Latest Updates
-
மேஷ ராசியில் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகம் 2026: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியப் போகுது.. -
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! உங்கள் தனிப்பட்ட சாட்கள் இனி பாதுகாப்பில்லை? இந்த மாற்றத்தை உடனே கவனிங்க! -
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்!
ஐ.பி.எல் வைரல் பொண்ணு: யார் இந்த சி.எஸ்.கே'வின் சூப்பர் ரசிகை? தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க!
நடப்பு ஐ.பி.எல்-ன் வைரல் கேர்ள், சி.எஸ்.கே'வின் சூப்பர் ரசிகையான இவரை நீங்க கவனிச்சதுண்டா...?
உலகின் சிறந்த இருபது ஓவர் போட்டிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது ஐ.பி.எல் இதை யாராலும் மறுக்க இயலாது. உலகின் தலை சிறந்த வீரர்கள் பங்கு பெற்று ஐபிஎல் போட்டிகளில் அசத்தி வருகிறார்கள். இது நம் நாட்டில் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கும் சிறந்த பயிற்சியாக அமைகிறது.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் ஐபிஎல்'லில் கிரிக்கெட்டுடன், சினிமாவும் இணைந்துள்ளது. பெரும்பாலான அணிகளில் உரிமையாளர் பங்குகளை சினிமா நட்சத்திரங்களும் வாங்கி வைத்துள்ளனர். இதனால், ஐபிஎல் போட்டிகளில் வீரத்திற்கு இணையாக கேளிக்கையும் நிரம்பியே காணப்படுகிறது.
இதுப்போக தோனி, விராட் போன்ற தலை சிறந்த வீரர்களை ஊக்குவிக்க, அவர்களது மனைவிகளான சாக்ஷி மற்றும் அனுஷ்கா போன்றவர்கள் வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பு உண்டாகி இருக்கிறது.

ஆனால், இவர்களுடன் இன்னொரு பெண்ணும் நடப்பு ஐ.பி.எல் போட்டிகளில் ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறார். அதுவும், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளின் போது. அந்த இளம் பெண் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகை தான் என்பது கூடுதல் சிறப்பு.
சிக்ஸ், ஃபோர், விக்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகள் சாய்க்கும் போதும், தோனி பந்துகளை சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளுக்கு விரட்டும் போதிலும் அந்த பெண் துள்ளி குதுத்தி ஆரவாரமாக கத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உற்சாகம் ஊட்டுகிறார். நடப்பு ஐபிஎல் போட்டியில் சாக்ஷி, அனுஷ்கா ஷர்மாவுக்கு இனியாக டிவியில் தோன்றி இருக்கிறார் இந்த பெண்ணும். சரி யார் தான் இந்த பெண்? இவர் எப்படி பிரபலமாகி வருகிறார்?
மால்தி சாஹர்!
செம்ம வைரலாகி வரும் இந்த பெண்ணின் பெயர் மால்தி சாஹர். இவர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் தீபக் சாஹரின் சகோதரி. இவரது மற்றொரு சகோதரர் ராகுல் சாஹர் அண்டர் 19 இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார். இவர் இந்த ஐபிஎல்'ல் மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டோ, வீடியோ!
ஸ்டேடியத்தில் அமர்ந்து ரசிகர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை உற்சாக படுத்துவதை தாண்டி. தனது சகோதரர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருவதால், அந்த பவரை பயன்படுத்தி வீரர்களுடன் புகைப்படம், வீடியோக்கள், செல்ஃபீ எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் முகவரியில் பதிவிட்டும் வருகிறார். சமீபத்தில் இவர் தோனியுடன் படம் எடுத்தும் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தல ரசிகை!
கோடான கோடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை போலவே தோணி என்றால் மால்தி சாஹர்க்கும் அவ்வளவு பிரியம். இவர் தோணி மைதானத்தில் நுழைவதில் இருந்து அவர் சிக்ஸர், ஃபோர் விளாசும் போதெல்லாம் கைத்தட்டி, கத்திக் கூச்சலிட்டு உற்சாகம் ஏற்படுத்துகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கடைசியாக கேப்டன் கூல் தோனியை சந்த்தித்து விட்டேன். இவர் நிஜமாகவே கூலான ஆல் தான். இவர் எனது ஸ்வீட்ஹார்ட் என்றெல்லாம் கூறி தோனியுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்திருக்கிறார்.
நடனம்!
தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவுகிறது எனில், இவர் பிராவோவுடன் ஆடிய நடனம் ஒன்று சமூக தளங்களில் டிரெண்டிங் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. அதில் மால்தி சாஹர் மற்றும் பிராவோ நடனம் ஆட, அதை தீபக் சாஹர் செல்ஃபீ வீடியோவாக எடுத்துள்ளார்.
மாடல்!
மால்தி மாடலாகவும் வளர்ந்து வரும் நடிகையாகவும் இருந்து வருகிறார். சரி, மாடலிங், நடிப்பு ஒருபுறம் இருக்க சகோதரர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஊக்கவித்து வருகிறார் என்று பார்த்தால். அம்மணி பேட்டிங்கும் செய்கிறார். ஆம்! அவரது ஒரு இன்ஸ்டாகிராம் பதவில், நெட் பிராக்டிஸ் செய்யும் இடத்தில் பேட்டிங் செய்வது போன்ற வீடியோவும் இடம்பெற்றுள்ளது.
நிறைய உண்டு!
ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிழட்டு அணி. இவர்கள் ஜெயிக்க வாய்ப்பில்லை என்று கூரஈயவர்களின் வாய் அடைத்து போகும் வகையில் லீடிங் ரன் ஸ்கோர், அதிக சிக்ஸர்கள், ஒரே இன்னிங்க்ஸில் அதிக ஸ்கோர் என பல பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தான் முதலிடத்தில் இருக்கிறார்கள். புள்ளி பட்டியலிலும் சென்னை இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. எப்படியும் சென்னை ப்ளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்துவிடும் என்பதால்... மால்தியை இன்னும் நிறைய போட்டிகளில் காணும் வாய்ப்பு உள்ளது.



Click it and Unblock the Notifications