Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
ஃபேஷன் என்ற பெயரில் அலங்கோலமாக போட்டோவில் சிக்கிய பெண்கள் # Funny Fashion Fails
ஃபேஷன் என்ற பெயரில் அலங்கோலமாக போட்டோவில் சிக்கிய பெண்கள் # Funny Fashion Fails
கேளிக்கை மற்றும் ஆடம்பரம் நிறைந்து ஒரு துறை உலகில் இருக்கிறது என்றால் கண்ணை மூடிக் கொண்டு கூறலாம் அது ஃபேஷன் உலகம் தான். சினிமாவில் கூட சண்டைக் காட்சிகள், நவரச ரியாக்ஷன், உயிரைக் கொடுத்து நடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இங்கே, நல்ல கற்பனை திறன் இருந்தால் மட்டுமே போதுமானது உலகை பல ரவுண்டுகள் வரலாம்.

பல நாடுகளை சேர்ந்த அழகான பெண்கள், கோடிகளை கொட்டித்தரும் சம்பளம், உலகின் பல நாடுகளில் ஃபேஷன் சுற்றுலா என்று ஏறத்தாழ உலகின் ஒரு குட்டி சொர்க்கபுரி இந்த ஃபேஷன் உலகம். என்ன தான் இப்படி வியந்து, பூரித்துப் பார்த்தாலும்.., இங்கேயும் சில குண்டக்க, மண்டக்க யோசிக்கும் ஆட்களும் இருக்கிறார்கள்.
வேடிக்கையாக குழந்தைகள் விரும்பும் படி டிசைன் செய்யலாம். ஆனால், நாம் செய்யும் டிசைன் வேடிக்கையாக எல்லாரும் நகைக்கும் படி அமைந்துவிடக் கூடாது. இங்கே சிலர் வடிவமைத்த உடைகள் மற்றும் சிலரது வேற லெவல் கற்பனைகள் ஃபேஷனை அலங்கோலம் ஆக்கியிருக்கிறது.

#1
Image Source: bemethis / Credit
ஒன்னு இது ஸ்க்ரீன் துணியா இருக்கணும், இல்ல இந்த பொண்ணு கிரேட் காளியோட WWE பேண்ட் பார்த்து இன்ஸ்பையர் ஆகி இந்த டிரெஸ்ஸ டிசைன் பண்ணி இருக்கணும்...

#2
Image Source: bemethis / Credit
புவி ஈர்ப்பு விசை கேள்விப்பட்டிருக்கோம்.. இதென்னப்பா புதுசா வேற ஏதோ விசையா இருக்கு... தெரியாத்தனமா அப்படிக்கா சிக்கிக்கிட்டாலே.. யாரும் பார்க்காத போது சரிப் பண்ண தான் நினைப்பாங்க.. அதையே டிசைனா பண்ணி வெச்சிருக்காரு இந்த டிசைனர்...

#3
Image Source: bemethis / Credit
அதே பயப்பக்கி தான் போல... யோகா பேண்ட்ல எதுக்குப்பா இந்த டிசைன்... பின்னாட்டி யோகா பண்றவன் மைண்ட் என்னத்துக்கு ஆகுறது...

#4
Image Source: bemethis / Credit
போறப்போக்க பார்த்தா இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல கோவணம் மாதிரி ஒரு சின்ன பீஸ் மட்டும் மாட்டி, பெல்ட் போட்டுட்டு அது தான் ஜீன்ஸ் பேண்ட்னு சொல்லுவாங்க போல...

#5
Image Source: bemethis / Credit
தனக்கு பிடிக்காதவங்க மூஞ்சிய இப்படி பிரிண்டட் லெக்கின்ஸ்ஸா போட்டுக்கலாம்.. இதுக்கு மேல ஒருத்தர அவமானப்படுத்திட முடியுமா என்ன?

#6
Image Source: bemethis / Credit
ஏம்பா ஏய்... இதெல்லாம் கல்யாணத்துக்கு மாட்டிக்கிட்டு போனா.. அந்த பொண்ணோட மானம், மரியாதையை என்னத்துக்கு ஆகுறது... இதெல்லாம் கிரியேட்டிவிட்டினு டிசைன் பண்ண ஒரு டிசைனர் வேற...

#7
Image Source: bemethis / Credit
Fun ஆ இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா.. பொம்ம போட்டா அது குழந்தைத்தனம் ஆயிடுமா.. இல்ல இத ஒரு குழந்தை போட்டுட்டு போனா மீம் கிரியேட்டர், ட்ரால் பண்றவங்க எல்லாம் சும்மாவா விடுவாங்க...

#8
Image Source: bemethis / Credit
தமிழன் படத்துல விஜய் ஷர்ட்டுகுள்ள ஷர்ட் போட்டுட்டு வர மாதிரி... இதென்னடா ஹீல்ஸ் ஸ்லிப்பர் ஹீல்ஸ்ல ஒரு ஹீல்ஸ்... ஹீல்ஸ்க்கே ஹீல்ஸா...

