TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
மனிதன் இறக்கும்போது வலிக்குமா?... இன்னும் பல மர்மங்களுக்கு விடை இதோ...
மரணம் பற்றி எவ்வளவு ஆயு்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும் இன்னும் அதில் ஏராளமான குழப்பங்களும் மர்மங்களும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. அத்தகைய மரணம் தொடர்பாக எல்லோருக்குமே வெவ்வேறு விதமான கேள்விகளும் குழப்பங்களும் இருக்கும்.
சிலருக்கு மரணம் என்பது அமைதி என்றும் சிலருக்கு பயம் வருவதும் உண்டு. ஆனால் இறப்பு நேருகின்ற தருணத்தில் மனித மனம் எப்படியிருக்கும் என்பது குறித்து அறிய முடியாமலேயே இருக்கிறது. ஏனென்றால் இறக்கும் தருவாயை நெருங்குகிற ஒருவுரின் மனநிலையை அந்த அனுபவத்தை அந்த நபரிடம் ஆயு்வாளர்களால் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது.
இறப்பின் ஆச்சர்யங்கள்
இறப்பு பற்றிய, இறப்புக்கு பின்னர் உண்டாகிற சில விஷயங்களை ஆய்வுகளால் நிரூபிக்க முடிந்திருக்கிறது. அதேபோல திடீர் துர்மரணங்களின் போது உண்டாகிற மனநிலை, படுக்கையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்து இறப்பது என எல்லா மரணணங்களும் ஒரே அனுபவத்தைத் தருகிறதா என்பதையெல்லாம் யோசித்தால் இந்த ஆய்வில் உள்ள மர்மங்க்ள நீடித்துக் கொண்டே தான் இருக்கும். அதைத்தாண்டி, மரணங்கள் குறித்த சில உண்மைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
நகங்களும் முடியும்
இது பொதுவாக நிறைய பேருக்குத் தெரிந்த உண்மைதான். அதாவது ஒருவர் இறந்த பின்பும் கூட அவருடைய உடலில் உள்ள முடியும் நகங்களும் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். இவை இரண்டிலும் இற்நத செல்கள் கிடையாது என்பதால் இவை வளர்ந்து கொண்டே இருக்கிறது என்று கூறுகிறார்கள் ஆனால் அது உண்மையல்ல. மனிதன் இறந்த பின்பு, உடல் கொஞ்சம் கொஞ்சமாக ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும். ஈரப்பதம் குறைய குறைய நகம் மற்றும் முடியின் திசுக்கள் உடலுக்குள் இருந்து வெளியே தள்ளப்படுகின்றன. அதனால் முடியும் நகங்களும் வெளித்தள்ளப்படுகின்றன.
எரிப்பதும் சுற்றுச்சூழலும்
பொதுவாக உடலை எரித்து விடுவது என்பது மண்ணையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் விஷயம் என்று கூறப்படுகிறது. அதற்கு முழுமையாக உடலின் பாகங்கள் எரிக்கப்பட வேண்டும். அதனால் உண்டாகும் புகை கூட காற்றை மாசுபடுத்தத் தானே செய்யும். அதேபோல வெப்பம் அதிகரிக்கிற பொழுது, உடல் பாகங்கள் தெறித்தோடும். இதுபோன்ற பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காகத் தான் வெளிநாடுகளில் ஒரு பெட்டிக்குள் உடலை வைத்து, 1800 பாரன்ஹீட் வெப்பநிலையில் மின்சாரத்தைச் செலுத்தி, உடலை எரித்தனர். இந்த பழக்கம் தற்போது நம் நாடுகளிலும் எல்லா இடங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.
மரணத்தின் வலி
மனிதன் இறக்கிற பொழுது வலி ஏற்படுமா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது. இது ஒரு புரியாத புதிர் தான். ஏனென்றால், இறப்பு பல்வேறு விதங்களில் நடைபெறுகிறது. சிலர் நீண்ட நாள் உடல்நல பாதிப்பால் நீண்ட நாட்கள் படுக்கையிலே கிடந்து இறப்பார்கள். சிலர் விபத்திலும், சிலர் திடீர் மாரடைப்பால் என பல வகைகளில் இறப்பு நிகழ்கிறது. எது எப்படி இருந்தாலும் மனிதன் இறக்கும் தருவாயில் வலி உண்டாகிறது என்று கூறப்படுகிறது. இறக்கும் தருவாயில், அவர்களைச் சுற்றிலும் இருக்கிற குடும்பத்தாரையும் உறவினர்களையும் கேட்டால் தெரியும், அவர்கள் எவ்வளவு வலியால் துடித்து இறந்து போனார்கள் என்று சொல்வார்கள்.
