For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு சாதாரண ஆசிரியராக பணியாற்றிய எல்.கே அத்வானி குறித்து நீங்கள் அறியாத கதை! #Life #Facts

ஒரு சாதாரண ஆசிரியராக பணியாற்றிய எல்.கே அத்வானி குறித்து நீங்கள் அறியாத கதை! #Life #Facts

|

இளம் வயதிலேயே அரசியலில் பேரார்வம் கொண்டவர். கராச்சியில் பிறந்து, வளர்ந்து, படித்து முடித்து ஆசிரியராக பணியாற்றிய இவருக்கு. 14 வயதில் இருந்தே அரசியலில் ஈடுபட வென்றும் என்ற எண்ணம். அப்போது இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து சேவை செய்து வந்தார்.

Life Facts to Know About BJP Leader Lal Krishna Advani

Image Source - Reddit / Pintrest

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு விரட்டப்பட்ட பல இலட்சக்கணக்கான மக்களில் இவரும் ஒருவரும். தன் சொந்த நிலத்தை விட்டு இந்தியாவிற்கு வந்த இவர், அதே ஆண்டில் இருந்து அரசியலில் இன்னும் ஆர்வமுடன், வலிமையுடன் செயற்பட துவங்கினார்.

இவர் மீது மதவாத சாயம் இருப்பினும்... இவரது வாழ்க்கையும் ஒரு பல அரசியல்வாதிகளுக்கு ஒரு பெரும் பாடம் தான்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கராச்சி!

கராச்சி!

1927ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி கராச்சியில் ஒரு இந்து சிந்தி குடும்பத்தில் பிறந்தவர் எல்.கே. அத்வானி. இவரது பெற்றோர் கிஷான்சந்த் டி அத்வானி மற்றும் கியானி தேவி ஆவர்.

படிப்பு!

படிப்பு!

லால் கிருஷ்ணா அத்வானி கராச்சியில் இயங்கி வந்த செயிண்ட் பேட்ரிக் மேல்நிலை பள்ளியில் தனது ஆரம்பக் கால கல்வியை பயின்றார். பிறகு இவர் ஐதராபாத் (பாகிஸ்தான்), சிந்த் பகுதியில் இருந்த டி.ஜி. நேஷனல் கல்லூரியில் தனது மேற்படிப்பை தொடர்ந்தார்.

அரசியல் ஆர்வம்!

அரசியல் ஆர்வம்!

இளம் வயதிலேயே அத்வானிக்கு அரசியலில் ஆர்வம் மிகுதியாக இருந்தது. ஆதலால், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ்.ல் தன்னை 14 வயதில் இணைத்துக் கொண்டார். தன்னார்வலராக சேர்ந்து சேவை செய்ய துவங்கினார். இது தான் அத்வானியின் அரசியல் பயணத்தில் ஆரம்ப புள்ளியாக அமைந்தது.

ஆசிரியர்!

ஆசிரியர்!

1944ல் அத்வானி கராச்சியில் இயங்கி வந்த மாடல் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற துவங்கினார். அதே சமயத்தில் இவர் ஆர்.எஸ்.எஸ்.'லும் தனது சேவையை தொடர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிவனை!

பிரிவனை!

1947ல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட போது இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையி. புயல் வீசியது, பெரும் திருப்பம் உண்டானது. பாகிஸ்தானில் இருந்து பல இலட்சக்கணக்கான மக்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பட்டனர். அப்படி புலம்பெயர்ந்தவர்களில் ஒருவர் தான் அத்வானி.

வலிமை!

வலிமை!

இந்தியா - பாக் பிரிவினை போது பல சோகங்களை கடந்து வந்திருந்தாலும், அதனால் அத்வானி கோபம் கொள்ளவில்லை. அதற்கு மாறாக ஒரு வலிமையான நாட்டினை உருவாக்க தான் அரசியல் வேலைகளில் இறங்க வேண்டும் என்ற உத்வேகம் கொண்டார்.

ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ்.

1947ல் இருந்து தான் அரசியலில் அதிகம் ஆக்டிவாக செயல்பட துவங்கினர் அத்வானி. அல்வார், பரத்பூர், கோடா, புந்தி மற்றும் ஹாலாவர் போன்ற பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். செயலாளராக பணியாற்ற துவங்கினார்.

வாஜ்பாய்!

வாஜ்பாய்!

