For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்குழந்தைகள் எல்லாம் 12வயதுக்கு பிறகு ஆணாக மாறும் விசித்திர கிராமம்!

எந்த மருத்துவ முறைகளையும் பின்பற்றாமல் குறிப்பிட்ட காலங்களில் இந்த கிராமத்தில் வாழ்கிற பெண் குழந்தைகள் ஆண்களாக மாறுகிறார்கள்.

|

நவீனம் மற்றும் நாகரிகம் என்ற பெயரில் மக்கள் பலபடிகள் முன்னேறி தொழில்நுட்பத்தில் வளர்ந்து நின்றாலும் இன்றும் கிராமங்களில் அடிப்படை வசதி கூட இல்லாத மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களது உலகம் நம் உலகத்தை விட மிகவும் மாறுபட்டதாக இருக்கிறது அவர்களுக்கான ஓர் உலகம், அவர்களுக்கான நம்பிக்கைகள் என தங்கள் வாழ்விடத்தை சுற்றியே எல்லாவற்றையும் அமைத்துக் கொள்கிறார்கள்.

இன்று நாம் அனைத்து விதமான தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்,நம்மைப் போலவே எல்லாருக்கும் எல்லா விதமான வசதிகளும் கிடைத்திருக்கும் என்று நினைப்பது தவறு,அடிப்படை வசதி கூட இல்லாமல் திண்டாடுகிற மக்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்களுக்கான வாழ்க்கைச் சூழல் சில நேரங்களில் நம்மை பெரிதும் வியப்புக்கு உள்ளாக்ககூடியவையாகவும் இருக்கிறது. அப்படி உங்களை எல்லாம் வியப்புக்கு உள்ளாக்கக்கூடிய ஒரு கிராமத்தைப் பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ளப்போகிறீர்கள்.

டெமினிசன் ரிபப்ளிக்கில் இருக்கக்கூடிய பரஹோனா மாகாணத்தில் அமைந்திருக்கிறது லாஸ் சலினாஸ் என்ற சிறிய நகரம். இதனை வளர்ந்து வருகிற கிராமம் என்றே சொல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண்கள் :

பெண்கள் :

இந்த கிராமத்தில் அப்படியென்ன விசித்திரம் மறைந்திருக்கிறது தெரியுமா? இங்கு பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பிறக்கும் போது பெண் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் பருவ வயதை அடைந்தததும் பன்னிரெண்டு வயதிற்கு பிறகு இந்த பெண் குழந்தைகள் எல்லாம் ஆண் குழந்தைகளாக மாறுகிறார்களாம்.

இதற்காக இவர்கள் சிகிச்சையோ, அல்லது மருந்து மாத்திரைகளோ எடுத்துக் கொள்வதே கிடையாது. இயற்கையாகவே பருவமடைந்ததும் இந்த பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளாக மாறுகிறார்கள்.

Image Courtesy

ஜானி :

ஜானி :

இப்படி பன்னிரெண்டு வயதில் ஆணாக மாறுகிறவர்களை guevedoches என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் பருவ வயதை அடைந்தவுடன் பெண் பிறப்புறுப்பிலிருந்து ஆண் பிறப்புறுப்பு மாறும்.

அந்த கிராமத்தை சேர்ந்த ஜானி பிறக்கும் போது பெண்ணாக இருந்திருக்கிறார். பருவ வயதை அடைந்ததும் அவரது பிறப்பு உள்ளிளுத்துக் கொண்டதாகவும் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு ஆண் பிறப்புறுப்பு தோன்றியதாகவும் கூறியிருக்கிறார்.

Image Courtesy

கிண்டல் :

கிண்டல் :

பெண்ணாக இருக்கும் போது ஜானியின் பெயர் ஃபெலிசிடாவாக இருந்திருக்கிறது. சிறு வயதில் கவுன் அணிந்து பள்ளிக்குச் செல்வேன், அப்படி உடை அணிந்து செல்வது எனக்குப் பிடிக்காத ஒன்றாகவே இருந்தது.

அப்போதிருந்தே அடிக்கடி ஆண்களுடன் சேர்ந்து தான் கால்பந்தாட்டம் விளையாடுவேன்.பருவவயதை அடைந்த பிறகு மனதளவில் மட்டுமே இருந்த மாற்றம் உடலளவில் வெளிப்படத் துவங்கியது அதனால் எனது செயல்களிலும் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. இதனால் பள்ளியில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானேன். எல்லாரும் என்னை பேய் என்று அழைப்பார்கள்.

Image Courtesy

கார்ல் :

கார்ல் :

ஜானியைப் போலவே இவரும் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். கார்ல் பெண்ணாக பிறந்து பெண்ணாக வளர்ந்திருக்கிறார் பருவ வயதை அடைந்த பிறகு தன் அடையாளம் மாறத் துவங்கியதும் கார்லோஸ் என்று பெயர் மாற்றிக் கொண்டிருக்கிறார்.

கார்லோஸ் குறித்து அவரது அம்மா கூறுகையில் குழந்தை பருவத்திலிருந்தே எப்போதும் ஆண் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளின் மீது தான் ஆர்வமிருக்கும் அதே போல சிறுவயதிலேயே அவளது தசைப்பகுதி எல்லாம் ஸ்டிஃபாக இருக்கும் என்றிருக்கிறார்.

