For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்று ஏழை தாயின் மகன், இன்று 3,500 கோடிக்கு சொந்தக் காரர்... 3 நடிகைகள் மணந்த நடிகர்! #Life #Facts

|

தாமஸ் மபோதர் என்பது தான் இவரது இயற்பெயர். பிறந்ததில் இருந்தே நிறைய ஏமாற்றங்கள் மற்றும் கொடுமைகள், டார்ச்சர் அனுபவித்தே வளர்ந்தார். அம்மாவிடம் இருந்து அக்கறை கிடைத்த தாமஸிற்கு, அப்பாவிடம் இருந்து ஒரு நல்வழி கிடைக்கவில்லை. தாமஸின் சொந்த அப்பாவே அடித்து கொடுமை செய்து வந்தார்.

Life of Ever Young Superstar Actor Tom Cruise!

எதிர்பாராத சூழலில் அம்மா - அப்பாவின் பிரிவு, ஸ்காலர்ஷிப் மூலம் படிப்பு என்று வளர்ந்த தாமஸ். ஒரு கட்டத்தில் மதபோதகர் ஆகும் எண்ணமும் கொண்டிருந்தார். ஒருவேளை அவர் மதபோதகர் ஆகியிருந்தார் இந்த உலகம் ஒரு சூப்பர் டூப்பர் சாக்லேட் பாய் ஹீரோ மற்றும் 50 வயதில் துணிகரமான ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் ஆக்ஷன் ஹீரோவை இழந்திருக்கும்.

ஏழ்மையில் பிறந்து, தன் தனி திறமையால் நடிகனாகி.., மூன்று நடிகைகளை திருமணம் முடித்து, விவாகரத்து செய்து... 3,500 கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாலும்... தன்னால் முடிந்த வரை உலகின் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இவர் நன்கொடை அளித்து வருகிறார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடும்பம்!

குடும்பம்!

தாமஸ் மபோதர் IV நியூயார்க்கில் மேரி லீ மற்றும் தாமஸ் மபோதர் III தம்பதிக்கு மகனாக பிறந்தவர். இவரது அப்பா ஒரு எலக்ட்ரிக்கல் என்ஜினியர், அம்மா ஸ்பெஷல் எஜுகேஷன் ஆசிரியர். இவர் உடன் பிறந்தவர்கள் மொத்தம் மூன்று சகோதரிகள்.

சித்திரவதை!

சித்திரவதை!

தனது குழந்தை பருவத்தில் தாமஸ் மிகுந்த கொடுமைகளை தன் சொந்த அப்பாவிடம் இருந்தே அனுபவித்தார் என்பது தான் உண்மை. தாமஸின் அப்பா அரக்க குணம் கொண்டிருந்தார் என்று தான் கூற வேண்டும். இளம் வயது தாமஸை அவர் அடித்து, உதைத்து சித்திரவதை செய்திருக்கிறார்.

விவாகரத்து!

விவாகரத்து!

ஒரு கட்டத்தில் தாமஸின் தந்தைக்கு கனடா காவல் துறையில் வேலை கிடைக்கவே, குடும்பத்துடன் கனடாவிற்கு இடம்பெயர்ந்து சென்றனர். ஆனால், கனடா சென்ற ஐந்தே ஆண்டுகளில் தாமஸின் அப்பா, அம்மாவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்து ஆகி, மீண்டும் அம்மா மற்றும் சகோதரிகளுடன் அமெரிக்கா திரும்பினார் தாமஸ்.

நடிப்பு!

நடிப்பு!

மீண்டும் அமெரிக்க திரும்பியதில் இருந்து தனது பள்ளி பருவத்தில் நாடகங்களில் நடிக்க ஆர்வம் கொண்டார் தாமஸ். தாமஸின் நடிப்பு ஆற்றலை கண்டு அவரது ஆசிரியர்களும் தாமஸை நடிக்க ஊக்கம் அளித்தனர். தாமஸ்க்கு இயல்பாகவே நடிக்கும் திறன் இருக்கிறது என்று ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

ஸ்காலர்ஷிப்!

ஸ்காலர்ஷிப்!

தன் இளமை காலத்தில் ஓஹியோ மாகாணத்தில் இருந்த சின்சினாட்டி பிரான்சிஸ்கன் செமினரியை அட்டன்ட் செய்து வந்தார். சர்ச்சில் இருந்து இவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. மேலும், தான் ஒரு கத்தோலிக்க போதகர் ஆகவேண்டும் என்ற எண்ணமும் கொண்டிருந்தார் தாமஸ்.

மதபோதகர்?

மதபோதகர்?

தனது இறுதி பதின் வயதில் தாமஸ் ஒரு மதபோதகர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டார். தன்னிடம் இருக்கும் நடிப்பு திறமையை எப்படியாவது பயன்படுத்தி நடிகராக வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டார். தனக்கு தானே ஒரு பத்துவருட இலக்கு உருவாக்கிக் கொண்டார். அதற்குள் தான் நடிப்பில் தனக்கான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்.

தேடல்!

தேடல்!

