For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏகாதசி விரதம் இருப்பவர் அடுத்த நாளான துவாதசி நாளில் என்ன உணவை சாப்பிட வேண்டும்?

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் எவ்வளவு பெரிய துன்பத்தையும் தாங்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்வார்கள் என்பதற்கு புராணத்தில் பல கதைகள் உள்ளன. அவர்களின் ஆன்ம பலமும், உடல் பலமும் அதிகரிக்கும் வகையில் துவாதச

By Jaya Lakshmi
|

இன்று வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பவர்கள் நாளை துவாதசி நாளில் 21 வகை காய்கறிகளை சமைத்து சாப்பிடுகின்றனர். அதில் முக்கியமாக அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டக்காய் இடம்பெறுகிறது. அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். துவாதசி நாளில் சுவாமிக்கு நைவேத்யம் செய்து, ஒரு ஏழைக்கு தானம் செய்த பிறகு நாம் சாப்பிட வேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டக்காய்களில் உள்ள முக்கிய சத்துக்களை அறிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

ஏகாதசி விரதம் தசமியில் தொடங்கி ஏகாதசி, துவாதசி ஆகிய 3 திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் மன நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

Vaikunda Ekadasi fasting

வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பவர்கள், இறந்த பிறகு நேரே வைகுண்டம் செல்வார்கள். அவர்களுக்கு மறுபிறப்பே இல்லை என்று பக்தர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார். பார்வதி. ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று விளக்கினார். சொர்க்க வாசல் திறப்பை பார்த்து விட்டு வந்தவர்கள் அதே பக்தியோடு இந்த கட்டுரையை படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.வைகுண்ட ஏகாதசி விரதம்

1.வைகுண்ட ஏகாதசி விரதம்

வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும் உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும் என்பதே முக்கியம். இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமையைப் பேசுவதும், விஷ்ணு சகஸ்ர நாமம் படிக்க வேண்டும். அதே நேரத்தில் சினிமா, டிவி பார்க்கக் கூடாது.

2.வயிறு சுத்தமாகும்

2.வயிறு சுத்தமாகும்

உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் தூய்மை முதலான பலன்கள் கிடைக்கின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர். வைகுண்ட ஏகாதசி அன்று பலரும் விரதம் மேற்கொள்கின்றனர். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.

3.21 வகையான காய்கள்

3.21 வகையான காய்கள்

மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் சாப்பிட வேண்டும். ஏகாதசி நாளில் துளசி இலைகளைப் பறிக்கக் கூடாது. தேவையான துளசிகளை முதல் நாளே பறித்து வைத்து விட வேண்டும். துவாதசி நாளில் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை சாப்பிட வேண்டும். துவாதசி விருந்தில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெற வேண்டும். அரிசி சாதம், மோர் குழம்பு, அகத்திக்கீரை பொறியல், பொறிச்ச கூட்டு, நெல்லிக்காய் பச்சடி, அக்கார அடிசல், பாயசம், நெய்யில் வறுத்த சுண்டக்காய், தயிர் என விரத சாப்பாட்டினை தயார் செய்ய வேண்டும். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண மந்திரத்தை கூறியபடி இருக்க வேண்டும். சூரியன் அஸ்தமனம் முடிந்த பின்னரே உறங்க வேண்டும்.

MOST READ: வெறும் மூக்கடைப்புக்கு மட்டுமா விக்ஸ்? இன்னும் எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா? இதோ...

4.மகாலட்சுமியின் அருள்

4.மகாலட்சுமியின் அருள்

அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். சுவாமிக்கு நைவேத்யம் செய்து, ஒரு ஏழைக்கு தானம் செய்த பிறகு. சாப்பாட்டை முடித்து விட வேண்டும். ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து, அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக் கீழான நரகத்துக்கு செல்வான். ஏகாதசி விரதம் இருந்து, சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்பவர்களுக்கு இறைவன் அருள் கிடைக்கும்.

5.அகத்திக்கீரை சத்துக்கள்

5.அகத்திக்கீரை சத்துக்கள்

அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக் கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும். அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. தொண்டை வலி மற்றும் குடல் புண் பிரச்சனையை சரி செய்ய அகத்திக் கீரை பயன்படுகிறது. மதிய வேளையில் இதை சாப்பிட்டு வந்தால் அல்சர் மற்றும் உடலில் உள்ள பித்தம் குறையும்.

6.ரத்தம் சுத்தமாகும்

6.ரத்தம் சுத்தமாகும்

பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும். சுண்டக்காயில் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் உள்ளன. இது வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன், காயங்களையும், புண்களையும் ஆற வைக்கும்.

7.நெல்லிக்காய்

7.நெல்லிக்காய்

நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது. இது குளிர்ச்சித் தன்மை கொண்டது. கண்களுக்குக் குளிர்ச்சி தரும் செரிமானத்தைக் தூண்டும். வைட்டமின் சி சத்துக்கொண்ட நெல்லிக்காயை துவாதசி நாளில் பச்சடியாகவும் செய்து சாப்பிடலாம்.

MOST READ: எப்ப காபி குடிச்சாலும் அதுல கொஞ்சம் உப்பு போட்டு குடிங்க... ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benifits Of Dwadasi Paranai

People fast on Ekadasi day and have Dwadasi Paranai on the next day which levels the acidity and the menu by itself is fantastically medicated.
Story first published: Tuesday, December 18, 2018, 10:11 [IST]
Desktop Bottom Promotion