Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
ஜாதகத்துல மொத்தமே இந்த 4 வகைதானாம்... அதுல நீங்க எதுல பிறந்தீங்கன்னு தெரிஞ்சிக்கோங்க...
இங்கே ஜாதகங்கள் பற்றியும் அவற்றின் மொத்த வகைகளும் பற்றி இங்கே விவாதித்துள்ளோம்.
ஜாதகம், ஜாதகம் என்று சொல்கிறோமே அப்படியென்றால், என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? இதோ அதைப்பற்றித் தான் பார்க்கப் போகிறோம். ஜாதகம் என்பது நீங்கள் பயப்படுவது போலெல்லாம் எதுவும் இல்லங்க.

ஜாதகம் என்பது நாம் பிளக்கின்ற அந்த நொடியில், ஒன்பது கிரகங்களும் எந்த மாதிரியான கோணங்களில் எந்தெந்த ராசிக்கான வீட்டில் இருக்கிறது என்பதை வரைபடமாக நமக்கு வரைந்து காட்டுவது தான் ஜோதிடம்.

ஜாதகம்
ஜாதகம், கிரகங்கள் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றில் மிக கவனமாக கணிக்க வேண்டும். 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் மற்றும் 9 கிரகங்கள் ஆகியவற்றுடைய நிலைகள், அவை என்ன நெயல்பாட்டில் இயங்குகின்றன, ஒவ்வொரு கிரகங்களும் எப்படி, எவ்வளவு நேரத்தில் நகர்கின்றன ஆகியவற்றறைக் கணிப்பது தான் முக்கியம்.

பஞ்சாங்கம்
ஜாதகம் என்பது யார் வேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் எழுதிவிட முடியுமா என்ன? ஏதோ ஒரு வருடத்தில் ஏதோ ஒரு நேரத்தில் பிறந்தவருக்கு ஜோதிடர் எப்படி ஜாதகம் எழுத முடியும். அப்படி ஜாதகம் எழுதுவதற்கு மிக முக்கியமான ஒரு விஷயம் பஞ்சாங்கம். பஞ்சாங்கம் தான் ஜாதகம் எழுதுவதற்கான மிக முக்கியமான விஷயம்.

ஜாதக வகைகள்
ஜாதகம் என்பது இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வேறு வுறு தான் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஜாதகங்களும் மொத்தமே நான்கு வகைகள் தான். அந்த நான்கு வகைகளில் ஏதாவது ஒன்றாகத் தான் நம் ஒவ்வொருவருடைய ஜாதகமும் இருக்கும். அதைப்பற்றி இங்கே பார்ப்போம்.

நான்கு வகை ஜாதகம்
ஜோதிடத்தினில் மனிதன் இந்த நான்கு வகைகளில் ஏதாவது ஒன்றில் தான் பிறக்க முடியும். அது அவனுடைய கடைசி காலம் வரையிலும் தொடர்ந்து கொண்டே இருக்கும். யாராக இருந்தாலும் எந்தவிதமான பரிகாரத்தாலும் உங்களுடைய ஜாதக வகையை மாற்றிவிட முடியாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த நான்கு வகை என்னென்ன தெரியுமா? இதோ...
தர்ம ஜாதகம்
தன ஜாதகம்
காம ஜாதகம்
ஞான ஜாதகம்
என்பவை தான் அந்த நான்கு. அவற்றைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

தர்ம ஜாதகம்
ஒருவருடைய பிறப்பு வரைபடக் கட்டத்தில் 1 ஆம் எண் வீடு, 5 ஆம் எண் வீடு, 9 ஆம் எண் வீடு ஆகியவற்றை மிகச் சிறப்பாகக் கொண்ட ஜாதகமாக இருக்கும்.
இந்த ஜாதக அமைப்பில் பிறந்தவர்கள் தான் உலகில் மிகவும் பேரும் புகழும் கிடைக்கப் பெறுவார்கள். நிறைய தர்ம காரியங்கள் செய்வார்கள். கோவில் திருப்பணிகள் போன்றவற்றை மிக அதிகமாக செய்ய முயற்சி செய்வார்கள். பள்ளிக்கூடங்க்ள கட்டுதல் போன்ற பொது தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகமாக இருப்பார்கள். எப்போதும் சமூகம் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கியிருப்பார்கள். இந்த உலகை விட்டு பிரிந்த பின்பும், அவர்களுடைய புகழ் இந்த உலகில் இருக்கும். தர்ம ஜாதகத்தில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.

