான் இருக்கும் அறையில் மனைவியை வைத்துக் கொண்டார். அதாவது அந்த எலும்புக்கு அவ்வளவு அலங்காரங்களை செய்து தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டார்.
இரவு தூங்கும் போது அதனுடனே தான் சேர்ந்து தூங்குவாராம்.

#7
உறவினர்கள் நண்பர்கள் எவ்வளோ எடுத்துச் சொல்லியும் கேட்காததால் அவர்கள் யாருமே தற்போது லீ வானுடன் பேசுவதில்லை அதோடு அவர் வீட்டிற்கும் வருவதில்லை.
2003 ஆம் ஆண்டு இறந்த மனைவியின் எலும்பை இன்று வரையில் கலர் பேப்பர் ஒட்டியும், களிமண் கொண்டு மூடியும் அதனை பாதுகாத்து வருகிறார். மரணம் கூட நம்மை பிரிக்க முடியாது என்று சொல்கிறார் லீ வான்.

#8
தொடர்ந்து வந்த அழுத்தம் காரணமாக 2009 ஆம் ஆண்டு மனைவியின் எலும்பை மீண்டும் புதைக்க ஒப்புக் கொண்டார் ஆனால் அப்படி புதைத்த பிறகு தன்னால் தனியாக நிம்மதியாக இருக்க முடியவில்லை அவளது உடல் மட்டும் தான் அழிந்திருக்கிறது அவளுடைய ஆன்மா இங்கே தான் எங்களைச் சுற்றி இந்த வீட்டைச் சுற்றியிருக்கிறது என்று சொல்லி மீண்டும் எடுத்துக் கொண்டு வந்து விட்டார்.
இது சட்டப்படி குற்றம் என்று சொல்லியும் லீ வானை அதிலிருந்து மாற்ற முடியவில்லையாம்.

#9
முன் ஜென்மத்தில் நான் செய்த பாவம் தான் இப்போது மனிதனாக பிறந்திருக்கிறேன். கடந்த ஜென்மத்தில் செய்த பாவங்களை தீர்க்க வேண்டும் அப்படி தீர்த்து விட்டால் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லும் லீ வானுடன் அவருடைய மகன் இருக்கிறார்.
இத்தனை ஆண்டுகளில் அந்த எலும்பும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து சிதைந்திருக்கிறது. அதை ஜிப்சம் கொண்டு பூச்சு போல பூசி வைத்திருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications