இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அரசு வேலை வாய்ப்பில் யோகமில்லை!

Posted By: Staff
Subscribe to Boldsky

வாழ்க்கையில் நல்லபடியாக செட்டில் ஆக வேண்டும் என்பதே பலரது கனவாக இருக்கும், நினைத்த வேலை, படிப்பு இல்லையென்றாலும் சமூகத்தில் கவுரவமாக வாழ்க்கையை ஓட்டுவதற்காவது எதாவது ஒரு வேலையில் நிலைத்திட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

பிடித்திருக்கிறதோ இல்லையா.... ஆரம்பத்திலேயே வீடு,கார் என இஷ்டத்திற்கு லோன் வாங்கி தாங்களாகவே ஒரு சிறைக்குள் அடைந்து விடுகிறார்கள் அதன் பிறகு அதிலிருந்து மீளவும் முடியாமல் நினைத்த வாழ்க்கையை வாழவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆரம்பத்திலேயே உங்களுக்கான வேலையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்களுக்கு தாங்கள் என்ன படித்திருந்தாலும் அரசாங்க வேலையில் சேர அதிகம் விரும்புகிறார்கள். அதனால் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதும் அதிகரித்து வருகிறது. சிலர் ஒரே முயற்சியில் வெற்றியடைவதும், சிலர் நீண்ட காலமாக முயற்சி செய்தும் பலன் கிடைக்காமல் போகிறது. சரி, இந்த நேரத்தில் யாருக்கெல்லாம் உங்கள் ராசிப்படி அரசு வேலைக்கு வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம் :

மேஷம் :

எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு இருக்கும், போட்டி மனப்பான்மையுடன் அணுகினால் மட்டுமே பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியும், எப்போதும் உங்களுக்கு சவால் நிறைந்த பணிகள் செய்யவே ஆர்வமிருக்கும்.

அரசு வேலை :

அரசு வேலை :

ஒரே மாதிரியான வேலை, அல்லது ஒரேயிடத்தில் உட்கார்ந்து கணினியில் பணியாற்றுவது எல்லாம் உங்களுக்கு சற்று சிரமமானது என்றே சொல்ல வேண்டும். அரசு வேலை வாய்ப்பு கிடைப்பதில் சிரமம் ஏற்படும் தீவிரமாக முயற்சி செய்தால் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புண்டு.

மிதுனம் :

மிதுனம் :

திறமை நிறைந்தவர்களாகவும் உங்களுக்கான வாய்ப்பிற்காக காத்திருப்பவராகவும் மிதுனராசிக்காரர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு எப்போதும் சொந்த ஊரில் அல்லது உறவினர்கள் சூழ வாழும் சந்தர்ப்பம் வாய்க்காது.

தனிமையில் இருக்கிறேன் என்று மனம் வருந்தாமல் தொடர்ந்து போராடினால் சந்தோஷமான வாழ்வு கிட்டும், அரசாங்க வேலை அல்லது பொதுமக்களுடன் தொடர்புடைய வேலை நிச்சயம் உண்டு.

சிம்மம் :

சிம்மம் :

அதிகார தோரணை உங்களிடத்தில் அதிகம் இருக்கும். நீங்கள் துரிதமாக செய்ய முனைந்தாலும் உங்களுடன் இணைந்து பணியாற்றுகிறவர்களால் அந்த காரியம் நிறைவேறாமல் தள்ளிப்போகும்.

அதிகாரம் என்று சொல்லும் போதே உங்களுக்கு அரசாங்கத்திற்கான யோகம் இருக்கிறது.

அதிகாரம் :

அதிகாரம் :

அதிகார பலம் மட்டுமிருந்து என்ன பயன் அதனை அனுபவிக்கவும், செயல்படுத்தவும் மிகுந்த சிக்கல்கள் உண்டாகிடும். சிம்ம ராசிக்கிறார்கள் எப்போதும் போராடிக் கொண்டே இருப்பது போலவே தோன்றிடும். உங்களுக்கு எதிராக நடத்தப்படும் போட்டிகளை எளிதாக கையாள காலப்போக்கில் கற்றுக் கொள்வீர்கள்.

விருச்சிகம் :

விருச்சிகம் :

கடின உழைப்பாளிகள் இவரக்ள். எப்போதும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும் பிறரது வாழ்க்கை குறித்த எண்ணம் இவர்களுக்கு மேலோங்கும், உதவிகள் செய்ய தயங்கவே மாட்டார்கள் எல்லைகளை கடந்து தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருப்பார்கள். அரசு வேலை வாய்ப்பு யோகம் ஒரு முறை மட்டுமே என்பதால் கவனமுடன் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

மகரம் :

மகரம் :

எதையும் மிக எளிதாக கிரகித்துக் கொள்ளக்கூடியவர்கள். ஆட்டுமந்தைக் கூட்டம் போல யாரோ காட்டிய வழியில் பயணிக்க மாட்டார்கள். தனக்கான பாதையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் வல்லவர்கள்.

சுற்றுச்சூழல் தொடர்பாகவும்,இயற்கை தொடர்பாகவும் உங்களுக்கு ஆர்வம் அதிகமிருக்கும்.

மீனம் :

மீனம் :

கற்பனைத்திறன் இவர்களுக்கு அதிகமிருக்கும், முன் யோசனையுடன் செயல்படுவதில் இவர்கள் மிகவும் சிறந்தவர்களாக விளங்குவார்கள். தனக்கான லட்சியம் என்ன என்று கண்டறிவதில் அதிக நாட்களை எடுத்துக் கொள்வார்கள். கவனச் சிதறல் இவர்களுக்கு அதிகமுண்டு.

என்னால் முடியாது :

என்னால் முடியாது :

திறமைகள் குவிந்திருக்கும் அதே நேரத்தில் இவர்களிடத்தில் சோம்பேறித்தனமும் அதிகமிருக்கும், அதனாலேயே வாழ்க்கையில் கிடைக்கப்போகிற மிக முக்கியமான சந்தர்ப்பங்களை எல்லாம் இழக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். தொடர் முயற்சி செய்தால் இவர்களுக்கு அரசு வேலை யோகம் கண்டிப்பாக உண்டு.

ஜாக்கிரதை :

ஜாக்கிரதை :

மேற் சொன்ன ராசிகளை தவிர்த்து ரிஷபம், கடகம்,கன்னி,துலாம்,தனுசு,கும்பம் ஆகியோருக்கு அரசாங்க வேலை தொடர்பான யோகம் குறைவு தான், அப்படியே அரசு வேலை கிடைத்திருந்தாலும் தொடர்ந்து மன உழைச்சலுடன் போராடிக் கொண்டேயிருக்க வேண்டிய சூழலிலேயே தான் இருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Government Job Not Suited These Zodiac

Government Job Not Suited These Zodiac
Story first published: Friday, March 9, 2018, 11:30 [IST]