தன ஜாதகம்
இரண்டாவது வகையான தன ஜாதகத்தில் பிறந்தவர்களுடைய பிறப்பு வரைபடக் கூட்டத்தில், இரண்டாம் வீடு, ஆறாம் வீடும், பத்தாம் வீடும் மிகச் சிறப்பாக கொண்ட ஜாதகம் தான் தன ஜாதகம் உடையவர்கள்.
இந்த ஜாதக அமைப்பில் பிறந்தவர்கள் தான் வாழ்நாளில் மிக அதிகமாக பணம் சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள். பணம் சேர்கின்ற ஆற்றல் இவர்களுக்கு நிகராக வேறு யாராலும் பணம் பற்றி புரிதல் உடையவராக இருக்காது. ஆனால் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை தான் அனுபவிக்கவோ முடியாது. அல்லது அதற்கான எண்ணமும் அவர்களுக்குத் தோன்றாது.

காம ஜாதகம்
ஜாதகத்தில் மூன்றாவது வகையான ஜாதகக் கட்டத்தில் பிறந்தவர்கள், தங்களுடைய பிறப்பு வரைபட ஜாதக்க கட்டங்கள் மூன்றாம் எண் வீட்டிலும், ஏழாத் எண் வீட்டிலும் பதினோறாம் வீட்டிலும் மிகச் சிறப்பாக இருக்கும். இத்தகைய அமைப்பு ஜாதகம் இருப்பவர்களைத் தான் காம ஜாதகம் என்று அழைப்பார்கள்.
இந்த ஜாதகத்தில் பிறந்தவன் தான் பணம் இருக்கிறதோ இல்லையோ என எதைப்பற்றியும் கவலைப்படாத, உலகத்தில் அனுபவிப்பதற்காகவே பிறந்தவராக இருப்பார்கள். இந்த ஜாதகத்தில் பிறந்தவர்கள், தான் சம்பாதித்த பணமோ, தந்தையின் சொத்தோ, மனைவியின் வழியில் வந்த பணமோ, நண்பர்களுடைய பணமோ என எதையும் பார்க்காமல், தனக்கு என்ன தோன்றுகிறதோ அந்த மாதிரி மிக அலட்சியமாக செலவு செய்து முடிப்பவராக இருப்பார்கள். தங்களுடைய வாழ்க்கையில், சிற்றின்பங்கள், பேரின்பங்கள் என எல்லாவற்றையும் அனுபவித்துச் செல்லக்கூடியவராக இருப்பவர்கள் இந்த காம ஜாதகக்காரர்களாக இருப்பார்கள்.

ஞான ஜாதகம்
ஜாதகத்தில் கடைசியும் நான்காவதுமான வகைதான் இது. இந்த வகையான ஜாதகக் கட்டத்தில் பிறந்தவர்கள், தங்களுடைய பிறப்பு வரைபட ஜாதக்க கட்டத்தில், நான்காம் எண் வீட்டிலும், எட்டாம் எண் வீட்டிலும் பனிரெண்டாம் வீட்டிலும் மிகச் சிறப்பாக இருக்கும். இத்தகைய அமைப்பு ஜாதகம் இருப்பவர்களைத் தான் ஞான ஜாதகம் என்று அழைப்பார்கள்.
இந்த ஜாதகக் கட்டத்தில் மிகப் பிறந்தவர்கள் மிகவும் பாடாய் பட்டுவிடுவார்கள். அதாவது இந்த ஜாதகத்தில் விரய ஸ்தானம் மிகுதி. வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் இழந்து விட்டு, எல்லாவிதமான கஷ்டங்களையும் அனுபவிக்கச் செய்வார்கள். தன்னுடைய சொத்து மற்றும் பணத்தையல்லாம் பறிகொடுத்து விடுவார்கள் அல்லது யாரிடமாவது ஏமாந்து போய்விடுவார்கள்.
வாழ்க்கையில் எல்லா அடிகளும் பட்டு, வாழ்க்கையின் நடுப்பகுதியிலோ அல்லது வாழ்வின் இறுதியிலோ ஞானியாகி மாறி, இந்த உலகமே மாயம் என்று தத்துவங்கள் சொல்லும் அளவுக்கு ஆகிவிடுவார்கள்.
இப்படி ஏதாவது ஒரு அமைப்புக்குள் தான் நாம் எல்லோருமே பிறந்திருப்போம்.



Click it and Unblock the Notifications