ஆரம்பக் காலத்தில் நியூயார்க் நகரம் முழுக்க வாய்ப்பு தேடி, ஆடிஷன்களில் பங்கேற்று அலைந்தார் தாமஸ். ஒருவழியாக 1981ம் ஆண்டு என்ட்லஸ் லவ் என்ற படத்தில் தனது 19வது வயதில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார் தாமஸ் க்ரூஸ் மபோதர் IV என்கிற டாம் க்ரூஸ்.

திருப்புமுனை!

திருப்புமுனை!

நிறைய சின்ன சின்ன வேடங்கள் ஏற்று நடித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் ஜோல் குட்சன் ரொமாண்டிக் காமெடி திரைப்படமான ரிஸ்கி பிஸ்னஸ் என்ற படத்தில் நடிக்க டாம் க்ரூஸ் 1983 ஆண்டு வாய்ப்பளித்தார். இந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் மூலமாக தான் சாக்லேட் பாய் என்றே இமேஜ் அடைந்தார் டாம். இதன் மூலம் அமெரிக்காவின் இலட்சக்கணக்கான இளம் பெண்களின் கனவுக் கண்ணனாகவும் உருவானார்.

வெற்றி!

வெற்றி!

1986ல் இவர் நடித்த டாப் கன் என்ற திரைப்படம் ஒரு ஆக்ஷன் டிராமாவாக அமைந்தது. தொடர்ந்து 80களில் ஒரு வெற்றி நாயகனாக உருவானார் டாம் க்ரூஸ். தி கலர் ஆப் தி மணி, காக்டெயில், ரெயின் மேன், பார்ன் ஆண் தி ஃபோர்த் ஆப் ஜூலை என இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

இல்வாழ்க்கை!

இல்வாழ்க்கை!

ரீல் லைபில் வெற்றிகரமான இடத்தைப் பிடித்த டாம் க்ரூஸ்க்கு ரியல் லைப் கொஞ்சம் தோல்விகரமாக தான் அமைந்தது. முக்கியமாக இவரது இல்லற வாழ்க்கை. இவர் மூன்று நடிகைளை திருமணம் செய்தார். மூன்று திருமணங்களும் விவாகரத்தில் முடிந்தன. மிமி ரோஜர் 1990ல் விவாகரத்து, நிகோல் கிட்மேன் 2001ல் விவாகரத்து, கேட்டி ஹோல்மஸ் 2012ல் விவாகரத்து.

மகள்!

மகள்!

மிமி ரோஜர் உடனான உறவில் டாம் க்ரூஸ் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. நிகோல் கிட்மேனுடனான உறவில் இவர் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டார். ஒருமுறை நிகோல் கருத்தரித்து அது கருக்கலைப்பு ஆனது என்ற செய்திகள் வெளியாகின. மேலும், கேட்டி ஹோம்ஸ் உடனான உறவில் தான் 2006ம் ஆண்டு டாம் க்ரூஸிற்கு மகள் பிறந்தார்.

டேட்டிங்!

டேட்டிங்!

கேட்டி ஹோல்ம்ஸ் உடனான திருமணத்திற்கு முன் டாம் க்ரூஸ் பெனிலோப் க்ரூஸ் (ஸ்பானிஷ் நடிகை) மற்றும் நாசானின் போனியாடி (இரானியன் பிரிட்டிஷ் நடிகை) என்ற இருவருடன் டேட்டிங் உறவில் இருந்து வந்தார்.

விருதுகள்!

விருதுகள்!

டாம் க்ரூஸ் மூன்று முறை கோல்டன் குளோப் விருதினை வென்றிருக்கிறார். பார்ன் ஆண் தி ஃபோர்த் ஆப் ஜூலை படத்திற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 2011ம் ஆண்டு டாம் க்ரூஸ் செய்து வரும் நிறைய மனிதநேய சேவைகள் மற்றும் நற்பணிகளுக்காக மனிநேய ஆர்வலர் விருது வழங்கி கௌரவித்தது தி சைமன் வைசென்டல் மையம் மற்றும் மியூசியம் ஆப் டாலரன்ஸ்.

நன்கொடை!

நன்கொடை!

தனது இளம் வயதில் டிஸ்லெக்ஸியா எனப்படும் கற்க சிரமப்படும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார் டாம் க்ரூஸ். இந்த பிரச்சனை இருந்தால், எழுத்து, வார்த்தைகள், உருவங்கள் மற்றும் குறிகளை படிப்பது, மனப்பாடம் செய்வது கடினமாக இருக்கும். இந்த பிரச்னை உள்ள குழந்தைகளுக்காக நன்கொடை அளித்து உதவி வருகிறார் டாம் க்ரூஸ்.

உதவிகள்!

உதவிகள்!

மேலும், குழந்தைகள் நீரிழிவு நோய்க்காக பார்பரா டேவிஸ் செண்டர், எலிசபெத் க்லாசர் பீடியாட்ரிக் எய்ட்ஸ் பவுண்டேஷன், H.E.L.P மற்றும் ஜாக்கி சானின் தன்னார்வ உதவி நிறுவனத்திற்கும் நன்கொடைகள் அளித்து உதவி செய்து வருகிறார் தம க்ரூஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Life of Ever Young Superstar Actor Tom Cruise!

Here we have shared the life of ever young superstar actor Tom Cruise. From his abusive childhood to hollywood superstar status. Take a look on it.
Story first published: Saturday, December 22, 2018, 11:45 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more