#9
Image Source: bemethis / Credit
மராத்தான் ஓடுறது மனசுக்கும், உடம்புக்கும் நல்லது தான். எல்லாம் சரி... பொண்ணுகளுக்கு டிசைன் பண்ண மராத்தான் ட்ரெஸ்ல இப்படியா லோகோ பிளேஸ் பண்ணுவாங்க.. வேற இடம் இல்ல வேற டிசைனே கிடைக்கலயா...

#10
Image Source: bemethis / Credit
அதாகப்பட்டது நீங்க எம்புட்டு உடம்பா இருந்தாலும் பரவால்ல... இந்த ட்ரெஸ் போட்டா ஸ்லிம்மா தான் தெரிவீங்க... என்ன ஒரு கண்டுபிடிப்பு...

#11
Image Source: bemethis / Credit
தாயி.. இது தான் ஆன்லைன்ல வாங்குற ட்ரெஸ் ஓட எக்ஸ்பெக்டேஷன், ரியாலிட்டி போல... எந்தவொரு டிசைனா இருந்தாலும் அது நமக்கு பொருந்துமான்னு பார்த்து வாங்கணும்... இல்ல, தெரியாம வாங்கிட்டாலும் கண்ணாடி முன்னாடி மணிக்கணக்கா நின்னு மேக்கப் பண்ணும் போது அந்த ட்ரெஸ் நமக்கு எப்படி இருக்குன்னாவது கொஞ்சம் ஏறெடுத்து பார்க்கணும்...

#12
Image Source: bemethis / Credit
பாவம் ஏழை வீட்டு பொண்ணு போல... அதன் பாதி, பாதியா வாங்கி ஒரு புது ட்ரவுசர் தெச்சு போட்டிருக்கு... ஃபேஷன்ங்கிற பேருல என்னெல்லாம் லூட்டி அடிக்கிறாங்க...

#13
Image Source: bemethis / Credit
அதே டிசைனரா தான் இருப்பான் போல... மறுக்கா, மறுக்கா அதே இடத்துல எதையாவது டிசைன்கிற பேர்ல தெச்சு வெச்சிருக்கான்...ஒருவேள துணி எக்ஸ்ட்ராவ இருக்குன்னு எங்க வைக்கிறதுன்னு தெரியாம தெச்சு வெச்சிருப்பானோ...

#14
Image Source: bemethis / Credit
இதென்னடா ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கு வந்த சோதனை... இதென்னமோ தற்செயலா நடந்த மாதிரி இல்ல... எவனோ ரூம்போட்டு யோசிச்சு இப்படி வேணும்னே டிசைன் பண்ண மாதிரி இருக்கு...

#15
Image Source: bemethis / Credit
இந்த மினியான் ஃபேன்ஸ அடிச்சு விரட்டனும்... இன்னும் எது, எதுல எல்லாம் இவங்க மினியான கொண்டு வருவாங்களோ... யப்பா... மினியான் வெச்சு பிகினி பண்ணது தப்பு இல்ல.. நீ பண்ண டிசைன் தான் தப்பு...

#16
Image Source: bemethis / Credit
அடங்கப்பத்தா.... அவங்க ஊருல அன்னாசிப்பழத்துக்கு வாட்டர் மெலன்னா பேரு வெச்சிருக்காங்க... இங்க்லீஷ் காரன்னுக்கே இங்க்லீஷ் தெரியலையா...

#17
Image Source: bemethis / Credit
எவேன்ஜர் தயாரிப்பாளர் பார்த்தா தூக்குல தொங்கிடுவார்... இல்ல, இல்ல.. இந்த டிசைன் பண்ணவன தூக்குல தொங்கவிட்டுடுவார்...

#18
Image Source: bemethis / Credit
எப்பவுமே நம்ம போலி பயலுக ஒரு சர்வதேச பிராண்டு பொருள காப்பி அடிக்கும் போது ஸ்பெல்லிங்ல சின்ன திருத்தம் பண்ணிக்கிவாங்க.. உதாரணமா Jockeyன்னா அத Jookey அப்படின்னு போட்டுக்குவாங்க... அர்த்தம் இல்லாட்டியும் பரவாலன்னு இத எல்லாம் விட்டுடலாம். ஆனா, இங்க ஒரு பக்கி Dickiesங்கிற சாக்ஸ்க்கு Dicklessனு ஸ்பெல்லிங் மாத்தி வெச்சிருக்கான். அடேய்.. இத எப்படி டா ஒரு ஆம்பள போட்டுட்டு போக முடியும்....

#19
Image Source: bemethis / Credit
உங்க திரு வாக்கியம் எல்லாம் ஒகே.. ஆன அத பசங்க டீ-ஷர்ட்க்கு இல்ல பிரிண்ட் பண்ணனும்... பொண்ணுக டீ-ஷர்ட்க்கு போட்டா... பசங்க அந்த பொண்ண விரட்ட தான செய்வாங்க... ப்ளடி ஃபூல்....

#20
Image Source: bemethis / Credit
பாட்டிம்மா.. எனக்கென்னமோ உங்க ஹஸ்பெண்டு வேணும்னே உங்களுக்கு ந்த ட்ரெஸ் வாங்கி கொடுத்த மாதிரி தெரியுது... கல்யாணம் பண்ணதுல இருந்து மனிஷன் ஏதோ தீராத பகை வெச்சிருபார் போல...



Click it and Unblock the Notifications