இந்த காலக்கட்டத்தில் தான் எல்.கே. அத்வானிக்கு அடல் பிகாரி வாஜ்பாய் உடன் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு 1957ம் ஆண்டு அவருக்கு உதவியாக டெல்லிக்கு இடம்பெயர்ந்தார் அத்வானி. 1958ல் இருந்து 1963ம் ஆண்டு வரை டெல்லியின் ஜனா சங்கத்தின் செயலாளராக பொறுப்பு வகித்தார் அத்வானி.

ஜனா சங்கம்!

ஜனா சங்கம்!

1960ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை ஜனா சங்கத்தின் அரசியல் நாளேடு செய்தி பிரிவில் துணை ஆசிரியராக பதவி வகித்தார் லால் கிருஷ்ணா அத்வானி.

திருமணம்!

திருமணம்!

1965ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் நாள் லால் கிருஷ்ணா அத்வானி கமலா அத்வானி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு பிரதிபா என்ற மகளும், ஜெயந்த் என்ற மகனும் இருக்கின்றனர்.

டெல்லி!

டெல்லி!

1967ம் ஆண்டு டெல்லி மெட்ரோபாலிட்டன் கவுன்சிலின் சேர்மேனாக பதவி வகித்தார். அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் 1970ல் எல்.கே. அத்வானி பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். 1972ம் ஆண்டு பாரதிய ஜனா சங்கத்தின் பிரசிடெண்டாக தேர்வு செய்யப்பட்டார்.

ராஜ்யா சபா உறுப்பினர்!

ராஜ்யா சபா உறுப்பினர்!

1976ல் இருந்து 1982ம் ஆண்டு வரை அத்வானி குஜராத் மாநிலத்தின் ராஜ்யா சபா உறுப்பினராக பதவி வகிட்டகார். 70களில் ஜனா சங்கம் கலைக்கப்பட்டு, பாரதிய ஜனதா கட்சி துவக்கப்பட்டது. தனது நெருங்கிய நண்பரான வாஜ்பாயுடன் சேர்ந்து இவர் பா.ஜ.கவில் இணைந்தார்.

புது கட்சி!

புது கட்சி!

புதியதாக பிறந்த பா.ஜ.கவின் முக்கிய தலைவராக அத்வானி உருவானார்.1980ல் அத்வானி பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். 1986ம் ஆண்டு வரை இந்த பொறுப்பில் இருந்தார். பிறகு, இவர் பா.ஜ.கவின் பிரசிடெண்டாக தேர்வு செய்யப்பட்டார்.

மீட்டெடுப்பு!

மீட்டெடுப்பு!

அத்வானியின் அறிவுரை மற்றும் இயக்கத்தின் காரணமாக பா.ஜ.க ஒரு வலிமையான கட்சியாக உருவாக துவங்கியது. 1989ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 86 சீட் வென்றனர். அதற்கு முந்தைய தேர்தலில் வெறும் இரண்டே சீட் தான் வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாத்திரைகள்!

யாத்திரைகள்!

1993ம் ஆண்டு அத்வானி இந்தியாவின் நான்கு மூலைகளில் இருந்து ஜனதேஷ் யாத்ரா என்ற பெயரில் நான்கு யாத்திரைகளை துவக்கினார். மேலும், 1997ம் ஆண்டு இந்தியா விடுதலையானகோல்டன் ஜூப்ளியை கொண்டாட ஸ்வர்ண ஜெயந்தி ரத யாத்ராவை துவக்கினார்.

அமைச்சர் பதவி!

அமைச்சர் பதவி!

1998ம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாயின் பிரதம மந்திரியாக இருந்த மத்திய அரசில் இவர் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2002 -04 ஆண்டுகளில் துணை பிரதமராக பதவி வகித்தார். 2004ம் ஆண்டு பா.ஜ.க தோல்வி அடைந்த காரணத்தால், எதிர் கட்சி தலைவராக விளங்கினார்.

சுயசரிதை!

சுயசரிதை!

என் நாடு, என் வாழ்க்கை (My Country, My Life) என்ற பெயரில் இவர் தனது சுயசரிதையை எழுதினார். இதை 2008ம் ஆண்டு அப்துல் கலாம் அய்யா அவர்கள் வெளியிட்டார். அப்போது இந்த புத்தகம் பெஸ்ட் செல்லராக இருந்தது. மேலும், இந்தி, மராத்தி, கன்னடா மற்றும் உருது மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிட்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Life Facts to Know About BJP Leader Lal Krishna Advani

Here we have listed some lesser known facts about BJP leader Lal Krishna Advani. Let's take a look on it.
Desktop Bottom Promotion