For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலசர்ப்ப தோஷம் தீர்க்க ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரமும்.. செல்ல வேண்டிய கோவில்களும்..

மிகச்சிறந்த ஜோதிடர்கள் சிலர் கால சர்ப்ப தோஷத்துக்கான பரிகாரங்களும் அதற்கான தீர்வுகள் மற்றும் அதைத் தீர்ப்பதற்கான செல்ல வேண்டிய கோவில்களையும் பரிந்துரை செய்திருக்கின்றனர்.

|

சிலர் பிறந்த ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் அல்லது கால சர்ப்ப யோகம் என்பது காணப்படுகிறது. இது ஒரு அமங்கலமான ஒன்றாக அறியப்படுகிறது. இந்து வேதங்களின்படி, பன்னிரண்டு வகை பாம்புகளில் ஒன்றின் பாதிப்பு இந்த ஜாதகத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

Kalsarpa Dosha Remedy

இந்த அமைப்பு எல்லா நேரத்திலும் ஒருவரின் வாழ்க்கையில் பாதிப்பை உண்டாக்குவதில்லை. சில நேரங்களில் இதன் பாதிப்பு கவனிக்கும் விதத்தில் அமைவது இல்லை. ஆனால் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும்பட்சதில் இது ஒரு பிரச்சனைக்குரிய விஷயமாக மாறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலசர்ப்ப யோகத்தின் அறிகுறிகள்

காலசர்ப்ப யோகத்தின் அறிகுறிகள்

பாம்பு கடிப்பது அல்லது பாம்பு வருவது போன்ற கனவுகள் அடிக்கடி தோன்றும். ஒருவர் ஜாதகத்தில் இந்த தோஷம் இருக்கும்போது, அந்த ஜாதகருக்கு அடிக்கடி பாம்பு அவர் கழுத்தை நெரிப்பது போல் தோன்றும். அவரின் சொந்த வீடு பற்றியும், தண்ணீர் பற்றியும் பல கனவுகள் தோன்றும். இத்தகையவர்கள் முற்றிலும் சுயனலமில்லாதவர்கள். சமூகம் மற்றும் குடும்பத்திற்காக பாடுபடுவார்கள். ஆனால் இவர்களுக்கு தேவை ஏற்படும் நேரத்தில் தனியாக கைவிடப்படுவார்கள். இந்த அறிகுறிகள் தவிர, இவரின் ஜாதகத்தில் கிரகங்களின் நிலையை கொண்டு இந்த தோஷம் இருப்பதை ஜோதிடரால் கணிக்க முடியும்.

பரிகாரங்கள்

பரிகாரங்கள்

இந்த காலசர்ப்ப தோஷத்திற்கு பல்வேறு பரிகாரங்கள் கூறப்பட்டாலும், சில பிரபல ஆலயங்களை தரிசனம் செய்வதால் இந்த தோஷத்தின் எதிர்மறை விளைவுகளை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது. நாக பஞ்சமி நாளன்று சில மந்திரங்களை இந்த ஆலயங்களில் ஜெபிப்பதால் நன்மைகள் நடக்கலாம். இப்போது இந்த ஆலயங்களில் விவரத்தை அறிந்து கொள்வோம்.

நாக சந்த்ரேஷ்வர் ஆலயம்

நாக சந்த்ரேஷ்வர் ஆலயம்

மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் நகரில், பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகலேஷ்வரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் பாம்பு வடிவத்தில் அமைந்திருக்கும் ஒரு அரியணையில் அமர்ந்திருப்பர். இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வதால், பாம்புகளின் கடவுள் ஆசிர்வாதம் வழங்குவார் என்று நம்பப்படுகிறது. நாக பஞ்சமி நாளன்று இந்த ஆலயம் சென்று இறைவனை வணங்கினால், காலசர்ப்ப தோஷத்தினால் உண்டாகும் எதிர்மறை விளைவுகள் அழிக்கப்படுகிறது.

மன்னர்சாலா ஆலயம்

மன்னர்சாலா ஆலயம்

இந்த கோவில் பாம்பு கடவுள்களின் பக்தர்களுக்கு சர்வதேச அளவில் அறியப்படும் யாத்ரீக ஸ்தலமாகும். கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் இருந்து 40 கிமி தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை பகவான் பரசுராமர் கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது. பின்னர், பாம்புகளின் கடவுளான நாக தேவதை, இங்கு வரும் பக்தர்களை பாதுகாப்பதாக சத்தியம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் 30,000 பாம்புகளின் படங்கள் உள்ளன. நாக தேவதையின் சிலை மற்றும் நாக யக்ஷி தேவிக்கு இந்த ஆலயத்தில் பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடக்கிறது.

நாக வாசுகி ஆலயம்

நாக வாசுகி ஆலயம்

கங்கை நதியின் கரையில் உத்திர பிரதேசத்தின் அலஹாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இந்த ஆலயத்தின் மூலக் கடவுளான சிவபெருமான் மற்றும் நாக தேவதை தவிர, விநாயகர், பார்வதி தேவி, பாண்டவர்களின் உறவினர் பீஷ்மர் ஆகியோரின் சிலைகளும் இந்த ஆலயத்தில் உண்டு. பாம்புகளின் அரசனான நாக வாசுகிக்கு இந்த ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டது. மத்ஸ்ய புராணம் போன்ற இந்து மத வேதங்களில் இந்த ஆலயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

தக்ஷகேஷ்வர் நாத் ஆலயம்

தக்ஷகேஷ்வர் நாத் ஆலயம்

அலஹாபாத்தில் உள்ள யமுனா நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த ஆலயம். பத்ம புராணத்தில் இந்த ஆலயத்தைப் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. பாம்புகளைப் பற்றிய பயம் , இந்த ஆலயத்திற்கு சென்று வழிபடுவதால் விலகுகிறது என்று கூறப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு சென்று வழிபடுபவர்களின் மொத்த சந்ததியும் பாம்புகளிடம் இருந்து பாதுகாக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

செம் முக்ஹெம் நாகராஜ ஆலயம்

செம் முக்ஹெம் நாகராஜ ஆலயம்

உத்தராகண்ட் மாநிலத்தின் தெஹ்ரி மாவட்டத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. துவாரகை முழுவதும் தண்ணீரில் மூழ்கியவுடன் கிருஷ்ண பகவான் பாம்புகளின் கடவுளாக அவதாரம் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் இருக்கும் நாகராஜர் சிலைக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த ஆலயம், கட்டிடக் கலையின் பழைய பாணியில் கட்டப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. இந்த ஆலயத்தின் கதவுகளில் கிருஷ்ண பகவான் நாகராஜரின் தலையில் நின்று புல்லாங்குழல் வாசிப்பது போன்ற படம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வதால் கால சர்ப்ப தோஷம் நிவர்த்தி அடைவதாக நம்பப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kalsarpa Dosha Remedy: Visit These Temples

here some familiar astrologist suggest some parikaram for Kalsarpa Dosha Remedies and temples.
Desktop Bottom Promotion