Latest Updates
-
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்!
இந்திய நடிகர், நடிகைகளின் திகிலூட்டும் உண்மை அனுபவங்கள் - டாப் 10!
இந்திய நடிகர், நடிகைகள் கூறும் அவர்களது நிஜ வாழ்க்கை பேய் அனுபவங்கள்!
பேய் என்றால் யாருக்கு தான் பயமாக இருக்காது. நடிகராக இருந்தாலும் சரி, அரசியல்வாதியாக இருந்தாலும் சரி.. பேய் என்றால் பேய் தானே.
அடபோங்கையா! பேயாவது மண்ணாவது.. இந்த டிஜிட்டல் உலகத்தில் இன்னுமா இதை எல்லாம் நம்புகிறீர்கள் என்று பலரும் கூறலாம். ஆனாலும், இன்றும் மினிமம் கியாரண்டி அளிக்கும் படங்கள் பேய் படங்கள் தான்.

ஏன் இந்த கட்டுரை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கோ, உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது கூட பேயை நிஜத்தில் கண்ட அனுபவம் இருக்கலாம்.
இதோ! இந்திய சினிமா நடிகர், நடிகைகள் தங்கள் வாழ்வில் நிஜத்தில் பேயை கண்டதாக பகிர்ந்திருக்கும் சில அனுபவங்கள்...

வருண் தவான்
பாலிவுட்டின் வளர்ந்து வரும் இளம் நடிகர் வருண் தவான். இவர் எ.பி.சி.டி இரண்டாம் பாகத்திற்காக லாஸ் வேகாஸ் நகரில் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு வந்த போது, தான் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் ஏதோ விசித்திரமான சப்தம் கேட்டது என்றும். பிறகு யாரோ பாடுவது போல இருந்தது. திடீரென கதவுகள் வேகமாக திறந்தது என்று தனது நிஜ வாழ்க்கை பேய் அனுபவத்தை கூறியிருக்கிறார்.

ரன்வீர் சிங்!
ரன்வீர் சிங் கொஞ்சம் வேடிக்கையான நடிகர் தான். ஆனால், அதே சமயத்தில் தன் வாழ்வில் நடந்த எந்தவொரு உண்மை சம்பவத்தையும் கூச்சமின்றி பகிர கூடிய நடிகரும் கூட. இவர் பஜிரோ மஸ்தானி என்ற படத்தில் பஜிரோ ராஜா கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இதன் படப்பிடிப்பு புனேவில் நடந்துக் கொண்டிருந்த போது, ராஜா பஜிரோ தன்னை சுற்றி இருப்பது போன்ற உணர்வை கொண்டிருந்தாராம் ரன்வீர் சிங்.

பிபாஷா பாஸு!
ஒருமுறை படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள பிபாஷா பாஸு மகேஷ் ஹில்ஸ் எனும் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது இவர் தங்கி இருந்த அறையில், தனது வசனத்தை படிக்க முடியாமல் ஏதோ சக்தி தடுத்ததாக பிபாஷா கூறி இருந்தார். இவர் கூறியது போலவே படத்தின் இயக்குனரும் கூறியது தான் பரபரப்பை ஏற்படுத்தியது.

இம்ரான் ஹாஸ்மி!
பாலிவுட்டின் சிம்பு என்பதை விட, இவர் சிம்புவை காட்டிலும் பத்து மடங்கு பெரிய மன்மதன் என்றே கூறலாம். இம்ரான் ஹாஸ்மியும் அவரது நண்பர்களும் மதேரன் எனும் இடத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தார்களாம். அப்போது திடீரென யாரோ பலமாக கத்துவது போல சப்தம் கேட்டுள்ளது. ஆனால், ஹோட்டலில் இவர்களை தவிர வேறு யாரும் இல்லை அன்று இரவு முழுக்க இவரும் இவரது நபர்களும் ஒரே அறையில் தங்கி இருந்தார்களாம். மேலும், அந்த கத்தும் சப்தம் இரவு முழுக்க நீடித்துக் கொண்டே இருந்ததாம். அது யார், என்ன என்ற தெரியாமல் அச்சத்தில் உறைந்து போய் இருந்துள்ளனர்.

நீல் நிதின் முகேஷ்!
கத்தி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த இவரை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. தனது 3ஜி என்ற படத்தில் படப்பிடிப்புக்காக ஒரு திகிலூட்டும் இடத்தில் தங்கி இருந்துள்ளார் இவர். அப்போது நிதின் முகேஷ் தனியாக இருந்த போது, யாரோ அருகே இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாம். பேயாக இருக்குமோ என்று பயந்திருக்கிறார் நிதின் முகேஷ்.

நவாசுதீன் சித்திக்
ஆத்மா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் ஒருவிதமான திகிலூட்டும் அனுபவத்தை பெற்றுள்ளார் நவாசுதீன் சித்திக். தன்னை சுற்றி ஏதோ அசாதாரணமான விஷயங்கள் நடப்பதாக அறிந்திருக்கிறார். திடீரென ஒரு போட்டோ ஃப்ரேம் கீழே விழுந்து உடைந்தது என்றும் கூறியுள்ளார்.

சோஹா அலி கான்!
ஹவாலி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் பேய் இருப்பது போன்ற உணர்வை பெற்றிருக்கிறார் சோஹா அலிகான். இந்த படப்பிடிப்பு குஜராத்தில் நடந்து வந்தது. அப்போது ஏதோ வினோதமான சத்தம், யாரோ அழுவது போன்ற குரல் யாரும் இல்லாத அறையில் இருந்து வந்தது என்று சோஹா அலிகான் கூறி இருந்தார்.

கோவிந்தா!
ஒருமுறை ஹோட்டலில் தங்கி இருந்த போது நடிகர் கோவிந்தாவின் நெஞ்சில் யாரோ வயதான மூதாட்டி அமர்ந்து இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாம். அருகே இருந்த பெட்ரூம் விளக்கினை ஆன் செய்து பார்த்த போது அந்த உருவம் மறைந்துவிட்டது என்று திகிலூட்டும் நிகழ்வை பகிர்ந்திருக்கிறார் நடிகர் கோவிந்தா.

ராம் கோபால் வர்மா!
திறமையான இயக்குனர் என்றாலும், இவருக்கு சர்ச்சை இயக்குனர் என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது. ஒருமுறை அதிகாலை மூன்று மணி அளவில் ஷூட்டிங்கில் இருந்துள்ளார் ராம் கோபால் வர்மா. அப்போது யாரோ தன்னை பார்த்துக் கொண்டிருப்பது போல உணர்ந்திருக்கிறார் ராம் கோபால் வர்மா. அந்த பக்கமாக திரும்பி பார்த்த போது, யாரோ ஒருவர் நடப்பது போன்ற சப்தம் கேட்டிருக்கிறது, ஆனால், அங்கே யாருமே இல்லை, என்று தனது பேய் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் இவர்.

சரோஜ் கான்!
சரோஜ் கான் ஹோட்டல் அறையில் தங்கி இருந்த போது, தானாக நாற்காலி நகர்வதை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார். அச்சத்தில் அவசரஅவசரமாக ரிசப்ஷன் எண்ணுக்கு கால் செய்திருக்கிறார்.. ஆனால், லைன் அப்போது டெட்டாகி இருந்ததாம்.



Click it and Unblock the Notifications