Image Courtesy

சர்ச்சை :

சர்ச்சை :

ஆரம்பித்தில் இது கடவுளின் சாபம் என்றும் நாம் செய்து வந்த பாவங்களின் தண்டனை என்றும் சொல்லி நம்பியிருக்கிறார்கள். கார்னெல் மருத்துவக் கல்லூரியிலிருந்து ஜூலியானா இம்பெர்டோ ஜின்லி என்ற மருத்துவர் இது குறித்து கேள்விப்பட்டு இதன் காரணத்தை கண்டறிய இந்த பகுதிக்கு வருகிறார்.

நீண்ட நாட்கள் இங்கேயே தங்கியிருக்கிறது நீண்ட ஆய்வினை மேற்கொள்கிறார். ஒவ்வொருவரின் அனுபவங்களையும் அவர்களின் வாழ்க்கைச் சூழல் பற்றியும் தெரிந்து கொள்கிறார்.

Image Courtesy

குழந்தை ஆணா? பெண்ணா? :

குழந்தை ஆணா? பெண்ணா? :

ஆணிலிருந்து வரக்கூடிய விந்தணுவிலிருந்து பெண்ணிடம் இருக்கக்கூடிய கருமுட்டைக்குச் செல்லும் க்ரோமோசோமை பொருத்து தான் குழந்தையின் பாலினம் முடிவாகிறது. அந்த க்ரோமோசோம் XX என்றால் பெண்ணாகவும் அதே XY என்றால் ஆணாகவும் பிறக்கிறது.

கரு உருவாகும் போது முதல் வாரத்தில் எல்லாம் குழந்தையின் பாலினம் முடிவு செய்யப்படாது. குழந்தை வளர வளரத்தான் அது தெரியவரும்.

பிறப்புறுப்பு :

பிறப்புறுப்பு :

அந்த முதல் வாரத்தில் குழந்தையின் பிறப்புறுப்புகள் எல்லாம் உருவாகியிருக்காது. மாறாக அந்த இடத்தில் மெல்லிய துவாரம் போன்ற அமைப்பு மட்டும் உருவாகியிருக்கும். இதனை tubercle என்பார்கள்.

எட்டு வாரங்களில் அந்த க்ரோமோசோமினைப் பொருத்து இதன் வடிவம் மாறும்.

உருவாகும் முறை :

உருவாகும் முறை :

இப்போது குழந்தைக்கு XY க்ரோமோசோம் என்றால் முதலில் விரைப்பை உருவாகும். தொடர்ந்து குழந்தைக்கு டெஸ்ட்ரோன் ஹார்மோன் கிடைக்கும் பட்சத்தில் அது ஆற்றல் மிக்க dihydrotestosterone என்ற ஹார்மோனை உற்பத்தி செய்திடும். இந்த ஹார்மோன் உற்பத்தியானால் தான் அந்த tubercle பென்னீஸாக மாறும்.

இந்த ஹார்மோன் கிடைக்காத பட்சத்தில் கருவில் இருக்கக்கூடிய tubercle..... clitoris எனப்படுகிற பெண் குறியாக மாறுகிறது.

பிறக்கும் போதே :

பிறக்கும் போதே :

இவையெல்லாம் சரி, ஆனால் இந்த கிராமத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு ஏன் பிறக்கும் போதே ஆண் குறி இருப்பதில்லை சரியாக பருவ வயதை அடைந்தவுடன் எப்படி ஆணாக மாறுகிறார்கள் என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொள்கிறார் ஜூலியானா.

அதில் அங்கிருப்பவர்களுக்கு என்சைம் 5 அல்ஃபா ரெடுக்டேஸ் என்ற சத்து இல்லை என்று தெரியவருகிறது. இவை தான் டெஸ்ட்டோஸ்டிரோனை டிஹைட்ரோடெஸ்டோஸ்டிரோனாக மாற்றுகிறது. இந்த குறைபாடு இங்கிருக்கும் மக்களுக்கு மரபணு ரீதியாகவே தொடர்ந்து வருவதை கண்டுபிடித்தார்.

பருவ வயது :

பருவ வயது :

அதனால் தான் XY க்ரோமோசோமுடன் பிறக்கும் குழந்தைக்கு போதுமான அளவு ஹார்மோன் கிடைக்காததால் பிறக்கும் போது அதன் வளர்ச்சி இல்லாமல் இருக்கிறது. பார்ப்பவர்கள் ஆணுறுப்பு இல்லை என்றதும் பெண் குழந்தை என்று சொல்லிவிடுகிறார்கள்.

பருவ வயதினை அடையும் போது அவர்களது உடலில் கூடுதலாக டெஸ்டோஸ்டிரோன் சுரக்கும். இதன் போது ஆண் குழந்தைகளின் பருவமடைந்ததற்கான அடையாளங்களாக மீசை வளர்வது, குரல் உடைவது ஆகியவை அந்த நேரத்தில் ஆணுறுப்பு வளர்ச்சிக்கான ஹார்மோன் கிடைக்கப்பெற்று ஆணுறுப்பு வளர்ச்சி அடைகிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: baby insync pulse pregnancy hormone
English summary

Girls Are Turned into Boys without Surgery in This Village

Girls Are Turned into Boys without Surgery in This Village
Story first published: Monday, April 9, 2018, 15:11 [IST]
Desktop Bottom Promotion