MOST READ: உங்க மூக்கு புடைப்பா இருக்கா? சிக்குனு கூர்மையாக்க டூத்பேஸ்ட் மட்டுமே போதும்...
வெள்ளை நிற வெளிச்சம்
சிலர் இந்த விஷயத்தைச் சொல்லக் கேட்டிருப்போம். இறக்கும் தருவாயில் உள்ள ஒருவருக்கு அவருடைய மனக்கண்ணில், வெள்ளை நிற பிரகாசமான வெளிச்சம் ஒன்று தோன்றும். சிலருக்கு ஒளிவட்டத்துக்குள் ஒரு பாதாளம் மனக்கண்ணில் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு இரண்டும தெரியும் என்று சொல்வார்கள். ஆனால் அது முழுமையான உண்மையல்ல. எல்லோருக்கும் இந்த அனுபவம் நிகழ்வதல்ல. மருத்துவமனையில் மரணத் தருவாயில் இருக்கிறவர்கள் 344 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, இதயத் துடிப்பு நின்று, ரத்த ஓட்டம் மூளைக்குச் செல்வது நின்று, இறப்பை நெருங்கும் தருவாயில் இருந்தவர்களில் வெறும் 18 பேருக்கு தான் இந்த வெள்ளை நிற வெளிச்சம் தெரிந்ததாக அந்த ஆய்வு சொல்கிறது.
மரணப் போராட்டம்
அவரவர் வாழ்க்கையைப் பொறுத்தே இறப்பின் போராட்டமும் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதாவது மிக அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் இறக்கிற தருவாயில், பெரிதாக இறப்பை எதிர்த்தும் போராடவில்லை. அதேபோல, போராட்ட வாழ்வோடு வாழ்ந்தவர்களாக இருந்தால், மரணப் படுக்கையிலும் அவர்கள் எமனோடு போராடித்தான் இறக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை.
இறக்கும் தருவாயில் அருகில் அழுதல்
மரணப் படுக்கையில் இருக்கிற ஒருவரைச் சுற்றி குடும்ப உறுப்பினர்களும் சுற்றத்தாரும் இருப்பார்கள். அந்த வேளையில்,அவர்குள் ஏற்கனவே மரண வலியை உணர்ந்து கொண்டிருக்கிற வேளையில் எல்லோரும் அழுவார்கள். அப்படி நிச்சயம் செய்யவே கூடாது. அந்த சமயத்தில் மன உறுதியோடு இருக்க வேண்டும். நிச்சயம் அழக்கூடாது. அது படுக்கையில் இருப்பவர்களுக்கு மிக அதிக வலியை உணர வைக்கும்.
MOST READ: வித்தியாசமா காதலை சொல்றதுல இந்த 4 ராசிகள் தான் கில்லாடிகளாம்... யார் யார்னு தெரியுமா?
திடீர் துர்மரணங்க்ள
சிலர் தங்களுக்கு நெருக்கமான, அன்புக்குரியவர்கள் திடீரென எந்த அறிகுறிகளும் இல்லாமல் திடீரென இறக்கிற பொழுது, இவர்களையும் அந்த பயம் தாக்கும். உணர்வு ரீதியாக சில நாட்கள் மனம் பாதிப்படைவார்கள். ஆனால் உடல்நிலை சரியில்லாமல் இருந்து, பின்பு இறப்பவர்கள் உங்களுடைய வாழ்ககையை எதிர்த்துப் போராடி கொடுக்கும் வலிமையை விட துர்மரணங்கள் நிறைய பேருக்கு வாழ்க்கைப் போராட்டத்தைக் கற்றுக் கொடுக்கிறது என்று கூறப்படுகிறது.